அண்ணாமலையின் கிரிவலம் வந்தால் கிடைக்கும் பலன்கள்.!

spiritual and health benefits of doing girivalam in thiruvanamalai

கிரிவலம் என்ற உடனே நம் மனதிற்கு தோன்றும் இடம் திருவண்ணாமலை. கிரி வலத்திற்கு சிறப்புமிக்க ஒரு தளம் இந்த திருவண்ணாமலை இங்குதான் அதிகமான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் கிரி வலத்திற்கு வந்தடைகிறார் இது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவான மலை ஆகும்.

கிரிவலம் என்பது திருவண்ணாமலை கோவிலை நாம் முழுமையாக சுற்றி வருவதாகவும். இந்த மலையை சுற்ற தொடங்குவதற்கு முன் அஷ்டதிக் பாலகர்களின் கிழக்கு திசை அதிபதியான இந்திர லிங்கத்தை முதலில் வணங்க வேண்டும் பின்னர் கிரிவலப்பாதையில் உள்ள நந்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு மலையை சுற்றவேண்டும். இதற்கான காரணம் இவர்களின் மூலமாகத்தான் இந்த மலையை சுற்றுவதற்கான அனுமதியை ஈசன் தருகிறார். அதேபோல் நம் கிரிவலத்தை முடிக்கும்போது அருணாச்சலேஸ்வரரை வணங்கவேண்டும் இப்படி செய்வதன் மூலமாக தான் கிரிவலத்தை சுற்றிய பலன்கள் நமக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க – அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.!

கிரிவலம் சுற்றுவதற்கு என்று நேரம், காலம், இடம் தேவை இல்லை உங்களுக்கு தோன்றும் நேரங்கள் அல்லது சமயங்களில் ஏதாவது ஒரு பிரார்த்தனையை முன்னிறுத்தி கிரிவலம் சுற்றலாம். அதிலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் கிரிவலம் வருவதன் மூலம் நமக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும்.

கிரிவலம் வருவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. நீங்கள் நினைத்த போதெல்லாம் கிரி வலத்திற்கு வருவதை தவிர்த்து விட்டு ஒரு பிராத்தனையை முன்னிறுத்தி வருவது நல்லது. இது மட்டுமல்லாமல் இங்கு வந்த பின்பு நாம் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு அல்லது போட்டிபோட்டுக்கொண்டு கிரிவலத்தை சுற்றுவதை தவிர்த்து உங்கள் பிரார்த்தனையும் அல்லது இறைவனைப் பற்றி எண்ணிக் கொண்டு கிரிவலம் சுற்ற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே கிரிவலத்தின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க – அன்னதானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் கிரிவலத்தை முடித்தபின்பு, உங்கள் மனம் திருப்தி அடைந்திருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணத்தில் சிக்கல் உள்ளவர்களுக்கு உடனடியான திருமண யோகம் மற்றும் குடும்பத்தில் இருக்கும் சச்சரவு சண்டைகள் என எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இங்கு நாம் செய்யும் பிரார்த்தனை தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன