அமாவாசை-யில் உண்டு அற்புத குணம்..!

  • by
Special Feature of New Moon Day

ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஒரு முறை வருவதே அம்மாவாசை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் இரண்டு முறை அம்மாவாசை வந்துள்ளது.

சூரிய ஒளி நிலவின் மேல் படுவதன் மூலமாக தான் நிலவு பிரகாசமாக பூமியில் இருப்பவர்களுக்கு தெரிகிறது. அந்த ஒளி முழுமையாக படுவதினால் ஏற்படுவதே பவுர்ணமி. ஆனால் எப்போது சூரிய ஒளி சிறிதளவுகூட நிலவின் மேல் படாமல் இருக்கிறதோ அதுதான் அம்மாவாசை என்கிறார்கள்.

கடவுளாக இருக்கும் முன்னோர்கள்

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அல்லது வயதானவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் ஆன்மா நம்முடைய நலனுக்காகவே நம்மைச் சுற்றி வரும் என்பார்கள். அத்தகைய ஆன்மாவை மதிப்பதை காண்பிப்பதற்காக தான் நாம் அவர்களுக்கு பித்ரு பூஜைகள் செய்வோம். இதனால் அவர்களுக்கு நன்மை கிடைப்பதை விட இதை செய்பவர்களுக்கு அதிக அளவிலான நன்மைகள் வந்தடைகிறது.

நாம் வீட்டில் பெரியவர்களின் படம் அல்லது அவர்களின் நினைவாக எதையாவது வைத்து பூஜைகள் செய்வதினால்  அவர்களின் ஆசிர்வாதம் எப்போதும் நமக்கு கிடைக்கும். இதை நம் பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செய்வதன் மூலம் நாம் செய்யும் அனைத்துக் காரியமும் தடங்கல் இல்லாமல் நடப்பதற்கு அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் நம்முடன் இருக்கும். இதை செய்வதற்கு சிறந்த மாதமாக அமாவாசையை கருதுகிறார்கள்.

மேலும் படிக்க – இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..!

அமாவாசை பூஜை

அமாவாசை நாட்களில் புண்ணிய ஸ்தலம் என்று அழைக்கப்படும் காசி, ராமேஸ்வரம் போன்ற நதிகள் உள்ள இடங்களில் பித்ரு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கின்றன. இந்த சமயங்களில் இழந்த பெரியவர்களின் அல்லது முன்னோர்களின் ஆத்மா நம்மை ஆசிர்வதிக்கும். அம்மாவாசை அன்று இதை செய்வதினால் நாம் காலம் காலமா மறுத்து வந்த இந்த பூஜைகளின் சக்திகள் அனைத்தும் இந்த நாள் உங்களுக்கு பெற்றுத்தரும். அதேபோல் மற்ற தினங்களில் பூஜைகள் செய்ய மறந்தாலும் அம்மாவாசை அன்று செய்வதன் மூலமாக இதன் பலன் அதிகரிக்கும்.

நம்முடைய வலது ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே இருப்பது தான் பித்ரு பூம்ய ரேகை. அதன் வழியாகத்தான் தற்பணம் அளிக்கப்படுகிறது. இந்த தற்பனை சக்தியானது பூமியின் ஆகர்ஷன மீறி மேல் நோக்கி எழும்பிச் சென்று எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் பித்ரு லோகத்தை சென்றடைகின்றது. சாதாரண அம்மாவாசை அன்று இது போன்ற அற்புதங்கள் நடக்குமாயினும் தை மாதம் வந்து சென்ற அம்மாவாசை எவ்வளவு சக்தி படைத்தது என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

மேலும் படிக்க – பச்சை கற்பூரத்தின் பரிபூரண குணங்கள் பார்போம் வாங்க.!

முன்னோர்களின் ஆசி பெறும் அம்மாவாசை

காலங்கள் கடப்பதினால் நாம் செய்துவரும் சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் குறைந்து கொண்டே செல்கிறது. இதை எதிர்த்து உங்கள் முன்னோர்களின் வழிகளை கடைப்பிடித்து இழந்த மக்களுக்கு நீங்கள் செய்யும் கடமைகளை இந்த அம்மாவாசை அன்று செய்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள், துன்பங்கள், மனக்கசப்பு போன்ற பிரச்சனைகள் இருக்குமாயினும் இது போன்ற பூஜைகள் மூலமாக அதை தவிர்க்கலாம்.

அமாவாசையின் சிறப்புகளை அறிந்து அந்நாளில் விரதங்களை மேற்கொண்டு இது போன்ற பூஜைகள் செய்வதன் மூலமாக உங்கள் குடும்பம் மற்றும் உங்களுக்கு அடுத்து வரும் குடும்பங்கள் அனைத்திற்கும் நன்மையே நடக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன