தினமும் இந்த திசையில் தூங்குங்கள்..!

sleeping position decides your health

மனிதனின் ஆரோக்கியத்திற்க்கு மிக முக்கிய பங்கை வகிப்பது தூக்கம். ஒரு மனிதன் சராசரியாக 7-8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இதைப் பொறுத்து தான் அன்றைய தினத்தில் அவருக்கான ஆற்றல்கள் கிடைக்கின்றன. நாம் குறைந்த அளவில் உறங்குவதால் நமக்கு கிடைக்கப்படும் ஆற்றல் குறைவாக கிடைக்கிறது. இதனால் நாம் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் மிக விரைவில் சோர்வடைகிறேம், இதை தடுப்பதற்கு நாம் தினமும் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

வாஸ்து சாஸ்திரப்படி எப்படி வீடுகளைக் கட்டுகிறோம் அதேபோல்தான் வாஸ்து பிரகாரம் நாம் எந்த திசையில் உறங்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். இதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்க முடியும். எனவே நீங்கள் எந்த திசையில் உறங்கினால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை காணலாம்.

மேலும் படிக்க – அவசர வாழ்க்கையை தடுப்பதற்கான வழிகள்..!

ஒருவர் தெற்கு திசையில் தலைவைத்து தூங்குவதன் மூலம் அவருக்கு புகழ், செல்வம், வெற்றி போன்றவைகள் தேடி வரும். இவர்கள் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசையில் கால் நீட்டி தூங்குவது மிகவும் நல்லது.

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, இந்த கிழக்கு திசையில் தலை வைத்து படுத்து உறங்குவதன் மூலம் உங்களுக்குள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் தருவது மட்டுமல்லாமல் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தைத் தரும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

கிழக்கு திசையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உறங்குவது மிகவும் நல்லது. ஏனென்றால், இந்த திசையில் தலைவைத்து தூங்குவதன் மூலம் உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். அதே போல் அவர்களின் மூளை தூக்கத்தில் கூட செயல்படும். இதனால் எல்லா விஷயத்தையும் நல்ல சிந்தனையுடன் எதிர்கொள்வார்கள்.

மேற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் நடக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் புதிய நாளாகவே தோன்றும். இந்த திசையில் உறங்குவதன் மூலம் உங்களுக்கு செல்வம், புகழ் கிடைக்கும். பொதுவாகவே யாரொருவர் இந்த திசையில் உறங்குகிறார்களே அவர்கள் பணக்காரர்களாகவும், புகழ் உடையவர்களாகவும் வாழ்வார்கள்.

மேலும் படிக்க – வாழ்ந்து பாருங்கள் வானம் உங்கள் வசம் வரும்

நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் உறங்கக்கூடாத திசை வடக்கு திசை. இந்த திசையில் வழங்குவதன் மூலம் உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். அதைத் தவிர்த்து செல்வம், நிம்மதி, வேலை என எல்லாம் உங்களை விட்டு சென்றுவிடும். எனவே தெரியாமல் கூட வடக்கு திசையில் தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும்.

ஒருவர் தூங்குவதற்கு சரியான திசையில் படுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் படுக்கும் பொழுது நமது கால், வீட்டின் வாசல், கதவுகள், ஜன்னல் மற்றும் கழிவறை போன்ற இடத்தை நோக்கி நீட்டியவாறு உறங்கக்கூடாது. இனிமேல் திசைகளை அறிந்து சரியான முறையில் உறங்குவதன் மூலம் உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன