உடல் எடையை எளிமையான முறையில் குறைக்கும் வழிகள்..!

  • by
simple ways to reduce your body weight

உடல் பருமன் பிரச்சனை எல்லோருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான பிரச்சனையாக இருக்கிறது. எல்லோருக்கும் மெலிந்த உடல் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் நம் வாழ்க்கை முறையினால் நம்முடைய உடல் அதிகரித்து குண்டாக காணப்படுகிறோம். இதற்காக நாம் கவலைப் படாமல் மிக எளிமையான முறையில் நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

தண்ணீரை குடியுங்கள்

நாம் தண்ணீரை சரியான நேரத்தில் சரியான உணவுக்குப் பின்னும், முன்னும் குடிப்பதன் மூலமாக நம்முடைய உடல் பருமன் பிரச்சனை குறையும். நாம் எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டுமென்றால் சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீரை குடிக்க வேண்டும். அதேபோல் உணவுக்கு இடையே மற்றும் உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் தவிர்க்க வேண்டும். இதை சரியாக கடைப்பிடித்தால் உங்களுக்கு மிக எளிதில் ஜீரணமாகி உடல் பருமன் பிரச்சினை உண்டாகாமல் தடுக்கும்.

மேலும் படிக்க – குழந்தைகளுக்கு நூடுல்ஸ் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களே! இதைப் படியுங்கள்.!

முட்டை உணவு

காலை உணவாக நீங்கள் அவித்த முட்டையை சாப்பிட வேண்டும். அதிலும் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளை கருவை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு தேவைப்படும் சத்துக்கள் கிடைத்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

கிரீன் டீ மற்றும் பிளாக் காபி

பால் கலக்கப்பட்ட உணவுகளை முழுமையாக தவிர்த்து, காலையில் கிரீன் டீ அருந்துவது சிறந்தது. அதேபோல் வேலையில் ஏற்படும் கலைப்பை தவிர்ப்பதற்கு நாம் பால் கலக்கப்பட்ட காப்பியை குடிக்காமல், வெறும் கருப்பு காபி குடிப்பது உங்கள் உடலை சமமாக வைத்துக்கொள்ளும்.

சர்க்கரையைத் தவிருங்கள்

உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்று விரும்புவர்கள் முடிந்தவரை சர்க்கரை கலக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். இனிப்புகள், குளிர்பானங்கள் போன்ற அனைத்தையும் தவிர்த்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடல் எடை குறையும். இதற்கு இணையாக நீங்கள் தேன் மற்றும் நாட்டுச் சர்க்கரையை குறைவாக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – மரங்கள் மற்றும் செடிகள் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்..!

எண்ணெய் பொருட்களை தவிருங்கள்

உடல் நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு நாம் முதலில் செய்யவேண்டியவை பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். எண்ணெயில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க கூடிய கொழுப்புத்தன்மை இருப்பதினால் இதில் செய்யப்படும் எல்லா உணவுகளையும் தவிர்த்தல் மட்டுமே உங்கள் உடல் எடையை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இடைவெளி விட்டு உணவு அருந்துங்கள்

காலை உணவுக்குப் பிறகு 2 மணி நேரம் இடைவெளி விட்டு சிறிதளவு உணவை அருந்துவது சரியானது. இதைத் தவிர்த்து ஒரேடியாக மூன்று வேளை உணவை அதிக அளவில் உட்கொண்டால் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இடையிடையே எடுக்கப்படும் உணவுகளில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களாக இருந்தால் அது உங்களுக்கும் மேலும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க – துணிகளை துவைப்பதற்கு முன் இதை பயன்படுத்துங்கள்..!

குறைந்தபட்சம் உடற்பயிற்சி

நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு இடையே குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் உணவுகள் மிக எளிதில் ஜீரணமாகும். இதன் மூலமாக உடலில் எந்த ஒரு கொழப்பும் தங்காமல் உங்களை எப்போதும் மெளிதாக வைத்துக்கொள்ளும்.

எவர் ஒருவர் உடன் எடை அதிகமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் பலவிதமான பிரச்சினைகள் மிக எளிதில் தாக்குகிறது. இதை தடுப்பதற்கு நீங்கள், உங்கள் உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். எனவே எனவே மேலே குறிப்பிட்டுள்ள வழிகளை கடைப்பிடித்து உங்கள் உடல் எடையை குறையுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன