பவுர்ணமி வழிபாடினாள் கிடைக்கும் நன்மைகள்..!

  • by
spiritual benefits of pournami worshiping

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருநாள் வரும். இந்த நாளில் நாம் அம்மனுக்கு நெய் வேதியும், மற்றும் அபிஷேகம் போன்றவைகளை செய்து பலகாரங்களையும் படைத்து வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன.

மோட்சம் கிடைக்கும் நாள்

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று நாம் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு மோட்சம் கிடைக்கும். இந்நாளில் எமதர்மனின் கணக்காளர் சித்திரகுப்தன் பிறந்தார் எனவே இந்நாளில் விரதம் இருப்பதன் மூலமாக உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

மேலும் படிக்க – ஐயப்பன் தோன்றியதன் ரகசியம்!!!

வைகாசி பவுர்ணமி

முருகப்பெருமான் ஆறு முகத்துடன் அவதரித்த நாள் தான் இந்த வைகாசி பவுர்ணமி, இதை வைகாசி விசாகம் என்பார்கள், எனவே இந்த தினத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதன் மூலமாக உங்களுக்கு இன்பமான வாழ்க்கை அமையும்.

ஆனி மாத பௌர்ணமி

ஆனி மாத பௌர்ணமியன்று காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா நடைபெறும் எனவே இந்நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலமாக நமக்கு இறைவன் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும்.

ஆடி மாத பௌர்ணமி

இந்துக்கள் அதிகளவில் விரதமிருந்து வழிபாடு செய்யும் மாதம்தான் ஆடி மாதம், எனவே இந்த மாதத்தில் உண்டாகும் ஆடி பவுர்ணமி அன்றுதான் கஜேந்திர மோட்சம் நடந்தது. எனவே அன்றைய தினம் விரதமிருந்து அம்மன் ஆலயங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமாக பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும்.

மேலும் படிக்க – நாகா தீவை நோக்கிய பயணத்தில் வேதாளத்தின் கேள்வி!!!

ஆவணி மாத பௌர்ணமி

இன்றைய தினத்தில் நீங்கள் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். அதைப்போல் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. இந்த பௌர்ணமி தின நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் நன்மை கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன