பங்குனி உத்திரத்தின் சிறப்பு வழிபாடு..!

  • by
special features of panguni uthiram festival

தமிழில் இருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான சிறப்பு வழிபாடுகள் இருக்கின்றன, அதில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுபவது இந்த பங்குனி வழிபாடு. பங்குனி மாதத்தில் தான் ஏராளமான கடவுள்களுக்கு திருமணம் நடந்ததாக புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே திருமண தடை உள்ளவர்கள் இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் மூலமாக அவர்களின் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.

பங்குனி மாதம்

தமிழ் மாதத்தில் பன்னிரண்டாவது மாதமாக வரும் பங்குனியில் பன்னிரண்டாம் நாளில் வரும் உத்திரத்தை தான் பங்குனி உத்திரம் என்கிறார்கள். இந்த நாளில் இருக்கப்படும் விரதத்தை கல்யாண விரதம் அல்லது திருமண விரதம் என்பார்கள். இந்த நாளில் சிவனின் தவத்தை கலைத்ததினால் அவரின் நெற்றிக் கண் மூலமாக மன்மதனை எரித்தார், இதனால் ரதி தவத்தை மேற்கொண்டு மன்மதனுக்கு உயிர்கொடுத்தா நாளும் இதுதான்.

மேலும் படிக்க – ஆச்சரியப்படுத்தும் 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த்..!

சிவபெருமான் மற்றும் பார்வதி

சிவபெருமான், அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

முருகப்பெருமான் தெய்வானை

முருகப்பெருமான் தனது வேலாயுதத்தை கொண்டேன் மலையை உடைத்து தாரகாசுரனை கொன்று தெய்வானையை மணந்த நாளும் இந்த பங்குனி உத்திரமாகும். இதனாலேயே இந்த நாளை பங்குனி உத்திரம் என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமன் சீதை, லட்சுமணன் ஊர்மீனை, பரதன் மாண்டவி, நான்முகன் கலைவாணி மற்றும சத்துருகனன் சுருதகீர்த்தி போன்றவர்களின் திருமணமும் இதே நாளில் நடந்தது. ஐயப்பன், வள்ளி மற்றும் அர்ஜுனன் போன்றவர்கள் அவதரித்த நாளும் இதுதான்.

பழனி முருகன்

பழனியில் உள்ள திருஆவினன்குடியில் உத்திர திதியில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். மற்று முருக தளத்தினை விட இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறார்கள். இங்கே விரதமிருந்து அன்னதானம் செய்வதன் மூலமாக உங்களுக்கு கிடைக்காதா அனைத்தும் உங்களுக்குக் கைகூடி வரும்.

மேலும் படிக்க – மிருத்யுஞ்சயா மந்திரம் உங்கள் விதிகளை மாற்றும்..!

விரதத்தினால் கிடைக்கும் நன்மை

திருமணத்தடை உள்ளவர்கள் இந்நாளில் விரதம் மேற்கொள்வதன் மூலமாக அவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும், துன்பத்தைத் தரும் எதிரிகளை முருகப்பெருமான் அழிக்கும் வல்லமை கொண்டவர்கள், எனவே இந்நாளில் நீங்கள் விரதம் மேற்கொள்வதன் மூலமாக துன்பம் மற்றும் கவலைகள் அனைத்தும் தீரும்.

இந்நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நிலைக்கும். எனவே இந்த பங்குனி உத்திரத்தை சிறப்பாக வழிபட்டு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன