தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ்..!

  • by
spread of corona virus in tamilnadu

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இந்தியாவில் கிட்டத்தட்ட 12 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை 1965 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிதுள்ளார்கள். இதில் இன்று வரை 1764 பெயர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவாத சூழலில், நேற்று ஒரு தினம் மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸினால் பாதித்துள்ளார்கள்.

பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அதாவது டெல்லியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏன்என்றால் இதில் இருந்தா ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மக்கள் அனைவரையும் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்யுமாறு பீல ராஜேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க – கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த 91 வயது முதியவர்..!

தானாக முன்வந்த மக்கள்

இந்த பேட்டியின் தாக்கத்தினால் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைத்தார்கள். இதன் மூலமாக தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மட்டும் புதிதாக இந்த வைரஸ் மூலமாக பதித்துள்ளார்கள். கொரோனா தற்போது பரவிவரும் சூழ்நிலையில் இதுபோன்ற பொதுக் கூட்டங்களை நடத்த கூடாது என்று இந்திய அரசாங்கம் கேட்டுள்ளது, இதையும் மீறி இது போன்ற செயல்கள் இந்தியாவில் நடந்திருக்கிறது என்றால் இதற்குப் பின்னால் நிச்சயம் ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டின் நிலை

கொரோனா பாதிப்பில் தமிழகம் இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 234 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதித்து உள்ளார்கள். மகாராஷ்டிரா மற்றும் கேரளாக்கு அடுத்த படியாக கொரோனா வைரஸின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் இன்று வரை ஒரே ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

பரிசோதனைகள்

இந்த டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் ஆயிரத்தி 100 பேர்களில் கிட்டத்தட்ட 650 பேர்கலை முழுமையாக பரிசோதனை செய்து விட்டார்கள். மிதம் உள்ளவர்களை இன்று பரிசோதனை செய்வார்கள். இதன் பின் தான் இன்னும் எத்தனை பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதித்துள்ளார்கள் என்று. கடந்த சில வாரங்களாகவே சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தில் இருக்கும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து தமிழக முழுக்க இருக்கும் மாவட்டங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைகளை செய்து வருகிறார்கள். இதன் மூலமாக நாம் செய்யப்படும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தவிர்த்து சந்தேகத்திற்கு உட்பட்டவர்களை நாம் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து வருகிறோம்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் பிணத்தை எப்படி கையாள்வது..!

இன்னும் ஒரு சில நாட்களில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே  ஏப்ரல் 15க்குள் யாரும் வெளிவராமல் இருந்தால் இந்த கொரோனா வைரஸ் முழுமையாக நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன