தலை முடிப் பராமரிப்புக்கு ஹேர் பேக்..!

  • by
special pack for your hair care

மக்கள் அனைவரும் ஊரடங்கிள் இருப்பதினால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. இதனால் அழகு நிலையங்கள் அனைத்தும் முடங்கி உள்ளது. எனவே பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் கூந்தலை பராமரிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆண் மற்றும் பெண் இருவருக்கும் முடி உதிர்தல், முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி வருவது போன்ற பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதை வீட்டில் இருந்தபடி எளிமையான முறையில் எப்படி பராமரிக்கலாம் என்பதை காணலாம்.

பச்சைப்பயிறு கலவை

பச்சை பயிரில் இயற்கையாகவே ஏராளமான புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது. இதை தவிர்த்து கூந்தல் இடுக்குகளில் இருக்கும் பிஎச் அளவை சரி சமமாக வைப்பதற்கு பச்சை பயறு உதவுகிறது. எனவே இந்த ஹேர் மாஸ்க் செய்வதற்கு நமக்கு தேவைப்படுவது பச்சைபயிர், தயிர் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, கிரீன் டீ. இவை அனைத்தையும் வைத்து உங்கள் கூந்தலை பராமரிக்கலாம்.

மேலும் படிக்க – சருமத்தை பாதுகாக்க பூக்களை பயன்படுத்துங்கள்..!

ஹேர் பேக் கலவை

முதலில் பச்சை பயிரை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் தயிரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு கொட்டை எடுக்கப்பட்ட எலுமிச்சைசாறு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக தேவைப்படும் அளவிற்கு கிரீன் டீ நீரை ஊற்ற வேண்டும். அதை நன்கு குழைத்து உங்கள் கூந்தலில் முழுமையாக தேய்த்துக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் ஊறிய பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு உங்கள் கூந்தலை கழுவி மாற்றத்தை உணரலாம்.

சோப்பு காய்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோப்பு காயை வாங்கிக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், காலையில் அந்த சோப்பு கொட்டைகளுக்கு இடையே இருக்கும் கொட்டைகளை அகற்ற வேண்டும். பிறகு அந்த சோப்பு காயை நன்கு பிசைந்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அது நல்ல மையான பதத்திற்கு வந்த பிறகு ஒரு கப்பில் போட்டு வைத்துக் கொள்ளவும். இப்போது உங்கள் கூந்தல் முழுவதும் தேங்காய் எண்ணையை தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும், அதன் பிறகு கலக்கி வைத்த சோப்பு காயின் கலவையை கூந்தலில் நன்கு தேய்த்து 30 நிமிடங்கள் காயவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேங்காய் எண்ணையை இரவு தூங்குவதற்கு முன்பாக வைத்துக்கொண்டும் தூங்கலாம்.

மேலும் படிக்க – கோடை கால சருமப் பாதுகாப்பு அவசியம்

உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றார் போல் இந்த கலவைகளை பயன்படுத்தலாம். இது வறண்ட கூந்தல், எண்ணெய் கூந்தல் போன்ற அனைத்து கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். இது தவிர்த்து முடிகொட்டுதல், நரை முடி வளர்தல் போன்ற பிரச்சனையை தடுக்கும். இதைத் தவிர்த்து உங்கள் கூந்தலை நீளமாகவும் மற்றும் அடர்த்தியாகவும் வளர உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன