2022ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்..!

  • by
social distancing should be followed till 2022

நியூயார்க் நகரத்தில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும் நடைமுறையிலிருக்கும் இந்த சமூக இடைவெளியை 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்தால் மட்டுமே இந்த கொரோனா வைரஸ் கிருமியை நம்மால் முழுமையாக அழிக்க முடியும் என்று ஹாவர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் மீண்டும் உருவாகும் என்று இவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவின் நிலை

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கினாலும் இதன் தாக்குதல் உலகம் முழுக்க இருக்கும் எல்லா நாடுகளிலும் அதிக அளவில் பரவி உள்ளது. அதிலும் இதன்மூலமாக முதன்முதலில் இட்டாலி பெரிதாக பாதிப்படைந்தது அதைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியது. ஆனால் இது அனைத்திற்கும் மேலாக இந்த வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்த நாடாகத் திகழ்வது அமெரிக்கா. ஊரடங்கை இன்றுவரை சரியாக அமல்படுத்தாத காரணத்தினால் அமெரிக்காவில் கொரோனாவின் பரவல் மிகப்பெரிய அளவில் உருவெடுத்தது. இன்றுவரை கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – இருமபுச் சத்துகளை உடலில் அதிகரிக்க வேண்டும்!

உயிரிழப்புகளை தடுக்க

அமெரிக்கர்கள் தங்கள் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்வதற்காக ஊரடங்கை பின் தொடராமல் இருக்கிறார்கள். இதன் மூலமாக இன்று வரை கிட்டத்தட்ட 28 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்துள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த வைரஸ் தொற்றிக்காண மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். ஆனால் இதைக் கண்டு பிடிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன அதுவரை உலகம் முழுக்க இருக்கும் மக்கள் மேலும் இரண்டு வருடம் சமூக இடைவெளியை பின் தொடர வேண்டும் என்று ஹவர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளார்கள்.

மாற்று மருந்து

இந்த வைரஸ் தொற்றுக்காண மருந்தை இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து விதமான நிறுவனங்கள் இந்த மருந்துக்கான சோதனைகளை செய்து வருகிறது. இருந்தாலும் இதை கண்டுபிடித்து அதை பரிசோதனை செய்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து விடும். எனவே அதுவரை இந்த வைரஸ் தொற்று மக்களை தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் 2022 ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – ஒற்றுமையான ஊரடங்கால் கொரானாவை வெல்வோம்!

இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் இந்த இடைவெளியை தொடர்ந்து வாழ வேண்டும், இல்லையெனில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பால் நம் உலகில் மனித இனம் மிகப்பெரிய அளவில் சேதமடையும். அதுவரை மக்கள் கையுறை, முகக் கவசம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின் தொடர்ந்து இந்த வைரஸ் தொற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன