ஊரடங்கை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள்..!

  • by
spend this lockdown in a positive way

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸின் தாக்குதல் உலகம் முழுக்க பரவி ஏராளமான மனிதர்களை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடங்கிய சீனா நாட்டில் இருந்து படிப்படியாக இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், இந்தியா போன்ற ஏராளமான நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றினால் பாதிப்படைந்துள்ளார்கள்.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்திய அரசு ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலமாக மக்கள் அனைவரும் கவலை அடைந்தாலும் இந்த ஊரடங்கினால் நமக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள் அனைத்தும் குறையப் போகிறது என்பதுதான் உண்மை. உலகில் ஊரடங்கை சரிவர பின்தொடர நாடுகளில் இன்று பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இந்த தவறை இந்தியா செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த ஊரடங்கை மேலும் 18 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

மேலும் படிக்க – கேரளாவில் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தினார்கள்..!

எதிர்கொள்ளும் வழிகள்

ஊரடங்கை தமிழகத்தில் உள்ள மக்கள் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். இதன் மூலமாக இந்த நோய்த்தொற்று பரவுதல் குறையும், இல்லை எனில் இந்த தொற்று மேலும் வளர்ச்சி அடைந்து ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அனைத்து மக்களும் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அவரவர் வீட்டில் தனிமையாக இருக்க வேண்டும். இதை தவிர்த்து தேவையில்லாமல் வெளியே செல்வது மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்வது போன்ற செயல்களில் மூலமாக இந்த தொற்று மேலும் பரவும்.

மக்கள் பாதுகாப்பு

இதை முழுமையாகத் தவிர்ப்பது மக்களாகிய நம் கையில் இருக்கிறது. அடுத்த சில நாட்கள் இந்த வைரஸ் தொற்றின் வளர்ச்சி குறைந்தால் ஒரு சில கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார். எனவே நாம் இதை சரியாகப் பயன்படுத்தி வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். ஆனால் வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்தால் இந்த ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்படும். நாளுக்கு நாள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது எப்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வருகிறதோ அப்போதுதான் இந்த நோய் தொற்றிலிருந்து ஒரு முழுமையான விடிவு காலம் நமக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க – உடல் வலிமைக்கு திராட்சை மற்றும் உலர்ந்த திராட்சை உதவுகிறது..!

புத்துணர்ச்சியாக இருங்கள்

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தனிமையாக இருந்து வருகிறார்கள். இதன் மூலமாக இவர்களுக்கு மேலும் இரண்டு வாரங்கள் தனிமையாக இருப்பதில் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. எனவே உங்களை ஊக்கப்படுத்திக் கொண்டு உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து மேலும் சில நாட்கள் ஊரடங்கை பின் தொடருங்கள். உங்களுக்குப் பிடித்த செயல்களை செய்து உங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருங்கள், எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் பேசி பழகுங்கள், இதன் மூலமாக உங்களை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்.

எனவே, ஏராளமான மக்கள் குழப்பத்தில் தங்களால் முடிந்த பாதிப்புகளை சமுதாயத்திற்கு செய்துவருகிறார்கள். இது போல் இல்லாமல் தெளிவான மனநிலையுடன் பொறுப்பான குடிமகனாக நாம் நடந்து கொள்ள வேண்டும். சிறு சிறு செயல்கள் மூலமாக நாம் இந்த கொரோனா வைரஸை முழுமையாக அழிக்க முடியும், அதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உங்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன