பிரபலமான யோகா நிலையும் அதன் நன்மைகளும்..!

  • by
some famous yoga poses and their health benefits

உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பதற்கான சிறந்த வழி எதுவென்று கேட்டால் அனைவரும் யோகாவை தான் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த யோகாவில் ஏராளமான நிலைகள் உள்ளது, அதில் மிகவும் பிரபலமான நிலையும் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் இந்த பதிவில் காணலாம்.

மலசனா

இந்த யோகாவை பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும், சற்று கடினமான நிலைதான் இது. இதை சிறிது நேரம் செய்தாலே நம்முடைய முதுகு, இடுப்பு, கைகள், கால்கள் போன்ற அனைத்துப் பகுதிகளும் உறுதியாகும். நாம் நேராக நின்றுகொண்டு அப்படியே இடுப்பை நிமிர்த்தியபடி தரையில் கால்களை விரித்தபடி அமரவேண்டும். பின்பு இரு கைகளையும் சாமியைக் கும்பிடுவது போல் வைத்துக் கொண்டு மீண்டும் எழுந்திருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக இந்த நிலை நிறைவடையும்.

மர்ஜைசனா

இந்த நிலையை பார்ப்பதற்கு பூனை அல்லது பசுமாட்டை போல் இருக்கும். நாம் தரையில் கவிழ்ந்து பூனையைப் போல் நிற்க வேண்டும். இந்த நிலையை செய்யும்போது நம்முடைய முதுகை மிகவும் நேராகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நம்முடைய தலையை மேல் நோக்கி பார்க்க வேண்டும். இந்த நிலையை சிறிது நேரம் செய்தாலே உடலுக்குள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அதே முக்தா சுவசனா

இந்தநிலை நம்முடைய முழு உடலையும் புத்துணர்ச்சியாக்க உதவும், அதற்கு நாம் நேராக நின்று கொண்டு நம்முடைய இரு கைகளையும் முன்னோக்கி தரையை நோக்கி வைக்க வேண்டும். பிறகு உங்கள் பின்புறத்தை நேராக நிமிர்த்தி உங்கள் உடலை மொத்தமாக முக்கோண வடிவில் வைக்க வேண்டும். இந்த நிலையை செய்வதில் சில சிக்கல்கள் இருந்தாலும் இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலமாக அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உங்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரும்.

மேலும் படிக்க – மனோதத்துவ நிபுணர்களிடையே அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்..!

பலசனா

இந்த நிலையை குழந்தை நிலை என்பார்கள், நாம் குழந்தையைப் போல் தரையில் கால்களை மடித்து அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய உடலை முன்னோக்கித் தரையில் படும்படி வைத்து நம்முடைய இரு கைகளையும் தரையில் படும்படி நேராக நிமிர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் உங்கள் உடல் முழுவதும் பாதியாக வலையும், இதனால் உங்கள் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விபரீதகரணி

இந்த நிலை உங்கள் கால்களையும் மற்றும் உடல் உறுப்புகளையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதை தவிர்த்து உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கும். இதை செய்வதற்கு நாம் தரையில் வானத்தை நோக்கி படுத்துக்கொள்ள வேண்டும், பின்பு நம்முடைய இரு கைகளையும் நம்முடைய முதுகுப் பகுதியை கூன்றி முதுகுப் பகுதியை அப்படியே மேலே தூக்க வேண்டும். இப்போது உங்கள் கால் மேலே நேராக இருக்க வேண்டும். இந்த நிலையை சிறிது நேரம் செய்தாலே உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணரலாம்.

தடசனா

உங்கள் உடல் வலைவை சரியாக வைப்பதற்கும், ரத்த ஓட்டத்தை சீராக செயல்படுத்தவும் மற்றும் உங்களுக்கு இருக்கும் அனைத்து அழுத்தத்தையும் குறைப்பதற்கும் இந்த நிலையை நாம் பயன்படுத்தலாம். இது மிகவும் எளிமையான நிலையாகும், நாம் நேராக கைகள், கால்கள் அனைத்தையும் ஒட்டியவாறு நின்று கொள்ள வேண்டும். பிறகு எந்த சிந்தனையும் இல்லாமல் மூச்சை இழுத்து விட வேண்டும். இதைத்தொடர்ந்து செய்தாலே உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும்.

மேலும் படிக்க – இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்க வேண்டும்..!

இதைத் தவிர்த்து பதக்கோசனா, சவாசனம் போன்றவைகளும் மிகவும் வலிமையான ஆசனமாகும். பாதக்கோசனாவில் நாம் தரையில் அமர்ந்து கொண்டு நம்முடைய இரு கால்களையும் உள்ளங்கள் ஒட்டும் படி வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் அதே நிலையில் இருந்தாலே உங்கள் உடலுக்கேற்ற அனைத்தும் கிடைத்துவிடும். அதேபோல் சவாசனத்தை நாம் வெறுமனே தரையில், மேல் நோக்கி படுத்து உடலை தளர்த்தி கொண்டாலே போதும். இதை தினமும் செய்து வந்தாலே உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். இதனால் ஏற்படும் சந்தேகங்களை சிறந்த வல்லுநர்களிடையே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன