சரும பொலிவிற்கு இதனை செய்யுங்கள்

  • by

சரும பாதுகாப்பு இன்றைய  காலத்தில் நாம் நிறைய செலவுகள் செய்கின்றோம்.  அழகு சாதனப் பொருட்கள் வாங்கி நிறைய பயன்படுத்தி இருப்போம். 

சரும பாதுகாப்பிற்கு என நாம் பயன்படுத்தும் ரிமெடிகள் எல்லாம் கெமிக்கல்கள் மயமாக காட்சி தருகின்றன.   நாம் பயன்படுத்தும் கெமிக்கல்கள் அனைத்தும் ஒரு கால கட்டத்தில் பக்கவிளைவை ஏற்படுத்துகின்றது. ஆனால்  பக்க விளைவை தடுத்தல் என்பது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: டெட் செல்களை நீக்கி சருமம் அழகுப் பெற இதுபோதும்

முகப்பரு: 

முகப்பருவினால் அவதிப்படுவார்கள் வெது வெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.  முகப்பருக்கள் அதிக வெப்பத்தினால் வரும். முகப்பருவானது உடலில் ஏற்படும் அதிக எண்ணெய்பசையினால் ஏற்படுகின்றது.  முக்ப்பருவை சருமத்தை கீளின் மற்றும் கிளியர் ஸ்கின்னாக மாற்ற நாம் நிச்சயம் செய்ய வேண்டியது தேனை முகத்தில் அடிக்கடி தடவி உலரவிட்டு   மசாஜ் செய்து கழுவ வேண்டும். 

சரும பாதுகாப்பு

முகத்தில் பொலிவு:


பருக்கள் நீக்க தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில்  நீர்த்தன்மையை தக்க வைக்க வேண்டும். முகத்தில் நீடித்த பொலிவு என்பது அவசியம்  ஆகும். குளிக்கும் நீரில் எழுமிச்சை பிழிந்து அதனை கொண்டு குளித்து வருவதால் சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க முடியும்.  இதனை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டியது அவசியம் ஆகும். அத்துடன் சந்தனப் பொடி, சிட்டிகை மஞ்சள் தூள், தேன் ஆகியவற்றை ரோஸ் வாட்டருடன் கலந்து  தடவி வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மாசு, மரு, மங்கு குறையும் முகத்தில் பொலிவு பொங்கும். 

சரும பாதுகாப்பு

சருமம் மாய்சுரைசர்: 

சருமமானது   பொலிவுடன் இருக்க வேண்டும், அதிக எண்ணெய் பசையை போக்க வேண்டியது அவசியம்  ஆகும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி வருதல் அவசியம் ஆகும்.  சருமத்தை நாம் எவ்வாறு சிறப்பலாம் என்றால் பல வழிகள் உண்டு உங்க்ளது டிரை ஸ்கின் என்றால் தேன், முல்தானி மெட்டி பவுடர் ஆகியவற்றை கலந்து முகத்தில்    சிறிது நேரம் கழுவினால் முகத்தில் அதிகப்படியன எண்ணெயானது முல்தானி மட்டி கட்டுப்படுத்தும். சருமம் அழகு பெறும். 

மேலும் படிக்க: மணப்பெண்களே உங்களுக்கான பிரத்தியேக டிப்ஸ்.!

சரும பாதுகாப்பு

கிளிரிசரின்,  தேன் கலந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் கிளிரின் தோளில் உள்ள நீர்ச்சக்தை பாதுகாத்து பொலிவுறச்  செய்யும். 

பால் சருமத்தின் வற்ட்சி  போக்கும், தயிரும் அது போன்றே பொலிவை அதிகரிக்கும். பால், தேன் ரோஸ் வாட்டர்  மூன்றையும் நன்றாக கலந்து பஞ்சு வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுத்து வரும் பொழுது முகம் பொலிவாகும்.  வறட்சியானது இருக்காது. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும். 

மேலும் படிக்க: முகத்தில் எண்ணெய் வழிவதை குறைக்கும் வழிகள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன