தோட்டங்களை பராமரிப்பதற்கான ஆலோசனைகள்..!

  • by
some tips to maintain your garden

பலருக்கும் வீட்டில் அருகே தோட்டங்களை வளர்க்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் அவர்களுக்குப் போதுமான அளவு பராமரிப்பு சிந்தனை இல்லாததினால் தோட்டங்கள் ஒரு சில நாட்களிலேயே அழிந்து விடும். எனவே உங்கள் தோட்டத்தை பராமரித்து அதில் வளரும் காய்கறிகளை எப்படி ருசியாக வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

தோட்டம்

எல்லோருக்கும் விருப்பமான ஒரு செயல்தான் செடிகளை வளர்ப்பது, அதிலும் நாம் உண்ணும் காய்கறிகளை செடிகளாக வளர்த்து அதை சாப்பிடும் சுகம் தனி. எனவே இதற்காக பல பேர் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து தங்கள் வீட்டில் அருகிலேயே அல்லது மாடிகளில் தோட்டங்களை வைக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற தோட்டத்தில் வைக்கப்படும் செடிகள் ஒரு சில நாட்களிலேயே வாடுகிறது. இதற்கு காரணம் நாம் அதற்கு செய்யும் தீங்குகள் தான். எனவே ஒரு அழகான தோட்டத்தை வைக்க வேண்டுமென்றால் அதற்கு ஆரோக்கியமான மண், நேரத்திற்கு நீர் மற்றும் சூரிய ஒளி சரியான திசையில் படும்படி வைக்க வேண்டும். இபைகளை சரியாக கடைபிடிப்பது மட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தும் மண்ணிற்கு சக்திகளை அளிக்கும் சில பொருட்களை அதற்கு தரவேண்டும்.

மேலும் படிக்க – பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் தேர்வு அறையில்  செய்ய வேண்டிய சில விஷயங்கள்.!

முட்டை ஓடுகள்

முட்டை ஓடுகளிலும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் அதை குப்பையில் போட்டு வீணாக்காமல் அதை சிறிதாக நறுக்கி உங்கள் தோட்டத்தில் இருக்கும் மண்ணில் கலந்து விடுங்கள். இதனால் உங்கள் செடிகளுக்கு அதிகளவிலான கால்சியம் சத்துக்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் செடிகளும் ஆரோக்கியமாக வளரும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பை உங்கள் வீட்டு அருகே இருக்கும் கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். இதை உங்கள் மண்ணில் கலப்பதினால் உங்கள் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.

டயபர்ஸ்

நாம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர்ஸ் அதிகமாக குப்பைகளாக மாறுகிறது. எனவே அந்த டயபர்களை தூக்கி எறியாமல் அதில் இருக்கும் ஜெல்லியை மட்டும் வெளியே எடுக்க வேண்டும். பிறகு அதை சிறிதாக நறுக்கி உங்கள் செடிகள் இருக்கும் இடங்களில் தூவவேண்டும். இது உங்கள் மண்ணில் இருக்கும்  ஈரப்பதத்தை தக்கவைக்கும். இதன் பிறகு ஒரு சில தடவை உபயோகிக்கப்பட்ட டயபர்களை தூக்கி எறியாமல் அதை மறுசுழற்சி செய்யுங்கள்.

சூரியகாந்தி வெள்ளரிக்காய்

உங்களுக்கு இனிப்பான வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். சூரியகாந்தி செடி அருகே உங்களுடைய வெள்ளரிக்காய் விதைகளை புதைத்து விடுங்கள். எனவே சூரியகாந்தி சத்துக்கள் ஒரு சேர்ந்து வெள்ளரிக்காயை உருவாக்கினால் உங்களுக்கு மிக இனிப்பாகவும், சுவையாகவும் வெள்ளரிக்காய் கிடைக்கும்.

மேலும் படிக்க – நேரத்தை திட்டமிடுவது எப்படி.?

பால் பவுடர்

உங்களுக்கு ருசியான தக்காளி வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் பால் பவுடரை தக்காளி விதைகளை போடும் இடத்தில் மண்ணுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். இதன் மூலமாக ருசியான தக்காளி உங்களுக்கு கிடைக்கும். அதேபோல் இனிப்புகளை தரக்கூடிய எல்லாம் பழங்கள் மற்றும் காய்கறி விதைகளை புதைக்கும் மண்களில் பால் பவுடரை கலக்கலாம். இதன் விலை அதிகம் என்பதனால் ருசியை விரும்புவர்கள் மட்டும் இதைப் பயன்படுத்தலாம்.

வீட்டுச் செல்லப் பிராணிகள்

பொதுவாகவே நாம் வளர்க்கும் தோட்டங்களை சீரழிப்பது நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் தான். எனவே இதை தடுப்பதற்கு நாம் பிளாஸ்டிக் முட்களை ஆங்காங்கே புதைத்து வைக்க வேண்டும். இதனால் நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் உங்கள் தோட்டத்திற்கு அருகே வராது. இதன் மூலமாக உங்கள் செல்லப் பிராணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது உங்கள் செடிகளும் வீணாகாது.

தோட்டத்திற்கு அவசியம் நீர்

நீர் இல்லாமல் செடிகள் வளராது, எனவே முடிந்தவரை அதிகாலையில் செடிகளுக்கு நீர் பாயுங்கள். அப்படி காலையில் மறந்துவிட்டால் மாலையில் பாய்ச்சலாம். ஒருபோதும் மதிய வேளைகளில் நீர் பாய்ச்சார்தீர்கள். ஏன்என்றால் அச்சமயத்தில் தான் சூரிய ஒளியின் சக்தியை செடி உறிஞ்சிக் கொண்டிருக்கும். அதேபோல் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கழிவு நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம். காய்கறிகளை வேக வைத்த நீரை ஆரிய பிறகு செடிகளுக்கு ஊற்றுவது சிறந்ததாகும்.

மேலும் படிக்க – ஹெல்மெட்டில் இருக்கும் வகைகள்..!

எனவே ருசியான மற்றும் இயற்கை காய்கறிகள் வேண்டுமென்றால் இது போன்ற வழிகளை பின்தொடர்ந்து உங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்யலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன