சருமத்தில் பிரச்சனையா..இதோ உங்களுக்கான தீர்வு..!

solution to all your skin related problems

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட முகத்தில் ஏதேனும் சரும பிரச்சினை ஏற்பட்டால் நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். வீட்டிலிருந்தபடியே இந்த சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட சில குறிப்புகளை இங்கே கொடுக்கிறேன். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சருமத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நாம் சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது ஆகும். இந்த சரும பிரச்சனையை சரி செய்வதற்காக கிடைக்கும் கிரீம்களை எல்லாம் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாகும். 

  • சருமம் சூரிய ஒளிபட்டு மிகவும் கரிய நிறத்தில் காணப்படும். இதை ஆங்கிலத்தில் டேன் என்று கூறுவார்கள். இதுபோன்று டேன் பிரச்சினைகளிலிருந்து விடுபட, தினமும் ஒரு தக்காளி சாறு எடுத்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.
  • சிலருக்கு இதழ்கள் மிகவும் வறண்டு காணப்படும். மேலும் பொலிவிழந்து கரிய நிறத்தில் காணப்படும். உங்களது இதழ்களை இயற்கையாகவே என முட்ட நீங்கள் வீட்டில் இருக்கும் பீட்ரூட் காயை பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் ஒரு துண்டை எடுத்து உங்கள் உங்கள் உதட்டில் தினமும் தடவி வந்தால் உதட்டில் இருக்கும் கருமை நிறம் மறைந்து ரோஜா இதழ் போன்ற நிறம் உங்களுக்குக் கிடைக்கும்.
  • நகங்களை பராமரிக்க தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சைபழம் கலந்து குடித்து வர நகங்களுக்கு பலன் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நகம் உடைதல் போன்ற பிரச்சினையும் குறையும். நகங்கள் பளபளப்பாக தெரிவதற்கு பாதாம் எண்ணெயை நகங்களின் மீது பூசி வரலாம்.

மேலும் படிக்க – சருமத்திற்கு சாக வரம் தரும் வைட்டமின் ஈ மாத்திரைகள்

  • முக அழகை மெருகூட்ட தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர முகம் பளபளப்பாக இருக்கும். 
  • முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவி வர முகச்சுருக்கம் மறையும்.
  • உடல் மினுமினுப்பாக ஜொலிக்க தினமும் இரவு தூங்கப் போவதற்கு முன் சிறிது தேன் குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர உடல் மினுமினுப்பு அடையும்.

மேலும் படிக்க – முகப்பரு உற்பத்திக்கு எதிராக செயல்படும் எண்ணெய்கள்..

  • சிலருக்கு கழுத்துப் பகுதி மட்டும் கருமையாக இருக்கும். எவ்வளவு தேய்த்துக் குளித்தாலும் அந்த கருமை நிறம் மாறாது. கழுத்தில் பராமரிப்பதற்கு சிறிதளவு ரோஸ்வாட்டர் சிறுது வெங்காயச்சாறு மற்றும் இரண்டு ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிது பயத்தம் மாவு கலந்து கழுத்தில் தேய்த்து 10 நிமிடம் நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கையில் ஈரமாக்கி கொண்டு கழுத்திலிருந்து தாடை நோக்கி பத்து நிமிடம் லேசாக மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்துவர கழுத்துப் பகுதியின் கருமை நிறம் மறைந்து சருமம் இயல்பு நிறம் கிடைக்கும். 
  • சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தூக்கம் இன்மை ஆகும். முதலில் நீங்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது உங்கள் கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும். கண்களுக்கு அடியில் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்தப் பொடியில் சிறிது தயிர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தொடர்ந்து போட்டு வர 30 நாட்களில் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைந்து சருமம் இயல்பு நிலை திரும்பும்.
  • பால் ஒரு இயற்கை மருந்து ஆகும். காய்ச்சாத பாலை தினமும் முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும். இவ்வாறு பாலை முகத்தில் தேய்த்து கழுவுவதன் மூலம் முகத்திலுள்ள எண்ணை பசை மறைந்து, இறந்த செல்கள் முற்றிலும் அகன்று முகம் பொலிவுடன் காணப்படும். தினமும் பாலுடன் அரைத்து வாழைப்பழத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் சுருக்கங்கள் ஏதுமின்றி இருக்கும். முகத்தில் ஏதேனும் கரும்புள்ளிகள் இருப்பின் அப்பால் நல்ல ஒரு மாய்ச்சுரைசர் ஆக செயல்படும். உடலில் ஏற்படும் வறட்சியை தன்மையைப் போக்கவும் பால் மிகவும் உதவுகிறது. 

மேலும் படிக்க – நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்.!

இவ்வாறு மேலே குறிப்பிட்டுள்ள அளவு குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வர உங்களுக்கு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். எந்த ஒரு செயலுமே தொடர்ந்து செய்வதன் மூலமே பலனை பெற முடியும். எனவே தொடர்ந்து இந்த குறிப்புகளை பயன்படுத்தி வந்தீர்களானால் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் ஒரு நல்ல அழகு குறிப்புகளோடு நான் உங்களை சந்திக்கிறேன் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன