சிறிய மேக்கப்பிற்க்கான அறிவுரைகள்..!

  • by
simple makeup tips to follow

பெண்கள் தங்கள் முக அழகை அதிகரிப்பதற்காக, எப்போதும், எந்த வகையான மேக்கப் போடலாம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டிலேயோ அல்லது வீட்டிற்கு அருகிலேயே செல்வதற்கு எந்த வகையான மேக்கப் அணிவது என்பது அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் அவர்கள் போடும் அனைத்து மேக்கப்பும், மிகப்பிரம்மாண்டமாக இருக்கும். அதுவே சிறிய வகை மேக்கப் எப்படி போடுவது என்று தெரியாமல் தங்கள் அருகில் செல்வதால் இருந்தாலும் பிரம்மாண்டமாக ஒப்பனைகளை செய்கிறார்கள். எனவே இந்த பதிவில் சிரிய வகையில் எளிமையான முறையில் எப்படி மேக்கப் போடலாம் என்பதை காணலாம்.

ஒப்பனை பொருட்கள்

பெண்கள் தங்கள் முகத்தில் சிறிய வகை மேக்கப் போடுவதற்கு முன்பாக அவர்கள் முகத்தை நன்கு கழுவி விட வேண்டும். பின்பு அதை மென்மையான துணியில் துடைத்து முகத்தை காயவைத்து பிறகு முகத்தில் மாய்ஸ்சுரைசர் க்ரீமை தடவ வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்கள் முகத்தில் முக பவுடர்களை சிறிதளவு எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். கூடுதலான நிறம் வேண்டுமென்றால் உங்கள் நிறத்திற்கு ஏற்ற கிரீம்களை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – நரை முடியை தடுப்பதற்கு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை.!

கண் அழகிற்கு

எளிமையான தோற்றம் உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் கண்களில் மிக மெலிதான கண்மையை விட வேண்டும். பிறகு புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு ஏற்ற ஒப்பனை செய்து உங்கள் கண்ணழகை அதிகரிக்கலாம்.

உதடுகளின் அழகு

எளிமையாக தோற்றம் உங்களுக்கு வேண்டுமென்றால் உதட்டில் போடப்படும் சாயங்கள் நிறமற்ற தாக இருக்க வேண்டும். இல்லையெனில் ரோஜா நிறத்தில் சாயம் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதையும் நாம் சிறிதளவு போட்டு உங்கள் அழகை அதிகரிக்கலாம்.

கூந்தல் அழகு

இது போன்ற சிறிய ஒப்பனைகள் செய்யும்போது நமது கூந்தல் பிரம்மாண்டமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும். கூந்தலை கட்டாமல் விரித்து விடுவது அழகாக இருக்கும். இல்லையெனில் சிறிய வகை பின்னல்களுடன் உங்கள் கூந்தல் ஒப்பனையை நிறைவு செய்யலாம்.

மேலும் படிக்க – கோல்டன் ஃபேஸ் மாஸ்க்கை வீட்டில் தயாரிப்பது எப்படி ?

பிறகு உங்கள் ஒப்பனைக்கு ஏற்றவாறு சாதாரண ஆடைகளை அணிந்து எவராக இருந்தாலும் எளிதில் கவரலாம். இது உங்களுக்கு எளிமையான தோற்றத்தை தருவது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு இயற்கையாக இருக்கும். எப்பொழுதும் ஆடம்பர ஒப்பனைகள் இல்லாமல் எனிமையான ஒப்பனைகளை கொண்டு மற்றவர்களை கவருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன