இயற்கை மருத்துவ குறிப்புகள்..!

  • by
some natural medical tips

இயற்கை நமக்கு ஏராளமான மூலிகைகள் பொருட்களை அளித்துள்ளது, இதை நம் முன்னோர்கள் சரியாக பயன்படுத்தி இன்றும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். நம்முடைய சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே அவர்கள் அக்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார்கள். ஆனால் இன்று நாம் பசிக்காக தேவையில்லாத மசாலா பொருட்களை அதனுடன் கலந்து அதன் மருத்துவ குணத்தை முழுமையாக அழித்து வருகிறோம். இந்த தவறை நாம் திருத்திக் கொண்டு சமையலறையில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை வைத்து நம்மை எப்படி ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காணலாம்.

நெல்லிக்காய்

கிராமப்புறங்களில் இருப்பவர்களின் எல்லோரும் வீட்டிற்கு வெளியே நிச்சயம் நெல்லிக்காய் மரம் இருக்கும். அதில் இருக்கும் நெல்லிக் காயை பறித்து அப்படியே சாப்பிடுவதன் மூலமாக அவர்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதைத் தவிர்த்து எப்பேர்ப்பட்ட தோல் வியாதிகளாக இருந்தாலும் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய சரும பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மிக மலிவான விலையில் கிடைக்கும் நெல்லிக்காயை வாங்கி அதன் முழு பயனையும் பெறுங்கள்.

மேலும் படிக்க – மருத்துவர்கள் மற்றும் காவலாளர்கள் செய்யும் தியாகம்..!

சோற்றுக் கற்றாழை

அதேபோல் தெருவோரங்களில் பராமரிப்பு இல்லாத சூழ்நிலைகளிலும் அதிகளவில் விளையக் கூடியது தான் இந்த சோற்றுக் கற்றாழை செடிகள். இந்த கற்றாழையின் நடுவில் இருக்கும் ஜல்லை தனியாக எடுத்து அதை மோருடன் கலந்து தினமும் குடிப்பதன் மூலமாக அல்சர் போன்ற வியாதிகள் குணமாகும். அதைத் தவிர்த்து உங்கள் உடலை மிகக் குளிர்ச்சியாகவும் மற்றும் மூலம் போன்ற பிரச்சினைகளில் தாக்கத்தை குறைக்கவும் உதவும்.

வெந்தயம்

வெந்தியம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. எனவே மாதவிடாய் போன்ற சமயங்களில் ஏற்படும் வயிற்றுவலியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு பெண்கள் அதிக அளவில் வெந்தயத்தை உட்கொள்வார்கள். வெந்தயத்தை பொடியாக்கி அதை நீரில் கலந்து தினமும் குடிப்பதன் மூலமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூவை நன்கு காயவைத்து அதை பொடியாக்கி நம் தலையில் சீக்காயுடன் கலந்து தேய்த்து குளிப்பதன் மூலமாக நமது உடல் குளிர்ச்சி அடையும், இதைத் தவிர்த்து பொடுகுத் தொல்லை இருப்பவர்களின் பிரச்சினையை தீர்க்கும். முடி கொட்டுதல் மற்றும் முடி நிறம் மாறுதல் போன்ற அனைத்து பிரச்சினை தீர்க்கும் தன்மை இந்த செம்பருத்தி பொடிக்கு உண்டு. அதைப்போல் கண்களில் ஏற்படும் அசௌகரியம் மற்றும் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற அனைத்தையும் செம்பருத்தி பொடியை பயன்படுத்தி போக்க முடியும்.

தேனின் மகிமை

இயற்கை மூலமாக நமக்கு கிடைக்கும் இன்னொரு மிக முக்கியமான மூலிகைப் பொருள் தேன். இதை தினமும் வெந்நீரில் கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் இது கரைக்கும். இதைத் தவிர்த்து உங்களை ஒள்ளியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். இதேபோல் நாட்பட்ட இருமல் மற்றும் சளி போன்றவைகளை குறைக்கும், என அனைத்திற்கும் மேலாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – கொரானா காலத்தில் விழிப்புணர்வு அவசியம்

குப்பைமேனி சாறு

மூச்சு விட முடியாமல் கஷ்டப்படும் முதியவர்கள் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படும் குழந்தைகள் என எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பதுதான் இந்த குப்பைமேனி சாறு. குப்பை மேனி இலையில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும், பின்பு அதை சளி அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் பிறகு வாந்தியின் மூலம் எல்லா சலிகளும் வெளியேறும்.

இதைத்தவிர்த்து மஞ்சள், மிளகு, சுக்கு, இஞ்சி, பூண்டு என ஏராளமான மூலிகை பொருட்கள் நம் சமையலறையில் இருக்கின்றன இவை அனைத்தும் சரியாக பயன்படுத்தி உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை அவ்வப்போதே போக்கிக்கொள்ள முடியும். இனிமேலாவது நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழிமுறைகளை அப்படியே பின் தொடர்ந்து நம்மையும், நம்மின் எதிர்காலத்தையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன