சோசியல் மீடியா பயன்பாடு அதிகரித்துள்ளது..!

  • by
social media has been increased during this lockdown

நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதினால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை நிகழ்ந்துள்ளது. இதனால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் தாக்கத்தினால் மக்கள் தங்கள் பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்களை பின் தொடர்ந்து வருகிறார்கள். அனைவரும் எந்த ஒரு வேலையும் செய்யாமல் வீட்டில் தனிமையில் இருப்பதினால் சமூக வலைதளங்களின் பயன்பாடு கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

தொலைக்காட்சி

காலை 8 மணி முதல் 9 மணி வரை கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைக்காட்சியை பார்க்கிறார்கள். இவர்கள் அனைவரும் காலையில் ஒளிபரப்பப்படும் செய்திகளை பின்தொடர்கிறார்கள். அதைத் தவிர்த்து தொலைக்காட்சியைப் பார்க்கும் சதவீத மெதுவாகக் குறைகிறது. பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சமூக வலைத்தளங்களில் முழுக தொடங்கிவிடுகிறார்கள்.

மேலும் படிக்க – கட் ஷாட் ஆடும் சச்சினின் அடுத்த கட்..!

இணையதளம்

இணையம் வசதி உள்ள அனைத்து செல்போன்களிலும் 87% பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து 300 பேருக்கு மேல் வைத்து செய்யப்பட்ட சோதனையின் முடிவில் இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களை விட தற்போது அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

வலைதள வதந்திகள்

சராசரியாக வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் அல்லது வேலை இல்லாமல் தொலைபேசியை பயன்படுத்துபவர்கள் கிட்டத்தட்ட 150 நிமிடங்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார்கள். இவர்கள் அனைவரும் தற்போது செய்யப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 300 நிமிடங்களுக்கு மேல் இணையதளத்தில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவதற்கு என்று ஒரு தனி கும்பல் இருக்கிறது. இதனால் தற்போது பிறப்பிக்கப்பட்ட சட்டத்தினால் இதுபோன்ற வதந்திகள் பரவுவது வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க – மனிதவளத் துறையின் கொரானா வழிகாட்டுதல்கள்!

இதைத் தவிர்த்து மக்கள் பொழுதுபோக்கிற்காக யூடியூப், டிக் டோக், ஹலோ போன்ற செயலியையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக ஒரு நாளைக்கு சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவழிப்பார்கள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதை தவிர்த்து இணையம் மூலமாக வேலை செய்பவர்கள் மற்றும் திரைப்படங்களை பார்ப்பவர்கள் போன்றவர்கள் மூலமாக கடந்த சில வாரங்களாகவே இணையதள சேவை பயன்பாடு அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன