சோலார் எனர்ஜியை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

advantages of using solar energy and its health benefits

90 சதவீத மக்கள் தங்களது வீட்டில் மின்சாரத்தை தான் பயன்படுத்தி வருகிறார்கள் இதற்கு நாம் மாதத்திற்கு குறைந்தபட்சம் 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை கட்டுகிறோம் ஆனால் இதுவே கோடை காலங்களில் நாம் 2000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டுகிறோம் அதுவே நாம் சோலார் எனர்ஜி உற்பத்தி செய்யும் கருவியை பொருத்தி விட்டால் இந்த செலவுகளை நம்மால் குறைக்க முடியும்

பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சூரியனிலிருந்து எடுக்கப்படும் சக்திகள் இந்த சோலார் எனர்ஜி கருவினுள் வந்து சேருகிறது இதை வைத்து நம் வீட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் மின்சாரத்தை அளிக்கமுடியும் இதை ஒருமுறை பொருத்திவிட்டால் போதும் வாழ்நாள் முழுவதும் நமக்கு இலவசமாக  மின்சாரத்தை பெற முடியும் ஆனால் இதை அமைப்பதற்கான விலை சற்று அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

சோலார் எனர்ஜி பயன்படுத்துவதன் மூலம் நம் மின்சாரதின் கட்டணத்தை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் எப்போதும் இது சூரியனிலிருந்து சக்தி எடுத்துக்கொண்டே இருக்கும் அதுவும் மதியம் 11 மணி முதல் மாலை 4 மணி வரை எது அதிகமான சக்திகளை எடுக்கும்

இதைக் கொண்டு நம் வீட்டில் பேட்டரிகளை அமைத்து இதிலிருந்து எடுக்கப்படும் சக்திகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம் இதனால் இரவு நேரங்களில் அல்லது நமக்கு மின்சாரம் அதிகமாக தேவைப்படும் நேரங்களில் நாம் சேமித்து வைத்த சக்திகளை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் இதனுடைய பேட்டரியின் விலை கொஞ்சம் அதிகமான விலையில் கிடைக்கின்றது

பெருநகரங்களில் அவ்வப்போது ஏற்படும் மின்சாரத்தடை அல்லது புயல் மற்றும் சூறாவளி காற்றினால் ஏற்படும் மின்சார தடைகளில் இருந்து நமக்கு இது விடுதலை அளிக்கிறது மற்றவர்கள் வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்தில் கூட உங்கள் வீட்டில் எல்லா பொருட்களிலும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும்.

மேலும் படிக்க – திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

இதில் இருக்கும் ஒரே பிரச்சனை மழைக்காலம் அல்லது சூரியன் குறைவாகத் தோன்றும் நேரங்களில் மின்சாரத்தை இது உள் வாங்காது இந்த சமயங்களில் நாம் சேமித்து வைத்த மின்சாரங்கலள் நமக்கு உதவும்

மின்சாரம் உற்பத்தி செய்வதினால் ஏற்படும் மாசுக்களை இது பல மடங்கு குறைகிறது எனவே எதிர்காலத்தில் நாம் சோலார் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டாள் உலகம் செழிப்பாகவும் இயற்கை வளங்களை கொண்டதாகவும் இருக்கும்.

1 thought on “சோலார் எனர்ஜியை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்”

  1. Pingback: advantages of doing facial in winter season and its health benefits

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன