ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படும் உப்பின் பயன்கள்..!

  • by
spiritual benefits of using salt

உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று தமிழ் பழமொழி இருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உப்பினால் நம்முடைய உணவுப் பிரச்சினை மற்றும் வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் போக்க முடியும்.

மூட்டு பிரச்சனையை தடுக்கும்

உப்பை சூடு ஏற்றி துணியில் கட்டி மூட்டுகளிலும் ஒத்தடம் கொடுப்பதன் மூலமாக உங்கள் மூட்டு வலி அனைத்தும் விலகும். இதைத் தவிர்த்து உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழித்து உங்களை பாதுகாக்கும்.

மேலும் படிக்க – தோட்டங்களை உருவாக்கி உங்கள் சமுதாயத்தை அழகாக்குங்கள்..!

கண் பார்வைக்கு உதவும்

உங்கள் கண்கள் எப்போதும் சோர்வாக காணப் பட்டால் உப்பை கொதிக்க வைத்து அந்த நீரின் மூலமாக உங்கள் கண்களில் மென்மையாக ஒத்தடம் கொடுங்கள். இதன் மூலமாக உங்கள் கண்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று உங்கள் பார்வையை அழகாக்கும்.

வெள்ளிப் பாத்திரங்களை அழகாக்கும்

வெள்ளிப் பாத்திரங்கள் ஒரு சில நாட்களில் கருப்பாக மாறிவிடும் அதை மீண்டும் புதுப்பிப்பதற்கு நாம் உப்பை பயன்படுத்தலாம். அதே போல் உங்கள் துணியில் இருக்கும் வேர்வை மற்றும் துணிகள் மேல் உள்ள கரைகளை கூட உப்பைப் பயன்படுத்தி அகற்ற முடியும்.

தேனிகடிக்கு தீர்வு

உங்களை தேனீக்கள் ஏதாவது கொட்டி விட்டால் அந்த இடத்தில் உள்ள கொடுக்கை நீக்கி விட்டு, உப்பை தண்ணீர் கலந்து அந்த இடத்தில் தேய்க்க வேண்டும். இதன் மூலமாக வீக்கம் மற்றும் வலிகள் குறையும். இதே செயலை மற்ற எந்த ஒரு பூச்சிகள் கடித்தாலும் செய்யலாம்.

மேலும் படிக்க – வாழ்விற்கு வெற்றியை தரும் ஐந்து மந்திரங்கள்

பற்களை வெண்மையாக்கும்

உப்புடன், பேக்கிங் சோடாவை ஒன்றாக சேர்த்து பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாகும். அதைத் தவிர்த்து உறுதியுடன் ஈறுகளையும் வலிமையாக்க உப்பு அதிகமாக பயன்படுகிறது. எனவே நீங்கள் காலையில் வெறுமனே உப்பை கொண்டு பல் தேய்க்கலாம்.

பழங்களை பாதுகாக்கும்

ஆப்பிள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவைகளை துண்டித்து வைத்தால் அதன் நிறம் மாறிவிடும். இதைத் தடுப்பதற்கு சிறிது உப்பு நீரை அதன் மேல் தெளித்தால் போதும்.

வீட்டை சுத்தப்படுத்தலாம்

அயன் பாக்ஸில் உள்ள காவி நிற கறைகளை நாம் உப்பை பயன்படுத்தி போக்க முடியும். அதற்கு ஒரு பேப்பரில் உப்பைக் கொட்டி அயன் செய்தால் போதும். அதே போல் உங்கள் குளிர்சாதனப் பெட்டியை சுத்தப்படுத்த மற்றும் மற்ற பொருட்களை சுத்தப்படுத்த நீங்கள் உப்பை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – கர்ம யோகம் என்றால் என்ன..!

தீய சக்திகளை விரட்டும்

உப்பைத் துணியில் கட்டி உங்கள் வீட்டு வாசலில் தொங்க விட்டால் வீட்டிற்குள் எந்த ஒரு தீய சக்திகளும் நுழையாது. இதைத் தவிர்த்து உங்கள் குடும்பத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரித்து எதிர்மறை சக்திகளை விரட்டும்.

எல்லாவிதமான பயன்களையும் தரும் உப்பை நாம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் இதுபோன்ற செயல்களை செய்து உங்கள் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன