திருப்பதி திருமலையின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

  • by
special features of thirupati tirumala temple

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருக்கோவிலுக்கு உலகெங்கும் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான நன்கொடைகளை பெறும் வசதி படைத்த கடவுளாக திகழ்வது திருப்பதி வெங்கடாசலபதி. தென்னிந்தியா முழுக்க ஏராளமான பேருந்துகள் திருப்பதி சன்னிதானத்திற்க்காக சிறப்பாக தினமும் செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு இடத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள். இதைத் தவிர்த்து திருப்பதி கோவிலுக்கு இன்று ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன, அவைகளை இங்கே காணலாம்.

ஏழுமலையான்

சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி, ரிஷபாத்திரி என ஏழு மலைகளை சுற்றி உள்ளதால் பெருமாளை ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஆகாசராஜன் என்னும் அரசன் புராணகாலத்தில் திருப்பதி நகரை ஆட்சி செய்த மன்னர். இவரது மகளாகத் தான் பத்மாவதி தாயார் அவதரித்தார்.

மேலும் படிக்க – குபேர பூஜை எப்படிசெய்வது, அதனால் கிடைக்கும் நன்மைகள்..!

திருப்பதியின் வரலாறு

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் வெங்கடாசலபதியின் மிகப்பெரிய பக்தர் ஆவார். அக்காலத்தில் இவர் வழங்கிய நகைகளும் நன்கொடைகளும் இன்றும் திருப்பதியின் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. திருப்பதி வெங்கடேசப் பெருமானின் சிறப்பை நிலைநாட்டுவதற்காக அக்காலத்தில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் ஏராளமான வெங்கடேச பெருமாள் கோவில்களைக் கட்டினார். திருப்பதி கோவிலின் பொற்காலம் என்று அழைக்கப்படுவது விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலம்தான். சுமார் 1350 ஆம் ஆண்டு முதல் 1600 ஆம் ஆண்டு வரை இவர்களால் பராமரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1800ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் திருப்பதி கோவிலை ஆக்கிரமிக்கப்பட்டது. பின்பு 1932 ஆம் ஆண்டு திருப்பதி சன்னிதானம் உருவாக்கப்பட்டது.

அன்னதானம்

தரிகொண்ட வேங்கமாம்பா என்பவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இன்றும் இடைவிடாமல் இந்த அன்னதானம் திருப்பதி சன்னதிகளில் வழங்கி வருகிறார்கள்.

திருப்பதி கோவிலை கட்டியவர் 

திருப்பதி திருக்கோவிலை கட்டியவர் ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது வரலாறு.

பெருமையை கூறும் கல்வெட்டுக்கள்

மலையின் மேல் இருக்கும் ஆதி வராஹ மூர்த்தியை தரிசித்து பிறகு தான் ஏழுமலை யானையும் மற்ற சன்னதிகளிலும் தரிசிக்க வேண்டும் என்பதுதான் ஐதீகம். திருப்பதி திருக்கோவில் வரலாற்றை கூறும் கல்வெட்டுகள் சுமார் 650 க்கும் மேல் இருக்கின்றன. அதிலும் தமிழ் கல்வெட்டுகள் சுமார் 600 இருக்கிறது.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த சிவராத்திரி கொண்டாட்டங்கள்

திருப்பதி லட்டு

திருமலையில் உள்ள நடை பள்ளியில் நகுலா தேவி அதாவது அதாவது கிருஷ்ண அவதாரத்தில் வரும் யசோதா, இவரின் மேற்பார்வையில் தான் பெருமானுக்கு தயாராகும் நைவேத்தியங்கள் தயாரிக்கப்படுகிறது. அதைத் தவிர்த்து நடை பள்ளியில் லட்டு, புளிசாதம், தயிர்சாதம், பொங்கல், வடை என எல்லாவற்றையும் தயாரிக்கிறார்கள். ஆனால் இதில் மிகச் சிறப்புடையது திருப்பதிலட்டு தான்.

திருப்பதி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கோவிலில், லட்டு, மொட்டை இவைகள் மூலமாக திருப்பதி மிகவும் பிரபலமடைந்து, இன்று கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன