ஜோதிடர்களிடையே தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள்..!

  • by
some common questions which are been asked to astrologers

எதிர்காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அறியக் கூடியவர்கள் தான் ஜோதிடர்கள். நம் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கிறோம். ஆனால் அந்த பாதிப்பின் மூலமாக நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை மருத்துவர்கள் கணிக்க மட்டுமே முடியும், அதுவே ஜோதிடத்தில் உங்கள் எதிர்காலத்தில் உங்கள் நிலை எப்படி இருக்கும் போன்றவற்றை துல்லியமாக சொல்லப்படுகிறது. இது போன்றவற்றில் ஒரு சிலருக்கு சில சந்தேகங்கள் எழும்புகிறது, அதில் அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள், அதன் பதில்களை இங்கே காணலாம்.

நாங்கள் ஏன் ஜோதிடத்தை நம்ப வேண்டும்

ஜோதிடத்தில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளது, அதில் முதல் வகை உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உங்களுக்குப் புரிய வைக்கும் மற்றும் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது போன்ற யோசனைகளை உங்களுக்கு அளிக்கும். எந்த செயலை தொடங்குவதாக இருந்தாலும் அதை சரியான நேரத்தில் தொடங்க தூண்டும். இரண்டாவது வகை ஆன்மிக வழியாகும், இது உங்கள் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக புரிய வைக்கும்.

தனிப்பட்ட முறையில் ஜோதிடரிடம் இருந்து ஆலோசனை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்

ஜோதிடம் உண்மை என்பதற்கு ஆதாரம் உண்டா

ஒரு சிலர் ஜோதிடத்தை விட அறிவியலில் ஆர்வம் அதிகமாக கொண்டுள்ளார்கள்‌. இருந்தும் அறிவியலில் சொல்லப்படும் அனைத்தும் எப்படி மாறுகிறதோ அதேபோல் சில சமயங்களில் ஜோதிடத்தில் கூறப்படுவதும் மாறலாம். சரியாக ஜோதிடத்தை கணிக்க தெரிந்தவர்களால் மட்டுமே அதை துல்லியமாக சொல்ல முடியும், இல்லையெனில் ஒருசில தவறுகள் நிகழும்.

இரண்டு விதமான ஜோதிடர்கள் ஏன் வெவ்வேறு கணிப்புகளை சொல்கிறார்கள்

எப்படி இரண்டு விதமான மருத்துவர்கள் இரண்டு விதமான சிகிச்சை முறைகளை பயன்படுத்துகிறார்களோ, அதேபோல் ஜோதிடர்களும் தங்களுக்கான தனி வழியை பயன்படுத்தி ஜோதிடத்தை கணிக்கிறார்கள். சில சமயங்களில் கணிப்புகள் தவறும் போது இந்த தவறுகளை மேற்கொள்பவர்கள் ஜோதிடர்களே., ஜோதிடம் அல்ல.

மேலும் படிக்க – எண் கணிதம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும்..!

ஜோதிடம் எதிர்காலத்தை கணிக்குமா

ஒரு சில ஜோதிடர்களால் உங்கள் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க முடியும், அதற்கு உங்கள் கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை அவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். உங்கள் நிகழ்காலத்தை பொறுத்தே உங்கள் எதிர்காலம் மாறுகிறது, எனவே உங்களை முழுமையாக புரிந்த ஜோதிடர்களால் மட்டுமே உங்கள் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க முடியும். அதை தவிர்த்து உங்களுடைய கடந்து பிறவியைப் பற்றியும் அவர்களால் கூற முடியும்.

பிறந்த நாள், நேரம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது

ஜோதிடத்தை துல்லியமாக கணிப்பதற்கு பிறந்த நாள், நேரம் மற்றும் வருடம் முக்கியமானதாகும், இதுபோன்ற எந்த சான்றிதழ்களும் இல்லாதவர்கள் கைரேகை மூலமாக அவர்கள் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

உண்மையான ஜோதிடரை எப்படி கண்டுபிடிப்பது

சமீபத்தில் ஏராளமான போலி ஜோதிடர்களை மக்கள் கண்டறிந்துள்ளார்கள். இதுபோல் நீங்களும் போலி ஜோதிடர்களை கண்டறிய முடியும், ஒரு உண்மையான ஜோதிடர் தலைமுறை தலைமுறையாக ஜோதிடத்தில் ஈடுபடுவார்கள். இல்லையெனில் ஜோதிடத்தை சிறந்த பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இது எதுவும் இல்லாமல் புதிதாக ஒரு ஜோதிடர் நீங்கள் இருக்கும் இடத்தில் முளைத்தால் அவரைப் பற்றி அறிந்த பிறகே ஜோதிடம் பார்க்க செல்லவேண்டும். அனைத்திற்கும் மேலாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மூலமாகவே நாம் உண்மையான ஜோதிடரை அறிய முடியும்.

இரட்டையர்கள் வாழ்க்கை ஏன் மாறுகிறது

இரட்டையர்களுக்கு ஒரே விதமான ராசி, நட்சத்திரம் அமைகிறது. இருந்தும் அவர்கள் கடந்த பிறவியில் செய்த செயல்களின் மூலமாக தற்போது இருக்கும் பிறவி மாறுபடுகிறது. அதைத் தவிர்த்து காஸ்மிக் எனர்ஜி போன்றவைகள் வேறு படுவதினால் ஒவ்வொரு மனிதர்களுக்கு ஏற்றார் போல் அவர்களின் செயல்கள் மாறுபடும்.

ஆயுட்காலம் குறைவாக காட்டப்படும் ரேகையின் பாதிப்பு எப்படி இருக்கும்

வாழ்க்கையின் ஆயுட்காலத்தை காட்டப்படும் ரேகை ஒருவரின் உடலில் இருக்கும் சக்திகளை பொறுத்தது. உங்கள் உடலில் கால்சியம், அயன் மற்றும் மினரல்ஸ் குறைவாக இருந்தால் அதன் வளர்ச்சி குறைகிறது. இதுவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. இருந்தும் இருதய ரேகை, கைரேகை போன்றவைகளில் மொத்த கோர்வையாகவே உங்கள் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க – மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்திற்கு உடனடி தீர்வு..!

ஆண் மற்றும் பெண்களின் கைகளை ஏன் மாற்றி பார்க்கிறார்கள்

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆண் மற்றும் பெண் இருவரின் கைகளையும் ஆராய்ந்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தை சரியாக கணிக்க முடியும். பெண்களின் இடது கையை பார்ப்பதும், ஆண்களின் வலது கையை பார்ப்பதும் உடனடி தீர்வுக்காக, மற்றபடி அது முழுமையான கணிப்பை தராது.

கடவுள் நம் வாழ்க்கையை ஏற்கனவே முழுமையாக தீர்மானித்து வைத்துள்ளார், ஆனால் நாம் செய்யப்படும் செயல்கள் மூலமாக நாம் எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒருசிலவற்றை மாற்ற முடியும். அதை மாற்றுவதற்கு நாம் எதிர்காலத்தை அறிந்திருக்க வேண்டும், அதற்காகவே ஜோதிடம் நமக்கு உதவுகிறது. எனவே எதிர்காலத்தில் நிகழ உள்ள அனைத்து பிரச்சனைகளையும் முன்கூட்டியே அறிந்து அதற்கான தீர்வுகளை அளித்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன