இயற்கை முறையில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்..!

  • by
some natural ways to improve your memory power

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் அன்றாட வாழ்க்கை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்க வேண்டும். ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் மன அழுத்தம் பிரச்சினைகளில் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை மோசமான பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் தங்களுடைய ஞாபக சக்தியை மேம்படுத்த வேண்டும், இல்லையெனில் தினம் தினம் நாம் செய்யும் செயல்களை மறந்து நம்முடைய சிந்தனை திறன் முற்றிலுமாக முடங்கிவிடும். அதைத் தடுப்பதற்காக இயற்கையான முறையில் நம்முடைய ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கலாம் என்பதை காணலாம்.

ஆழ்ந்த உறக்கம்

10 முதல் 12 வயது உள்ள மாணவர்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் நல்ல தூக்கத்தை கொண்ட மாணவர்களின் ஆற்றல், சிந்தனைத் திறன் மற்றும் ஞாபக சக்தி போன்ற அனைத்துமே மற்றவர்களை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்துள்ளது. நம்முடைய தூக்கம் நம்முடைய ஞாபக சக்தியை தீர்மானிக்கிறது. எனவே சரியான நேரத்தில் சரியான அளவு தூங்குவதன் மூலமாக உங்களின் சிந்தனை திறனை அதிகரிக்க முடியும்.

இயற்கை முறையில் ஞாபக சக்தியை அதிகரிக்க எங்கள் Spark.live நிபுணரிடம் ஆலோசனை பெற இந்த இணைப்பை அழுத்தவும்

மூளைக்கு பயிற்சி அளியுங்கள்

எல்லா செயலையும் சிந்தித்து செய்யுங்கள், கண்மூடித்தனமான வாழ்க்கை உங்கள் சிந்தனைத் திறனை முழுமையாக அழித்துவிடும். அதேபோல் செல்போன்களில் தேவையில்லாத காணொளிகளை பார்ப்பதைத் தவிர்த்து மூளைக்கு-வேலை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாடுங்கள். வார்த்தைகளைக் கண்டு பிடிப்பது, சரியான முடிவு எடுப்பது, பொது அறிவு சோதனை, லாஜிக்கல் விளையாட்டு போன்றவற்றை நாம் செல் போன்கள் மற்றும் நாளிதழ்கள் மூலமாக விளையாடலாம்.

குறைந்த சர்க்கரை உணவு

நாம் அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நமது மூளையில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, அவ்வப்பொழுது ஞாபக மறதி உண்டாக்கிறது. நாம் சர்க்கரையை குறைவாக எடுத்துக் கொள்வதன் மூலமாக நம்முடைய ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நம்முடைய உடல் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் தடுகலாம்.

மேலும் படிக்க – உடல் எடை குறைப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரை..!

மீன் மாத்திரைகள்

வைட்டமின் சி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளதுதான் மீன் மாத்திரைகள். நம்முடைய ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளில் இதுவும் ஒன்று. மின் மாத்திரைகள் ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் இருதய செயல்பாட்டிற்கு உதவுகிறது. அதைத் தவிர்த்து மன அழுத்தம், மனப் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், சோர்வு போன்ற அனைத்தையும் தடுக்கிறது.

தியானம் மற்றும் உடற்பயிற்சி

நம்முடைய செயல் திறன், சிந்தனைத் திறன் மற்றும் ஞாபக சக்தி போன்ற அனைத்தையும் அதிகரிப்பதற்கு நாம் எப்போதும் நம் மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு நாம் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். அதேபோல் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளில் நம்மால் முடிந்த சிறிய வகை உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக உடல் ஆற்றல் அடைந்து மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்

நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் நம்முடைய உணவு முறைகள் முற்றிலுமாக மாறுகிறது. இதனால் உடல் பருமன் ஒபேசிடி, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோல் உடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும் பொழுது உங்களின் சிந்தனை திரன் இயற்கையாகவே செயலிழக்கிறது. இதை அறிந்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எப்போதும் கொழுப்புகள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அதேபோல் உடல் எடையை எப்போதும் பராமரிக்க வேண்டும்.

மேலும் படிக்க – மனோதத்துவ நிபுணர்களிடையே அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்..!

மதுபானத்தை குறைக்கவும்

நம்முடைய உடல் மற்றும் மூளையின் செயல்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் சக்தி மதுபானத்திற்கு உண்டு. குடித்த பிறகு நாம் இயற்கையாகவே நடக்கும் செயல்களை அடுத்த நாள் மறந்து விடுகிறோம், இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக நம்முடைய சிந்தனைத்திறன் முற்றிலுமாக பாதிப்படைகிறது. உங்கள் மூளையில் தேவையற்றவையை அழிக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது, ஆனால் நாம் தொடர்ந்து குடிப்பதன் மூலமாக அந்தத் தன்மையின் செயல்பாடு மாறுபட்டு தேவையானவற்றையும் மறக்க செய்கிறது. மதுப்பழக்கம் தவிர்த்து எந்த ஒரு தீய பழக்கங்கள் இருந்தாலும் அதை படிப்படியாக குறைத்து உங்கள் சிந்தனை திறனை அதிகரியுங்கள்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் உடற் பயிற்சிகள் மூலமாக நம்முடைய ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அது உங்கள் வயது சார்ந்த உணவு முறைகள் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், போன்ற கேள்விகள் இருந்தால் ஞாபக சக்தியில் தேர்ச்சிபெற்ற வல்லுநர்களிடம் ஆலோசனை பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன