லாக்டவுனில் பெருகி வரும் குடிநோயாளிகளின் அறிகுறிகளும், தீர்வுகளும்…….!

  • by
situation of drinkers health during this lockdown

கரோனா பாதிப்பிலிருந்து  தற்காத்துக்கொள்ள உலகமே வீட்டிற்குள் முடங்கியிருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் மது கிடைக்கா விரக்தியில் பலர் தற்கொலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். பலர குடும்பங்களுடன் சந்தோஷமாக இருந்தாலும், ஊரடங்கை சமாளிக்க முடியாமல மதுவுக்கு அடிமையான குடிநோயாளிகள மது கிடைக்காமல் பல்வேற பிரச்சனைகளுக்கு ஆளாகி இருக்கிறார். அந்த பிரச்சனைகளை எவ்வாற கண்டறிவது அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை விளக்கும் பதிவு இது.

குடிப்பழக்கம் உள்ள அனைவருமே குடிநோயாளிகள் என்று சொல்லிவி முடியாது. மிதமாக குடித்து ஆரோக்கியமாக இடைவெளிவிட்டு குடிக்கி பலருக்கு கல்லீரல் போன்ற உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டுக கொண்டிருக்கின்றன. இவர்கள் உட்கொள்ளும் உணவு சத்து நிறைந்ததா இருப்பதால் குடிப்பழக்கத்தின் தீவிர நோயான வித்ட்ராவல் ,வலிப்பு மற்றும பயம் போன்ற நோய்களுக்கு உட்படுவதில்லை. 

மது அருந்துவதை நிறுத்தியவுடன் குடி நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனை

தீவிர குடி நோயாளிகளுக்கு குடியை நிறுத்திய ஆறிலிருந்து எட்டு மண நேரத்திற்குள் கைவிரல்களில் நடுக்கம் ஏற்படும். சிலருக்கு அதிகமா வியர்க்கும். குமட்டல், வயிற்றுப்போக்கு, நெஞ்சு படபடப்பு போன் அறிகுறிகளும் தென்படலாம்.

மேலும் படிக்க – வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மனதை அமைதியாக்கும் வழிகள்..!

இதைத் தொடர்ந்து 8 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் மனப்பிறழ்வ உணர்வு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். யாருமே பேசாத நிலையிலும மாயக் குரல்கள் கேட்பது போன்றும், மிரட்டுவது போலவும் ,அவர்களுக்கு ஒர மாயை தோன்றுகிறது. இதற்கு அடுத்த கட்டம்தான் வலிப்பு நிலை வருகிறது இது மதுவை நிறுத்தி 12 மணிநேரம் முதல் 24 மணி நேரத்தில் வரும் பாதிப்ப ஏற்படுகிறது.

வித்ட்ராவல் நோய் என்றால் என்ன?

குடியிலிருந்து மீண்டு வரும்போது ஏற்படும் தொல்லைகளை ஆல்கஹால வித்ட்ராவல் சிண்ட்ரோம் என்பார்கள். இன்றைய ஊரடங்கு நாட்களில குடிநோயாளிகள் எதிர்கொள்ளும் மிக தீவிரமான பிரச்சினையாக இது உள்ளது. மனித மூளையில் “சென்டர்” என்ற ஒரு பகுதியில் ஏற்படும வேதிப்பொருள்களின் மாற்றமே ஒருவர் குடிக்கு அடிமையாக காரணம்.

இவர்களால் குடிக்காமல் இருக்க முடியாது. முழு நேரம் உடலும் மனமும மதுவை தேடிக்கொண்டு இருப்பதால் இவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது நோயின்அறிகுறிகள் கை கால், நடுக்கம், தலைவலி ,பசியின்மை படபடப்ப வாந்தி போன்றவை.

வித்ட்ராவல்நோயிலிருந்து எவ்வாறு அவர்களை மீட்பது?

இந்நோயை சரி செய்ய முறையான நல்ல சத்து மிகுந்த ஊட்டச்சத்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் தானாகவே உடலும் மனமும் சரியாக விடுகிறது.

காலை எழுந்தவுடன் சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் நடக்க வேண்டும் பிடித்த திரைபடங்கள் பார்ப்பது. புத்தகங்கள் படிப்பது. மேலும் குடும்பத்தினரின அன்பு அரவணைப்பு மற்றும் இம்மாதிரியான நேரங்களில் மிகவு முக்கியமானதாக இருக்கிறது. குடும்ப நபர்கள் அன்பாக நடந்து கொண்டால் அந் சந்தர்ப்பத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டு நோயாளிகள் மதுவிலிருந்த விரைவில் மீண்டு வரமுடியும்.

நான்கைந்து நாட்கள் சமாளித்து விட்டால் உடலிலுள்ள விஷமாக உள்ள மத கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, உண்மையான ஆரோக்கியத்தை அவர்கள உணர ஆரம்பிப்பார்கள். இதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும் இம்மாதிரியான சமயங்களில் மருத்துவரின் ஆலோசனைகளை தொடர்ந்த பின்பற்றுவதன் மூலம் குடிப்பழக்கத்தில் இருப்பவர்களை மீட்டெடுத்த வெளிக்கொண்டுவர முடியும்.

மேலும் படிக்க – கொரோனா அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..!

குடிநோயாளிகள்  அடையும் தீவிர நிலை என்ன தெரியுமா? 

இந்த நிலையைத் தாண்டியவர்களை கவனிக்காமல் விட்டால் தீவி அறிகுறியான வலிப்பு மற்றும் டெர்லியம் என்ற மனம் குழம்பிய நிலை ஏற்படுகிறது.இம்மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரின உதவியை நாடி ஆகவேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக அமைந்த விடும்.

இந்த அறிகுறிகளை குடும்பஉறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் விடுவதால ஏற்படும் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இம்மாதிரியா அறிகுறிகள் உள்ளவர்கள் உங்களது வீட்டில் இருந்தால் உடனடியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

கரோனா பாதிப்பால் உலகமெங்கிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரை இழந்த கொண்டிருக்கும்  நிலையில், மதுவிற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்ட வர முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வேதனைக்குரி விஷயமாக இருக்கிறது.

குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக்கொண்ட பார்த்துக்கொண்டால் ,இம்மாதிரியான  சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன