எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

  • by

ஒரு கதை சொல்லட்டுமா:

பழம்பெரும் குடும்பத்தில் பிறந்தவள் இவள், அதிக  பழமையும், புதுமையும் குறைவான பகுத்தறிவும் ஆட்கொண்ட பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவள். தனக்கு  நிகராக அனைவரையும் மதிக்க கற்றுக் கொண்டவள். அனைவரின் நலன் விரும்பி, இயற்கையின் காதலி, இல்லத்தின் இனிய இளவரசி,   தவறு என்றால் தலைவனங்கி மன்னிப்பு கேட்பாள், இல்லையெனில் இவள் கொஞ்சம் ராட்சசிதான். சிறு வயது முதல் சீறும் குணம் தன்னை சீர்ப்படுத்தியது எல்லாம்   அன்பு அப்பா, அறிவு தரும் ஆசான், பள்ளியில் இத்துடுக்கு தனமானது, பதின்பருவம் முழுவதும் படர்ந்த அமைதி ஆனால் ஏழாம் வகுப்பில் முதல் மைக் மோகன் ஆக இருப்பாள்.  வளரும் பருவத்தில் வந்த காதலுக்கு வழியில்லை ஆனால், வாழ்வில் அன்பென்னும் ஒரு பதம் அறிந்தவள் இவள் ஆளை மிஞ்சும் பேச்சு, அடங்காத கோபம் கொண்ட தாரகையவள். 

அவளையும் வென்ற வீரமகன், மனித மாண்பு கொண்ட ஒரு இதயம் அது, அன்புக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்து அவளை வென்றது. அந்த இதயத்தை அவளால் மட்டும்தான் உணர முடியும் என்பதை அறிந்தால், ஆயிரம் இன்னல் பல கடந்து காதலனை கரம் பிடித்தாள், கனவை நிறைவேற்றி நிறைவுடன் வாழ்ந்தாள். உறவுகளுன் உலகில் ஆற்றள் மிக்க ஒரு சக்தியாக பரிணமித்து அன்பு என்ற மாண்பு கொண்டு அமைதியைப் பரப்பி அவளின் அவருடன் இனிதே இல்லறம் நடத்தி இனிதாய் விடைபெற்றாள். அவளின் இறுதி மூச்சில் இருந்த காதல் கணவருக்கும், அவளை உருவாக்கிய அனைவருக்கும் பகிர்ந்து சென்றாள்.

மேலும் படிக்க: அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

 காதலில் கற்றது: 

நல்லது கெட்டது  அறிந்து வராது காதல்,  நான் அறிந்த காதலும் அது ஒன்றே, எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி உன்னால் ஒருவரை நேசிக்க முடியும் என்றால்  நீதான் உலகத்தின் சிறந்த காதலர்களில் ஒன்றாவாய் என்பதை எங்கோ கற்றது காதலில் சத்தமில்லாத உணர்வுகள் சதுரங்கம் வேட்டையாடும். அது இதயத்தை கூறு போடும்.  எதையும் இலக்க தயாராகும். அப்படி ஒரு காதல் உங்களுக்குள் இருக்கா அப்ப நீங்கள்தான் காதலின் தவபுதல்வி/புதல்வன்

காதல் வகைகள்: 

இமைகளில்  இது பிறக்கும் இதயத்தில் குடிகொள்ளும் இந்த பரந்த  பூமியை பதம் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தது. காதல் இது உலகை வெல்லும் உன்னத ஆயுதம் ஆகும். பத்துமாதம் சுமந்த நம்மை ஈன்றவளை இனிதாய் நன்றி செலுத்துவோம். உன்னை பார்த்து பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்த்த அண்ணன் தம்பிகளுடனான காதல்   உன்னதமானது. உடன் பிறக்கா பந்தமாக இருக்கட்டும் ஆனால் சொல்ல முடியாத அன்பை தரும் உடன் பிறவா மண்ணின் மைந்தர்களுடனான சகோதர்களுடனான் காதல் என்றும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அண்ணனாகவும், தம்பியாகவும் இல்லாமல் அறிவாக உன்னை அனுகும் உன்னத  நட்பாய் உன்னுடன் பயணிக்கும் அந்த பாதுகாப்பும் ஒரு வகை அன்புதான். உலகம் ஒரு கூரையின் கீழ் எதற்கு இந்த வாதம், பிரதி வாதம், வாழ்வோம் அன்பென்னும் ஆயுதத்துடன் ஓர் கூரையில் இணைந்து வாழ்வோம். 

ஒருவரையொருவர் ஒத்த நட்பு பரஸ்பர மனிதாபிமானம், பரந்த  பொறுமை இவையெல்லாம் காதலின் சாரல் உன்னை வெல்லும் ஒரு சக்தி ஒன்று உண்டெனில் அது இந்த காதல்தான், அதனை விட பெரியது ஒன்றுமில்லை. 

மேலும் படிக்க: நான் அறிந்த உலகத்தின் உத்தம காதலன்!

 உண்மைக் காதல்: 

இது எதிர்பார்ப்புகள் அற்றது.  இமைகளில் மட்டுமே இதன் தொடக்கம் இருக்கும். இச்சைகளை கடந்து நிற்கும் இந்த  காதல் இது இல்லறத்திற்கு துணையாய் இருக்கும். இது வல்லமை நிறைந்த ஒரு உணர்வு இதனை  மனித மாண்புடன் கையாளும் பொழுது அந்த காதல் விண்ணையும் மண்ணையும் வெல்லும் ஆற்றல் மிக்க சக்தியாக உள்ளது. 

மேலும் படிக்க: காதலர் தினத்திற்கான ட்ரெண்டிங் பரிசுப் பொருட்கள்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன