நீங்கள் தூங்கும் நிலையை வைத்து உங்கள் காதல் வாழ்க்கை என்ன சொல்கிறது

your sleeping position will tell about knid of love you have

ஆண் பெண் உறவில் மனநிலை மாற்றம் எப்போதும் இருக்கும் ஆனால் அவர்கள் விழித்திருக்கும் நேரங்களில் தாங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று வார்த்தைகளிளும் செயல்களின் சொல்லிவிடுவார்கள் ஆனால் இவர்கள் தூங்கும் நிலையை பொருத்தே இவர்கள் ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை நீங்கள் தூங்கும் விதத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

பின்புற கட்டியணைத்தல்

உங்கள் துணையை பின்புறத்திலிருந்து கட்டி அணைத்து உறங்குகிறார்கள் என்றால் அவர்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய எண்ணத்தில் உள்ளீர்கள் என்பதற்கான அர்த்தம் ஒரு ஆண் ஒரு பெண்ணின் பின்புறமாக அவளை அரவணைத்து உறங்கினான் என்றால் அந்த ஆண் உங்களை எப்போதும் பாதுகாப்பாகவும் எந்த ஒரு துன்பத்திற்கு உள்ளாக்காமல் சந்தோஷமாக வைக்கும் எண்ணத்தில் உங்களுடன் வாழ்கிறார் என்பதற்கான அர்த்தமாகும் அதுவே ஒரு பெண் ஒரு ஆணை அதுபோல் கட்டியணைத்து உறங்கினாள் என்றால் இவன் எனக்கு மட்டும்தான் வேறு யாரும் இவரை நெருங்க கூடாது என்ற எண்ணம் கொண்டதாகும்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

ஒருவரின் ஒருவர் முதுகு இணைந்து தூங்கும் நிலை

இதுபோல் உறங்கும் தம்பதியர்கள் அல்லது காதலர்கள் தங்கள் துணையுடன் மிகவும் சவுகரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது அர்த்தமாகும் இது போன்றவர்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக தன் வாழ்க்கையை தன் துணையுடன் கடந்து  வந்திருப்பார்கள் தனக்கென ஒரு உறங்கும் விதத்தைக் கொண்டு தன் துணையும் தன் அருகில் அன்புடன் இருக்கவேண்டும் என்ற அந்த எண்ணத்தில் வழங்கப்படும் நிலைதான் இது.

அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும் நிலை

உங்கள் காதலன் அல்லது காதலியை உங்கள் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு எந்த இடத்தையும் தராமல் அவரை முழுமையாக உங்கள் படுக்கையை ஆக்கிரமித்து விட்டார்கள் என்றால் இது ஒரு நல்ல காதல் வாழ்க்கைக்கான அறிகுறியாக இருக்காது இது போன்றவர்கள் உங்களைப் பற்றி எண்ணாமல் தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்து கொண்டு தங்கள் சுகத்திற்காக வாழ்பவராக இருப்பார்கள்.

மேலும் படிக்க – நட்புக்கு இலக்கணம் இவர்கள்தானுங்க, இருந்தா இவங்களைப் போல் இருக்கனும்.!

கால்கள் பின்னப்பட்டு  உறங்கும் நிலை

நீங்கள் உறங்கும் போது உங்கள் துணையுடன் கால்கள் பின்ன பட்ட நிலையில் உறங்கினால் நீங்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக சார்ந்து இருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும் எதை செய்தாலும் உங்கள் துணைவியுடன் ஆலோசித்த பின்பே நீங்கள் முடிவு எடுக்கும் எண்ணத்தை கொண்டவர்கள் இவர்கள்..

உங்கள் மேல் சாய்ந்து உறங்கும் நிலை

உங்கள் துணை உங்கள் மார்பின் மேல் சாய்ந்து உறங்குவர்களாக இருந்தால்  அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற அர்த்தமாகும் இதுவே ஒரு ஆண் ஒரு பெண்ணின் மடியில் அமர்ந்து உறங்கினார் என்றால் அவனுக்கு அரவணைப்பு தேவை என்பது அர்த்தமாகும்.

மேலும் படிக்க – காதலிப்பவர்கள் கவனத்துடன் உறவை கொண்டு செல்ல வேண்டும்!

உங்கள் துணையுடன்  எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொருத்துதான் உங்கள் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது நீங்கள் இருவரும் எப்படி உங்கள் நாட்களைக் கழக்கிறீர்கள் இதைப் பற்றி பேசுகிறீர்கள் உங்கள் இருவரில் எண்ணங்கள் எதை நோக்கி இருக்கிறது என்பதை தெளிவான புரிந்துகொள்ளும்  தம்பதியர்கள் தான் தங்களது காதலை வெல்கிறார்கள்.

1 thought on “நீங்கள் தூங்கும் நிலையை வைத்து உங்கள் காதல் வாழ்க்கை என்ன சொல்கிறது”

  1. Pingback: do this in your marriage life to boost your love between you and partner

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன