சீனர்கள் சாப்பிடும் அருவருப்பான உணவுகள்..!

  • by
some uncommon foods that chinese people eat

உலகில் பல பகுதிகளில் நாம் வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது, ஆனால் சீனாவில் மட்டும் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தவிர்த்து அதை உண்ணுவதற்கு கூட எந்த தடைகளும் இல்லை. இது அனைத்திற்கும் மேலாக வனவிலங்குகளை விற்கும் சந்தைகள் சீனாவில் பல பகுதிகளில் இருக்கின்றன. சீன மக்கள் இதன் ருசி எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் நிச்சயம் ஒரு முறையாவது இந்த அங்காடிகளில் இருக்கும் வனவிலங்குகளை ருசித்திருப்பார்கள் இல்லையெனில் உணவகங்களில் சாப்பிடுவார்கள். இப்படி சீனாவில் அதிகமாக உட்கொள்ளும் ஆச்சரியமூட்டும் உணவுகளை இங்கே காணலாம்.

பட்டுப்பூச்சி

சில்க் வார்ம் என்று அழைக்கப்படும் பட்டுப்பூச்சியி ஏராளமான புரதங்கள் இருக்கின்றது. இதனால் சீன மக்கள் அதில் பட்டு எடுப்பதற்கு பயன்படுத்தாமல் அதை சமைப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். சீனாவில் ஏராளமான உணவகங்களில் இது விமர்சியாக கிடைக்கிறது.

ஆடு மற்றும் கோழி உறுப்பு

இந்தியாவைத் தவிர்த்து உலகில் பல பகுதிகளில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நாம் அதை சுத்தப்படுத்தும் போது ஒரு சில பகுதிகளை அகற்றி விடுவோம், ஆனால் நாம் அகற்றப்படும் பகுதிகளை மிக பிரத்தியேகமாக சீனாவில் விற்கிறார்கள். ஆட்டின் உறுப்பு மற்றும் கோழியின் உறுப்புக்களை தனியாக எடுத்து அதை சமைத்து மக்களுக்கு விற்கிறார்கள்.

மேலும் படிக்க – உணவில்லாதவர்களுக்கு உணவளியுங்கள்..!

நாற்றமான டோஃபு

ஆடு மற்றும் மாட்டு இறைச்சி மற்றும் மீன்களின் மூளை மற்றும் ஒருசில காய்கறிகள் போன்ற அனைத்தையும் சேர்த்து செய்யப்படுவதுதான் இந்த டோஃபு. இது மற்ற உணவுகளைப் போல மணக்காது, மிக மோசமான துர்நாற்றம் வீசும். இந்த நாற்றம் இரண்டு தெருவை தள்ளியும் வீசும் என்று கூறுகிறார்கள்.

கடல் குதிரை

நம் நாட்டில் பிடிக்கவோ அல்லது வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய உயிரினம் தான் இந்த கடல் குதிரை. இதன் இனம் அழியக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் நாம் இதை கடைபிடித்து வருகிறோம். ஆனால் சீனாவில் இதை விற்கவும் மற்றும் உண்ணவும் செய்கிறார்கள். இதை கொன்று உணவுகள் மற்றும் தேநீர் போன்றவைகளாக சாப்பிட்டு வருகிறார்கள். இதன்மூலமாக ஆஸ்துமா மற்றும் பலவிதமான ஆரோக்கியம் கிடைக்கிறது என்று நம்புகிறார்கள்.

வவ்வால் சூப்

ஏராளமான வியாதிகளை பரப்பும் தன்மை கொண்டது தான் இந்த வவ்வால். ஆனால் இது சீனாவில் பல அங்காடிகளில் விற்கிறார்கள் மற்றும் அனைத்து உணவகங்களிலும் இதைக் கொண்டு சூப் போன்றவற்றைச் சமைத்துத் தருகிறார்கள். ஒரு முழு சூப்பில் வவ்வால் இறந்த நிலையில் மிதக்கும். நாம் சூப்பை அருந்து கொண்ட இந்த வவ்வாலை கடித்து சாப்பிடலாம். கேட்கவே அருவருப்பாக இருக்கும் இதை சீன மக்கள் விரும்பி செய்கிறார்கள்.

ஆமை ஜல்லி

சீனர்கள் ஆமைக்கறிகலை சாப்பிடுவதை தவிர்த்து, ஆமை ஓட்டை பிரித்து எடுத்தால் அதற்கு அடியில் ஒரு விதமான ஜல்லி இருக்கும். அதைக் கொண்டு இவர்கள் சூப் செய்து சாப்பிடுகிறார்கள்.

தேள் மற்றும் புறா கழிவுகள்

சிறிய வகையில் இருப்பதினால் சீனர்கள் தேலை சமைத்து அதை நொறுக்குத்தீனி போல் சாப்பிடுகிறார்கள். அதேபோல் புறாவின் கூண்டில் அது போடும் கழிவுகளை சேகரித்து அதை சூப்பாக குடிக்கிறார்கள்.

பாம்பு

பாம்பை கண்டு பயந்து வந்த மக்கள் இப்போது ஒரு பாம்பை முழுமையாக தோல் உரித்து அதன் சதைகளை வேகவைத்து சூப், பொறியியல் மற்றும் வருத்த கறியாக சாப்பிடுகிறார்கள். இதைத் தவிர்த்து பாம்பின் ரத்தம் மற்றும் உயிருடன் துடிக்கும் அதன் இதயம் என எல்லாவற்றையும் பிரத்தியேகமாக சீனர்கள் சாப்பிடுகிறார்கள்.

சிலந்தி மற்றும் ஆக்டோபஸ்

சீனாவில் மிக பிரபலம் வாய்ந்தது தான் இந்த ஆக்டோபஸ்கள் உணவு, ஆக்டோபஸை உயிருடன் மசாலாக்களின் மிதக்க விட்டு அப்படியே பரிமாறுவார்கள். அதேபோல் சிலந்தியை நன்கு வேகவைத்து சாப்பிடக் கொடுப்பார்கள். இதன் ருசி தன்மை என்பது மிகக் குறைவாக இருந்தாலும் இதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களை சாப்பிட வைக்கும்.

மேலும் படிக்க – மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை எப்படி பாதுகாப்பது..!

எலி குட்டிகள், அணில் முளைகள்

இவர்கள் எலி குட்டியை உயிருடன் குடிக்கும் வைனில் கலந்து விடுவார்கள் அது உயிருடன் அதில் மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே அதை சீனர்கள் விரும்பி அருந்துகிறார்கள். அதேபோல் அணிளின் மூளைகளை மட்டும் தனியாக எடுத்து அதை மசாலாக்களுடன் கலந்து தொக்கு போல் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

முட்டைகள்

வாத்து, கோழி போன்ற பறவைகள் இடும் முட்டைகளை அதன் குஞ்சு பொரிக்கும் தருவாயில் வேகவைத்த சாப்பிடுகிறார்கள். அதைத் தவிர்த்து பிறந்த கோழி அல்லது வாத்துக் குஞ்சுகளை வேக வைத்து சாப்பிடுகிறார்கள்.

இதைத்தவிர்த்து முள்ளம்பன்றி, நாய், பன்றி, முதலை, வெட்டிக்கிளி, பூரான் போன்ற எல்லாவற்றையும் விரும்பி சமைத்து சாப்பிடுகிறார்கள். மற்ற உணவுகளை விட மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாளும். பஞ்சம் போன்ற பிரச்சினைகள் உண்டாகமல் இருப்பதற்காகவும், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இது போன்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன