விவாகரத்துக்கான வசீகர மந்திரம்..!

  • by
spiritual mantra to avoid divorce

ஆண் பெண் உறவில் பிரச்சினை என்பது அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும், அதிலும் திருமணமான பிறகு இவர்கள் பிரச்சினைகளுக்கு இடையே வாழக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் ஆண் அல்லது பெண் பிரிதல் அதாவது விவாகரத்து சம்பந்தமான எண்ணங்கள் இவர்களுக்குள் உண்டாகும். எந்த உறவுக்குள் பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு பிரிவு என்பது தீர்வாகாது, ஒருமுறை நாம் செய்யக்கூடிய இந்த செயலின் பின்விளைவுகள் உங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்கும்.

எதற்கு வசீகர மந்திரம்

ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் பிரச்சினைகளை மறந்து மீண்டும் மகிழ்ச்சியாக வாழ தூண்ட உதவுவதே இந்த வசீகர மந்திரம். கணவன் மற்றும் மனைவி இருவரின் பிரிவினால் பாதிக்கப்படுவது இருவர் மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி உள்ள குடும்பமும் மற்றும் அவர்களுக்கு பிறந்த குழந்தையும் தான். இதை கருத்தில் கொண்டு ஆண் பெண் முடிந்தவரை ஒன்றாக வாழ நினைக்கிறார்கள். இருந்தும் அது முடியாமல் போகும் சூழ்நிலையில் விவாகரத்தை நாடுகிறார்கள். இந்த பிரச்சனையை விவாகரத்தில் முடிப்பதற்கு முன்பே ஒருமுறை இந்த வசீகர மந்திரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

வசீகர மந்திரம்

“ஓம் ஏம் நம” என்ற வசீகர மந்திரத்தை நாம் காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனையும் மற்றும் சித்தரையும் மானசீகமாக மனதில் நினைத்து வடக்கு திசையை பார்த்தவாறு 1008 முறை ஒலிக்க வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும், அச்சமயங்களில் நாம் எந்த ஒரு தீய வேலைகளிலும் ஈடுபட கூடாது. இதை செய்வதின் மூலமாக நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும், அது போல் கணவன் மனைவி போன்றவர்களுக்கு இடையே இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

மேலும் படிக்க – ஜாதகத்தில் இருக்கும் தோஷம் மற்றும் தீர்வு..!

வசீகரம் என்றால் என்ன

ஆண் பெண் உறவுகளுக்கு இடையே எப்போது ஈர்ப்பு குறைகிறதோ அப்போதிலிருந்து அவர்களுக்குள் பிரச்சனைகள் உண்டாகிறது. இதை தடுப்பதற்காக நாம் சீக்கிரம் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம், இதன் மூலமாக வசீகரமே இல்லாத ஆண் கூட வசீகரமான தோற்றத்தை பெற முடியும். இதனால் உங்கள் தோற்றம் மாறுகிறது என்பதற்கான அர்த்தம் அல்ல அவரின் புன்னகை, பார்வை மற்றும் பேசும் பண்பு போன்ற அனைத்திலும் மாறுபாடு உண்டாகும், இது மற்றவர்களை ஈர்க்க உதவும். இதனால் கணவன் மற்றும் மனைவிகளுக்கு இடையே ஒரு வகையான ஈர்ப்பு உண்டாகி அன்பு, பாசம், இல்லற வாழ்க்கையில் எல்லாவித பரிமாற்றங்களும் உண்டாகும்.

நம் வாழும் ஒரு வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளை கொண்டு செல்லாமல் அதை ஆரம்பத்திலேயே அழிக்கும் தன்மையை அளிப்பது தான் இந்த வசீகர மந்திரம். எனவே உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், இதனால் ஏற்படும் நன்மைகளை சிறந்த ஜோதிடர் களிடையே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன