தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அன்பை பரிமாறுங்கள்..!

  • by
spread love to people during this quarantine

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை மாநில சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படித்தி வருகிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 14 முதல் 30 நாட்கள் வரை கண்காணிப்பில் வைத்து அவர்களை பரிசோதித்து வருகிறார்கள். கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சை அளிக்கிறார்கள். இச்சமயத்தில் வீட்டில் தனிமையாக இருக்கும் நோயாளிகளை வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தனிமை படுத்தியவர்கள்

வெளிமாநிலங்களில் இருந்து வீட்டுக்கு வந்தவர்கள், சுற்றுலா சென்றவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்கள் வீடு திரும்பிய உடன் அவர்களை சுகாதாரத் துறையினர் வீட்டிலேயே தனிமைப் படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இல்லை எனில் அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சொல்கிறார்கள். இது போன்ற சூழல்களில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மனநிலை மிக மோசமான நிலைக்கு செல்கிறது. இவர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் அன்பும் அரவணைப்பும் அளித்து அவர்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – ஊரடங்காள் அதிகரிக்கும் நெட்பிளிக்ஸ் வாழ்க்கை..!

அன்பும் அரவணைப்பும்

உங்கள் வீட்டில் இதுபோல் யாரேனும் தனிமைப்படுத்தி இருந்தால், அவர்கள் உங்களை நெருங்காமல் அவர்களுடன் உரையாடலாம். அதைத் தவிர்த்து மிகப் பாதுகாப்பான முறையில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம். இது போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை மோசமான நிலைக்கு சென்றிருக்கும், இதனால் அவர்கள் கோபப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதை நன்கு அறிந்து அவர்களிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அன்பை மட்டுமே வெளிக்காட்ட வேண்டும்.

சகிப்புத்தன்மை அவசியம்

வீட்டில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துப் பேசிக் கொள்வதன் மூலமாக அவர்களுக்கு சலிப்புத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் மனநிலை மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் நிகழும், இதுபோன்று சமயங்களில் முதிர்ச்சியாக செயல்பட வேண்டும். அதே போல் ஒருவர் கோபப்பட்டாலும் மற்றொருவர் அந்த கோபத்திற்கான காரணத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கேற்ற அன்பான வார்த்தைகளை பரிமாற வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்த பட்டவர்களின் பேச்சில் கோபம் தென்படும், இது போன்ற சூழல்களில் சகிப்புத் தன்மையை அதிகரித்து அவர்களுக்கு சரியான அறிவுரை வழங்குங்கள்.

மேலும் படிக்க – மனித நேயம் மறைந்து விட்டதா..!

நேர்மறை எண்ணங்கள்

உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டாலும் முடிந்தவரை நேர்மறை எண்ணங்களை வெளியிடுங்கள். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் மனநிலை மீண்டும் புத்துணர்ச்சி பெற்று நல்ல நிலைக்கு திரும்பலாம். அதேபோல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு போதிய ஊக்கத்தை அளியுங்கள். அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை பற்றி தெரிய படுத்துங்கள், அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்யத் தூண்டும். கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஒருவேளை தென்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை தெளிவாக எடுத்துக் கூறுங்கள். இதனால் அவர்களின் பயம் விலகி எல்லாவற்றுக்கும் தயாராக இருப்பார்கள்.

நம் எவ்வளவு அன்பை வெளிக்காட்டுகிறோமோ அவ்வளவு நன்மை நமக்குள் நடக்கும். எனவே வீட்டில் உள்ளவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு இதுபோன்ற அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் அன்பைப் பரிமாறுகிறேம் என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை தொடுவதோ அல்லது அவர்களுடன் நெருக்கமாக இருப்பதையோ தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை பாதிக்கப்பட்டவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இதனால் தனிமைப்படுத்தப்பட்டவரின் மனநிலை மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களின் மனோநிலை சீராகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன