இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

  • by
simple tips to get rid of grey hair at young age

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வரத் தொடங்கிவிட்டன. இதற்காக இவர்கள் பெரிதளவு பணத்தை செலவழித்து பல வேதிப்பொருட்களை வாங்கி தலையில் தடவி வருகிறார்கள். இளநரை ஏன் வருகிறது என்பதை அறிந்து அதற்கேற்ற உணவுகள் மற்றும் செயல்களை செய்வதன் மூலமாக அதை நாம் தடுக்க முடியும். 

இளநரைக்கான காரணம் 

இளம் நரை வருவதற்கு மிக முக்கியமான காரணம் நம் உணவு முறைதான். நாம் ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்த்து உடலில் கெட்ட கொழுப்புக்களை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்கிறோம். இதனால் நமக்கு தேவையான மெலனின் சக்திகள் குறைகிறது. இதை தவிர்த்து நம் மன அழுத்தத்தை அதிகரித்தாலும் இளநரை ஏற்படும் எனவே, எப்போதும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முயற்சி செய்தால் நம் உடல், மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சி அடையும். இதனால் நமக்கு நரை முடி மற்றும் உதிர்தலை தவிர்க்கலாம். 

இதை தவிர்த்து நாம் எடுத்துக் கொள்ளும் உணவிவை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் நாம் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பீட்சா, பர்கர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்கிறோம். இதனால் நமக்கு  இளமையிலேயே நரை முடி தோன்றுகிறது. நரை முடி வருவதற்கான காரணம் பி12 குறைபாடு. இதை அதிகரிக்க நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சக்தி அதிகாலை சூரிய ஒளியில் இருந்தும் கிடைக்கின்றன. எனவே சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமாக உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.

மேலும் படிக்க – சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க

சுற்றுச்சூழல் பாதிப்பு 

இதை தவிர்த்து நாம் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றாற்போல் நம் தலையை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் மாசுபடுவதால் நம் தலை ஆரோக்கியம் குறைந்து நரை முடியை வளரச் செய்கிறது. நமக்கு தைராய்டு சுரப்பி சரியாக இல்லையென்றாலும் நரைமுடி வரும், இதுமட்டுமில்லாமல் தரமற்ற வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட ஷாம்பூ, சோப்புகளால் கூட நரை முடி வரலாம். இதைத் தவிர்த்து உங்கள் பெற்றோர்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சினைகளால் கூட நரைமுடி வரலாம். இது அனைத்திற்கும் தீர்வு நாம் ஆரோக்கியமான உணவையும் மற்றும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட மூலிகைப் பொருட்களையும் நம் தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

தடுக்கும் வழிகள்

இளம் நரையை தடுப்பதற்கு சிறந்த வழி.  நாம் பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளையும் தினமும் செய்வதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் இளநரையை முழுமையாக தடுக்க முடியும்.

மேலும் படிக்க – நவீன யுவதிகளின் யுனிக்கான உடைகள் ஒரு பார்வை..!

இள நரை ஏற்பட்டவுடன் நாம் கடைகளுக்கு சென்று ரசாயன பொருட்களை வாங்கி நமது கூந்தலை கருமையாக்கி வருகிறோம். எனவே இது அனைத்தையும் தவிர்த்து இயற்கையாக கிடைக்கக் கூடிய மூலிகை எண்ணெய்களை நம் தலைக்கு பயன்படுத்தி நரைமுடியை சில மாதங்களிலேயே விரட்ட முடியும். இதை அறிந்த உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன