காவல்துறையினர்க்காக பிரத்தியேகமான மாஸ்க் மற்றும் உபகரணங்கள்..!

  • by
special masks for police officers

கொரோனா வைரஸ் இந்தியாவில் சமூக தொற்றாக பரவாமல் இருப்பதற்காக தினமும் அயராமல் உழைத்து தன்னுடைய முயற்சியினால் மக்களைக் கட்டுப்படுத்தி சாதித்தவர்கள் தான் காவல்துறையினர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பிரத்தியோக மாஸ்க் மற்றும் கையுறைகளை அளித்து வருகிறார்கள். அதேபோல் தினமும் விதவிதமான மக்களை சந்திக்கும் காவல்துறையினர்களுக்காக ஏராளமான பாதுகாப்பு உபகரணங்கள் நம்முடைய அரசாங்கம் அளித்துள்ளது.

மராத்திய மாநிலம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவிவரும் மாநிலங்களில் முதலில் இருப்பது மராத்திய மாநிலம். இங்கே கிட்டத்தட்ட 850 பேருக்கு மேல் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருந்தாலும் இந்த வைரஸை எதிர்கொள்வதற்காக ஏராளமான ஏற்பாடுகள் மும்பை மற்றும் மற்ற மிகப்பெரிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதிலும் தராவி அருகில் ஒரு தனியார் மருத்துவமனையை விலைக்கு வாங்கியுள்ளது மகாராஷ்டிரா. இதைத்தொடர்ந்து அங்கு பணிபுரியும் காவலர்களுக்கு முகமூடி மற்றும் ஹெல்மெட்களை வழங்கி வருகிறார்கள். இவர்கள் அணியப்படும் மாஸ் கிட்டத்தட்ட 99.9 சதவீதம் பாதுகாப்பானது, அதேபோல் இவர்கள் அணியப்படும் ஹெல்மெட்கள் காற்றின் மூலமாக பரவக்கூடிய கிருமிகளைத் தடுக்க வல்லது.

மேலும் படிக்க – கற்றாழை, வேப்பிலை மற்றும் மஞ்சள் கொரோனாவுக்கு எதிராக போராடும்..!

கேரளா மற்றும் தமிழகம்

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழகம். முதன்முதலில் கேரள மாநிலத்தில் தான் இந்த வைரஸ் தொற்று அதிகமாக இருந்தது, ஆனால் புதிதாக இந்த வைரஸ் தொற்று எந்த ஒரு நோயாளிகளுக்கும் பரவாததால் இந்த மாநிலம் இப்போது பாதுகாப்பான நிலையில் இருக்கிறது. இதை தவிர்த்து தமிழகத்தில் இந்த தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதினால் இது சமூக தொற்றாகாமல் இருப்பதற்காக காவல்துறையினர் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் இந்த தொற்று அதிகமாக பரவக்கூடிய இடங்களை மொத்தமாக முடக்கி உள்ளார்கள். ஆனால் இந்த தொற்றின் மூலமாக இவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அவர்களுக்கான பாதுகாப்பு கையுறைகள் மற்றும் முகமுடிகளை அளித்து வருகிறார்கள். அவர்களுக்கான தங்கும் இடங்கள் மற்றும் உணவுகள் என ஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

நாட்டின் பாதுகாப்பு

ஒரு நாடு செழிப்பாக இருப்பதற்கு காரணம் அந்த நாட்டில் செய்யப்படும் உற்பத்திகள் தான். ஆனால் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் இந்த உற்பத்திகள் குறைந்துள்ளது. இதை தவிர்த்து ஒரு நாட்டின் பாதுகாப்பு, அந்த நாட்டில் இருக்கும் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரை பொறுத்துதான் அமையும். எனவே தமிழகத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து மாநிலத்திலும் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தங்களால் முடிந்த சேவைகளை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உடைகள் மற்றும் கவசங்களை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – ஹோம்லியாக ஹோமியோ சிகிச்சை தரும் ஆசா லெனின்.!

காவல்துறையினருக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனைகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வதற்காக சிறந்த மருத்துவர்கள் என எல்லா ஏற்பாடுகளும் மத்திய அரசு முன்கூட்டியே ஏற்பாடு செய்துள்ளது. தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களை பாதுகாக்கும் எண்ணத்தில் உழைத்து வரும் இவர்களுக்கு மக்கள் நன்றிகளைத் தெரிவிப்பதற்க்கு பதிலாக அவர்களுக்கு ஒத்துழைத்து வீட்டிலேயே இருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன