நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் ரகசியம் இதுதாங்க

  • by

சுமங்கலிப் பெண் என்ற அடையாளத்திற்கு பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கப்படுவதுதான் குங்குமம். வேதத்தில் நாம் நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளது. என்னதான் நமக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் நெற்றியில் குங்குமம் வைப்பதில் ஏகப்பட்ட அறிவியல்கள் இருக்கிறது.


காந்தசக்தி:

நெற்றியின் மையப் பகுதியில் நமக்கு காந்தசக்தி அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதெல்லாம் நாம் அதிகமாக சிந்திக்கிறோம் அல்லது எப்போது அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறோமோ அப்போது நமக்கு தலை மூலமாக நமது ஆற்றல் வெளியேறும். இதை அனைத்தையும் தடுப்பதற்கும், தலைவலியைப் போக்குவதற்கு நம் நெற்றியில் திலகம் வைத்தால் போதும். குங்குமம் வைப்பதன் மூலமாக மற்றவர்கள் நம்மை வசியப்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியும்.

குங்குமம் திலகம்:

நெற்றியில் குங்குமத் திலகம் வைப்பதன் மூலமாக நமது அறிவாற்றலை அதிகப்படுத்த முடியும். மனித உடலில் தலை பகுதி தான் மிக முக்கியமானவை எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முதலில் தலைவலி மூலமாக தான் வெளிவரும். இதை தடுப்பதற்காக நாம் நெற்றியில் திலகம் வைப்பது நல்லது. ஆண்களைவிட பெண்கள் அதிகமான சுமையை சுமக்கிறார்கள் குடும்பச்சுமை, அலுவலகச்சுமை, சமுதாயம், கணவன் என ஏராளமான சுமையை சுமப்பதினால் இவர்களுக்கு கூடுதலான தலைவலி ஏற்படுகிறது. இதை கட்டுக்குள் வைப்பதற்காகவே பெண்கள் நெற்றியில் திலகம் வைக்கிறார்கள்.

மேலும் படிக்க – கிருஷ்ணன் பிறப்பதற்கான காரணம் என்ன..!

இதுபோல் ஆண்களும் நெற்றியில் விபூதி மற்றும் குங்குமம் வைத்தால் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதற்கு இவர்கள் இரண்டு புருவங்களுக்கு இடையே இணையுமாறு குங்குமம் அல்லது விபூதி வைக்க வேண்டும்.

நம் உடலில் இருக்கும் ஆற்றலின் வெளியே வராதபடி மற்றும் உடலில் ஏற்படும் சூட்டை தணிப்பதற்காக நாம் நெற்றியில் திலகம் வைக்க வேண்டும். குங்குமத்தை நாம் எப்போதும் மோதிர விரலில் வைக்க வேண்டும், மற்ற விரல்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

லட்சுமியின்இருப்பிடம்:

நெற்றியில் லட்சுமி குடியிருப்பதினால் நம் குங்குமத்தை நமது இடது கையில் கொட்டி வலது கையில் நெற்றியில் வைக்க கூடாது, இதற்கு பதிலாக யாராவது ஒருவரின் வலது கையில் குங்குமத்தைக் கொட்ட சொல்லிவிட்டு அதை எடுத்து நீங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். எனவே இங்கு குங்குமத்தை வைப்பதன் மூலமாக உங்கள் வாழ்க்கை சேமம் அடையும். சுமங்கலிக்கு உண்டாகும் தீங்குகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தையும் நெற்றியில் குங்குமம் வைப்பதன் மூலமாக குறைக்க முடியும்.

வீட்டுக்கு யாராவது சுமங்கலிப் பெண் வந்தார்கள் என்றால், அவர்களுக்கு குங்குமம் கொடுப்பதன் மூலமாக நீங்களும் பல வருடங்கள் சுமங்கலியாக இருக்க முடியும். அவர்களுக்கும் நீங்கள்  சுமங்கலி பாக்கியத்தை அதிகரிக்கலாம். ஆனால் எப்போதும் குங்குமத்தை கொடுப்பவர்கள் முதலில் குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும் பின்புதான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்.

திலகம் சூட்டுவதன் பயன்கள்:

குங்குமத்தில் இந்த தெய்வீக தன்மை, மருத்துவ குணம், சுய தன்மை இருப்பதனால் அதை நீங்கள் உங்கள் நெற்றியில் அணியும் போது உங்களுக்கு உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கிறது.

கட்டை விரலில் குங்குமம் அணிவது மூலமாக அவர்களுக்கு மன வலிமையை அதிகரிக்கிறது. இதனால்தான் ஒரு ஆண் எப்போதும் தனது மனைவிக்கு கட்டைவிரல்கள் மூலமாக திலகத்தை அணிவிக்கிறார்கள்.

மேலும் படிக்க – இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

ஆள்காட்டி விரல்கள் மூலமாக மூலமாக குங்குமத்தை வைப்பது உங்களுக்கு ஆளுமை மட்டுமல்லாமல், முதலாளித்துவமும் உங்களுக்கு அதிகரிக்கும். எனவே வீட்டில் இருக்கும் மூத்த மருமகள் அல்லது மூத்தமகள் இதுபோன்று குங்குமத்தை நெற்றியில் வைப்பார்கள்.

சனி விரல் என்றழைக்கப்படும் நடு விரலில் குங்குமம் வைப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினையிலிருந்து தீர்வு காண உதவும். அதேபோல் தீர்க்க ஆயுளையும் தெய்வீகத்தன்மையையும் உங்களுக்கு கொடுக்கும். இது உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

இப்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் அதிகமாக குங்குமத்தை அணிவதில்லை இது அவர்களின் நடைமுறை வாழ்க்கையை பாதிக்கிறது என்று எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் குங்குமத்தினால் அதிக நேர்மறை தன்மைகள் இருக்கின்றது. இதை சரியாக அறியாதவர்கள் இந்தப் பதிவின் மூலமாக பயன் பெற்று இனிமேலாவது நமது பாரம்பரிய முறையில் குங்குமம் வைப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன