தமிழர்களின் கல்வெட்டு களஞ்சியமாக விளங்கும் திருவெள்ளறை கோவிலின் சிறப்புகள் ….!

  • by
special features of thiruvellarai temple

பெருமாள் என்றதுமே நம் அனைவரும் அனைவரின் நினைவிலும் உடனே உதிப்பது திருப்பதியும், திருச்சி ஸ்ரீரங்கம் தான். இவை இரண்டிற்கும் நிகரான பெருமாளை சிறப்புடன் போற்றி நம்முன்னோர்கள் வழிபட்ட ஒரு கோவில் தான் திருவெள்ளறை. மற்ற கோவில்களைப் போல் தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்திற்கும் ஒரு சிறந்த சான்று தான் இந்த திருவெள்ளறை கோவில்.

திருவெள்ளறை கோவில் யாரால் கட்டப்பட்டது

பல்லவ  மன்னரான ஐந்தாம் தந்தி வர்மன் ஆல் கட்டப்பட்ட கோவில்தான் இந்த திருவெள்ளறை. இதைத்தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன், சோழர்களும், விஜயநகர மன்னர்களும், நாயர்களும் அவர்கள் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இக்கோவிலில் ஆக்கப்பூர்வமான பல செயல்களை செய்துள்ளார்கள் என்பதை அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். மதுராந்தகத்தில் உத்தம சோழ மன்னரால் இக்கோவில் பெரிய சுழி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் அக்கோவில் கல்வெட்டு களில் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியது அருள்மொழிவர்மன் என்ற உண்மை தெரியுமா!!!

திருவெள்ளறையின் தல புராண வரலாறு

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. சிபிச்சக்கரவர்த்திக்கு பெருமாள் ஸ்வேதவராகனாக  காட்சி அளித்ததால் இக்கோவிலுக்கு ஸ்வேதபிரிநாதன் கோவில் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. திரு என்பது முதன்மையான என்ற பொருளையும் வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளால் ஆனது என்பதையும் குறிக்கிறது அதாவது வெண்மையான பாறைகளால் ஆன கற்களைக் கொண்டு இக்கோவில் கட்டப்பட்டதால் இதற்கு திருவெள்ளறை எனவும் குறிப்பிடுகிறோம். தொன்மையான பல விஷயங்கள் இக்கோவிலில் புதைந்து கிடைக்கின்றன.

பூமி நாச்சியார், மார்க்கண்டேயன் இவர்களிருவரும் இக்கோவிலில் தியானம் புரிந்ததாகவும் அவர்களுக்கு பெருமாள் குன்றின் மேலிருந்து காட்சி அளித்ததால்

புண்டரீகாட்சன் என்ற பெயரில் இக்கோவில் இன்றளவும் அழைக்கப்படுகிறது. புண்டரீகாட்சன் என்பது செந்தாமரைக்கண்ணன் என்பதை குறிக்கிறது. 

திருவெள்ளறை  கோவில் பெருமாளும் மற்ற தெய்வங்களும்

கோவிலில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன .அவை உத்ரயன வாசல் மற்றும் தட்சனய வாசல். இவற்றில் தை மற்றும் ஆனி மாதத்தில் உத்ர யன வாசல் மூலமாகவும் ஆடி முதல் மார்கழி மாதம் வரை இந்த தட்சனய வாசல் வழியாகவும் நாம் பெருமாளை வழிபடலாம்.

கோவிலில் செந்தாமரைக்கண்ணன் கிழக்கு திசை நோக்கி நின்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார். தாயார் செண்பகவல்லி என்ற பங்கஜவல்லிக்கு சிறப்பான தனி இடமுண்டு .இக்கோவிலில் எப்பொழுதுமே முதல் பூஜை பங்கஜவல்லி தாயாருக்கு தான் அதன்பின்தான் செந்தாமரைக் கண்ணனான பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் சக்கரத்தாழ்வார், உடையவர் ,ஆண்டாள் இவர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

இன்னும் சிறப்பு ஸ்ரீதேவி, மூதேவி நீலாதேவி என்று என்ற மூன்று தேவியர்களும் சிறந்த திவ்ய தேசமாக இக்கோவில் விளங்குகிறது. இதில் ஸ்ரீதேவிக்கு தான் திருவெள்ளறை கோவிலில் முக்கிய இடம். இதைத்தவிர இவர்களுடன் சூரிய, சந்திரர்கள் ஆதிசேஷன் மனித வடிவில் காட்சியளிப்பது இக்கோவிலின் மற்றொரு தனித்துவமாக இருக்கிறது.

திருவெள்ளறை கோவிலின் பிரம்மாண்டமான 16 தூண்கள் மண்டபம் 

மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் சோழ நாட்டை கைப்பற்ற வரும்பொழுது காவேரி நகரில் உள்ள அனைத்து மண்டபங்களையும் இடித்துத் தகர்த்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கோவிலில் உள்ள 16 தூண்கள் உடைய மண்டபத்தை மட்டும் சுந்தரபாண்டியன் அழிக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் கரிகால சோழனை புகழ்ந்து பாடியதற்காக பட்டினப்பாலை பாடிய உருத்திர கண்ணனுக்கு பரிசாக அளிக்கப்பட்ட மண்டபம் தான் அந்த பதினாறுகால் மண்டபம். இந்த காரணத்தினால்தான் இதை சுந்தர பாண்டிய மன்னன் அழிக்கவில்லை என்று அங்குள்ள கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் 36 அடி உயரம் கொண்டு சுற்றிலும்

கோட்டை போன்ற மதில் சுவர் எழுப்பி கம்பீரமாக காட்சியளிக்கிறது திருவெள்ளறை பெருமாள் கோவில்.

குடைவரை கோவில்

பூமி நாச்சியாரும், மார்க்கண்டேயரும் தியானம் செய்வதற்கு ஒரு கல்லால் உருவான பாறையைக் குடைந்து அறைகளுடன் கூடிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் தான் செந்தாமரைக் கண்ணன் ஆகிய பெருமாள் எழுந்தருளியது என புராண வரலாறு கூறுகிறது.

புகழ்மிக்க திருவெள்ளறை ஸ்வஸ்தி கிணறு 

கோவிலிலிருந்து 10 அடி தள்ளி இருக்கும் இக்கிணறு தான் திருவெள்ளறையில் புகழ் மிக்கது. இதை பல்லவ மன்னனான தந்திவர்மன் தான் கட்டியிருக்கிறார். இதில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு கல்வெட்டுகளும் இக்கால வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கூறுவதாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.

கிணற்றில் வெவ்வேறு திசைகளில் நான்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன எந்த திசையில் கிணற்றிற்குள் இறங்கினாலும் இறுதியில் அவை நான்கும் சங்கமிப்பது ஒரே இடத்தில்தான். கிணற்றின் ஆழம் 50 அடி. தந்திவர்மனின் பட்டப் பெயரான மார்ப்பிடுகு என்ற பெயரை வைத்து இக்கிணற்றை மார்ப்பிடுகு பெருங்கிணறு என்றும் அழைக்கின்றனர். இக்கிணற்றில் இருக்கும் கல்வெட்டுகள் 1200 வருடங்கள் பழமையானது எனவும் ஸ்வதிக சிந்துசமவெளி குறியீட்டையும் அதிகமாக பெற்றிருக்கிறது. இக் கிணறுகளில் உள்ள சிறு தூண்களில் நுண்ணிய கலை நுட்பத்துடன் கண்ணைக் கவரும் சிறு சிறு சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதை சூரிய சந்திரனுடன் கூடிய பெருமாள் மற்றும் ஒரு யானை, தேவி கையில் குடம் ஏந்தி , குதிரையுடன் ஒரு வீரன்  இருப்பது போன்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க – நோய்களை குணமாக்கும் தன்வந்தரி மந்திரம்!

அவை ஒவ்வொன்றும் அளவில் சிறியதாகவும் மிகவும் நுட்பமாகவும் செதுக்கி இருப்பதுதான் நம் தமிழர்கள் கட்டடக்கலையில் தலைசிறந்து விளங்கினார்கள் என்பதை நமக்கு பறைசாற்றுகிறது.

இறுதியாக கோயிலை கைபற்றிய மன்னன் 

பல்வேறு மன்னர்களின்  படையெடுப்புகள் காரணமாக திருவெள்ளறை கோவில் இன்றுவரை ராஜகோபுரம் இல்லாமல்தான் காட்சியளிக்கிறது. மதுரையை ஆண்ட சுந்தரபாண்டிய மன்னர் காவிரி நாட்டில் படையெடுத்து வரும் பொழுது இந்த திருவெள்ளறை கோவிலை தன்வசம் ஆக்கிக் கொண்டார் என்று அங்கு நுழைவாயிலில் உள்ள கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன