உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய உணவுகள்.!

some healthy food items to keep in your fridge

குளிர்சாதன பெட்டி என்பது நம் ஆரோக்கியமான உணவுகளை வைப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில் மருந்து மாத்திரைகளை பத்திரமாக வைப்பதற்காகவே இதைப் பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் உணவுகளை இதில் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதற்க்காக் இதை வாங்கி பயன்படுத்துகிறோம், அதிலும் நாம் அதிகளவில் பழங்கள் காய்கறிகளை வாங்குவது என்றால் அது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் வைத்து விடுகிறோம். ஆனால் இப்போது இருக்கும் கால கட்டங்களில் நாம் நமது குளிர்சாதனப் பெட்டியை ஒரு நவீன குப்பை தொட்டிகள் ஆகவே பயன்படுத்துகிறோம். இதைத்தவிர்த்து நம் குளிர்சாதனப்பெட்டியில் நமக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளை வைப்பதுதான் சரி.

குளிர்சாதன பெட்டியில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை வைக்கவேண்டும் என பல மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளார்கள். இது உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். வெட்டப்படாத காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதினால் இதை கெட்டுப்போகாமல் பார்ப்பதற்காக சேமித்து வைக்கலாம்.

மேலும் படிக்க – குழந்தைகளின் சளி, இருமலுக்கு குட் பாய் சொல்லுங்கள்..!

வைட்டமின்கள் நிறைந்த பழங்களை இதில் சேமித்து வைக்கலாம் அதேசமயத்தில் எந்த பழத்தையும் பாதி உண்டு விட்டு மீதியை இதில் வைப்பதை தவிர்க்க வேண்டும் முழுமையான பழங்களையே வைக்க வேண்டும். பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி ஃப்ரூட் சாலட் ஆகவும் இதில் வைக்கலாம். ஆனால் ஃப்ரூட் சால்ட் செய்தவுடன் அதன் மேல் ஒரு காற்று நுழையாதபடி ஒரு கவரில் போட்டு கட்டிக் கொள்வது நல்லது.

காய்கறிகள் சாலட் இதையும் குளிர்சாதனப் பெட்டியில் நீங்கள் சேமித்து வைக்கலாம். கொழுப்புகள் குறைவாக உள்ள பழங்களை இதில் சேமித்து வைக்கலாம் மற்றும் பாதாம் பட்டர் போன்றவைகள் சேமித்து வைப்பதற்கான சிறந்த இடம் இது.

ஐஸ்கிரீம் டி, சோயா மில்க், பாதாம் மில்க் என விரைவில் கெட்டுப் போகும் பொருட்களை இதில் வைக்கலாம் ஆனால் இது அனைத்தும் சரியான குளிர் நிலையில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அது கெட்டுப் போக நீங்களே காரணமாகி விடுகிறார்கள்.

மேலும் படிக்க – கவர்ச்சியான உடலமைப்பை சினிமா பிரபலங்கள் எப்படி பெறுகிறார்கள்?

இவைகள் அனைத்தும் உங்கள் கண்முன்னே படும்படி வைக்க வேண்டும் எப்போது எல்லாம் உங்களுக்கு ஊட்டச் சத்துக்கள் தேவையோ அப்போதெல்லாம் இதில் இருக்கும் ஏதாவது ஒன்றை எடுத்து பயன்படுத்துமாறு உங்கள் பிள்ளைகளுக்கும் அறிவுறுத்துங்கள். இந்த உணவுகளில் வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், அயன் என ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன. இது போன்ற பொருட்களை வைப்பதற்காகவே குளிர்சாதனப் பெட்டியை உருவாக்கினார்கள். ஆனால் நாம் பாதி சமைத்த உணவுகள், தேவையற்ற பொருட்களை வைத்து விடுகிறோம். இதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை வைக்க பழகுங்கள்.

1 thought on “உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய உணவுகள்.!”

  1. Pingback: குளிர்காலத்தில் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன