பருவமழை காலம் தொடக்கம் வரப்போகுது திட்டமிடுங்கள்!

  • by

தென்மேற்கு பருவமழை காலம்  தொடங்கவுள்ளது. இந்தியாவில்  தென்மேற்கு குறைவான பருவமழையானது பெய்யும் என இந்திய வானிலை மையம்  தகவல் கொடுத்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் விவசாயத்தை முக்கியமாகக் கொண்டது ஆகும். பருவமழையில் பல்வேறு விளைச்சல் செய்வது  வழக்காமாக நாம் கொண்டுள்ளோம். ஆனால் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மற்ற தொழில்கள் வளர்ச்சி நிர்ணயிக்கப்படும். 

இவ்வாண்டு தென்மேற்கு  பருவமழையானது குறைவாக இருக்கும் இது பெரிய அளவில் தாக்கம் இருக்காது என சொல்லப்படுகின்றது. தென் மேற்கு பருவமழையானது ஜூன் ஒன்றில் தொடங்கும். அது அக்டோபர் 15 வரை நீடிக்கும் என  இந்திய வானிலை மையமானது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இவ்வாண்டு ஊரடங்கு நேரத்தில் நமக்கு இருக்கும் பெரிய அளவிலான  பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் ஊரடங்கு, கொரானா என நமது தொழில் மற்றும் வேலை அன்றாட வாழ்க்கையே புரட்டி போட்டுவிட்டது. இந்நிலையில் நாம் எவ்வாறு பருவமழை   சராசரியை எவ்வாறு சரி செய்யவிருக்கின்றோம் என்பதை நாம் தெரிந்து செயல்பட வேண்டும். 

பல்வேறு கேள்விகளை கொண்டு நமது வாழ்வியல் இவ்வாண்டு  தொடங்குகின்றது. விளைச்சல் பார்க்க வேண்டும். விளைந்த பொருளை சரியாக சந்தையில் சேர்த்து விற்று லாபம் பார்க்க வேண்டு. நாடே  இன்று மூழ்கி கிடக்கின்றது. இந்த நிலையில் தற்பொழுது ஊரடங்கில் உயிருக்கு பயந்து விவசாயம் செய்ய ஆட்கள் யாரும் வருவதில்லை என்ற வருத்தம் விவசாயிகளிடையே இருக்கின்றது.  அடுத்தடுத்த சவால்கள் எல்லாம் நம் வாழ்வாதரத்தைப் பாதிக்குமா என்பதை தெரிந்து கொண்டு செயல்படுவோம். இன்றைய சூழலில் வாழ்வாதாரம் காகப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமானது ஆகும். 

இன்னும் அடுத்தடுத்து வரும் நாட்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள். வேலை தேடி, உணவு தேடி, பிழைப்பு தேடி என பல தேடல்கள் தேர்வுகள். பணி வாய்ப்புகளை எல்லம நாம் தேடி ஓடி கொண்டிருக்கின்றோம் இந்த நேரத்தில் நாம் இதனை முழுமையாக உணர வேண்டும்.  நமது தேடலுடன் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கும் பாதையை தெரிவு செய்ய வேண்டும். 

அனைவரும் அமர்ந்து சிந்திக்க வேண்டும் தொலை நோக்குப் பார்வையில் சிந்திக்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை நாம் முழுமையாக சிந்தித்து வீட்டில் செலவுகளை கட்டுப்படுத்துதல் என்பது அவசியம் ஆகின்றது.  நமது வாழ்வியலை முடக்கும் எந்த ஒரு சவாலான சூழலையும் வல்லமையோடு எதிர் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க: ஜலதோஷத்தை போக்கும் பாட்டி வைத்தியம்..!

 விவசாயிகளுக்கு தேவைப்படும் சலுகைகளை முறையாக அரசு  கொடுக்க வேண்டும் அவர்களான முறையான பாதுகாப்பு அவர்களின் விலைச்சலுக்குரிய அங்கிகாரம் கொடுக்கப்படும் பொழுது அவர்களின் உழைப்புக்கு அங்கிகாரமானது கிடைக்க்ப் பெறலாம். 

 கடுமையான உழைப்பும்,   கடந்துவரும் மனப்போக்கும்  சுமார்ட்டா உழைப்பை சந்தைப்படுத்த தெரிந்தால் உங்கள் உழைப்புக்கான ஊதியம் நிச்சயம் கிடைக்கும்.  விவசாயிகள் பருவமழை, ஊரடங்கால் முடங்கினால் உணவுக்கு நாம் என்ன செய்வோம் என்று சிந்திக்க வேண்டியது அவசியமானது அதுதான் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.   ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கொண்டு அடியெடுத்து வைத்தால் அடுத்து வரும் சவால்களை சரி செய்யலாம்.

லாக்டவுன் காலத்தில் வீட்டிலே காய்கறிகளை விதைத்து முளைக்க வைக்கலாம். வீட்டில் சிறிய இடம் இருந்தால் 5 முதல் 10 செடிகள் நட்டு வளர்க்கலாம்.  துளசி, ஓம வல்லி இலை, மிளகாய் செடி, வெண்டை செடி, கத்திரிக்காய், புதினா, ஒரு சிறிய அகலமான சதுரப் பெட்டி இருந்தால் வெந்தயக்கீரை வளர்க்கலாம்.  புதினா செடி, கொத்துமல்லி செடிகள் அனைத்து வளர்க்கும் பொழுது அடிப்படை தேவைகளான காய்கறிகளின் தட்டுப்பாட்டு நேரத்தில் அதனை எளிதாக நாமே பயன்படுத்தலாம். இது போன்ற தற்சார்பு வாழ்க்கை என்பது அனைவரும் உணர்ந்து வாழும் பொழுது சவால்களை எல்லாம் சாதனையாக்கலாம். 

மேலும் படிக்க: ஊரடங்கின் பொழுது இல்லாதவர்களுக்கு உதவுபவர்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன