ஆண்களுக்கான எளிமையான தோற்றம் எல்லோரையும் கவரலாம்..!

  • by
simple look of men that attracts ereryone

ஆண்கள் பயன்படுத்தும் ஆடைகள் மிகக் குறைவு, ஆனால் அது போன்று குறைவான ஆடைகளை சரியாக பயன்படுத்தி எல்லோரையும் கவர முடியும். பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய தோற்றத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் தரமாட்டார்கள். ஆனால் உங்கள் தோற்றம் உங்களை நேர்மறை எண்ணங்கள் கொண்ட பாதைக்கும் அழைத்துச் செல்லும். எனவே மிக பிரம்மாண்டமான தோற்றங்களை தவிர்த்து எளிமையான முறையில் எல்லோரையும் கவரும் படி நீங்கள் எப்படி உங்கள் தோற்றத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.

பொம்மை மற்றும் வார்த்தைகளைக் கொண்ட ஆடைகள்

ஒரு சிலர் தங்கள் தோற்றத்தை மேம்படுத்துகிறேம் என்று தவறுதலாக எண்ணிக்கொண்டு பொம்மைகள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஆடைகளை அணிவார்கள். இது உங்கள் முதிர்ச்சி நிலையை தெளிவாக காட்டிக்கொடுக்கும். எனவே இது போன்ற ஆடைகளை தவிர்த்து எப்போதும் உங்கள் உடலுக்கு ஏற்றவாறு ஒரு நிற ஆடைகளை அணியுங்கள்.

மேலும் படிக்க – உங்கள் சருமம் சோர்வாக இருப்பதற்கான 5 காரணங்கள்.!

பையனாக இல்லாமல் ஆணாக இருங்கள்

நீங்கள் அணியும் ஆடைகள் எப்போதும் உங்களுக்கு மரியாதையை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே இதற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள். உங்கள் ஆடையில் பலவித வண்ணங்களை கொண்டதாக இல்லாமல் ஒரு நிறமாக மற்றும் காலர் கொண்டதாக இருந்தால் அற்புதமாக இருக்கும்.

சரியாக தேர்ந்தெடுங்கள்

நீங்கள் அணியும் ஆடைகள் முடிந்தவரை ஒரே நிறமாக அணியுங்கள் அதாவது நீங்கள் மேலே அணியப்படும் ஆடைக்கு உகந்ததாக கீழே ஆடைகளை அணியுங்கள். கண்ணைப் பறிக்கும் நிறத்தைத் தவிர்த்து கருமை அதிகமாக உள்ள நிறங்களைக் கொண்ட ஆடைகளை கீழே அணியுங்கள். பின்பு மேலே அணியப்படும் ஆடை வெண்மை நிறமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் தோற்றத்தை மிக அழகாக எடுத்துக்காட்டும்.

ஜீன்ஸ்

பொதுவாகவே ஆண்கள் என்றால் நீல நிறத்தில் ஜீன்ஸ் அணிவார்கள் என்று எல்லோரும் வெளிப்படையான கூறுவார்கள். எனவே இதை மாற்றும் வகையில் நீங்கள் துணிகளால் செய்யப்பட்ட வெண்மையான ஜீன்சை அணியுங்கள். அதேபோல் கருமை, கருநீலம் அல்லது சந்தன நிறத்தில் ஆடை அணியுங்கள். உங்கள் தோற்றத்தை புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் எந்த நிறத்தில் சட்டை அணிந்தாலும் அழகாகவும், பார்ப்பதற்கு சிறப்பாகவும் இருக்கும்.

காலணிகளைக்கு முக்கியத்துவம் தாருங்கள்

பொதுவாக ஒரு சில ஆண்கள் காலணிகளுக்கு முக்கியத்துவம் தர மறுப்பார்கள். ஏனென்றால் காலுக்கு அணியப்படும் காலணிகளை ஏன் விலை அதிகமாக கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் அணியப்படும் காலணிகள் மற்றவர்களை கவருகிறதோ இல்லையோ நிச்சயம் அதை பெண்கள் கவனிப்பார்கள். எனவே உங்கள் முழு தோற்றத்தையும் கணிக்கும் ஒரு சிறிய கோளாகவே உங்கள் காலணிகள் இருக்கிறது. எனவே அதை நல்ல நிறுவனத்தில், நீடித்து உழைக்கும் காலணிகளை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அதேபோல் எல்லா ஆடைகளுக்கும் ஏற்றவாறு கருநிறமாக உள்ள காலணிகளை தேர்ந்தெடுங்கள்.

மேலும் படிக்க – முகத்தில் எண்ணெய் வழிவதை குறைக்கும் வழிகள்..!

கைகளை அலங்கரியுங்கள்

கைகளில் எதுவும் அணியாமல் இருப்பவர்களையும், ஏதாவது அணிந்திருப்பவர்களை ஒப்பிடுங்கள். உங்களை அறியாமல் உங்கள் கவனம் கைகளில் ஏதாவது அணிந்திருப்பவர்களின் பக்கம் செல்லும். எனவே உங்கள் கைகளை வெறுமன வைப்பதை விட்டுவிட்டு அதில் கைகடிகாரம் அல்லது கைகளுக்கான அலங்காரப் பொருட்களை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். இது உங்கள் தோற்றத்தை கூடுதலாக அழகாக்கும்.

ஒரு ஆண் அழகாக தெரிவதை காட்டிலும் அவன் ஆண்மை நிறைந்தவனாக தெரிய வேண்டும். அதற்கு சிறுபிள்ளைத்தனமான ஆடைகள் மற்றும் காலணிகளை அணிவதை தவிர்த்து கம்பீரமான தோற்றம் கொண்ட ஆடைகளை அணியுங்கள். உங்களை பார்த்தவுடன் ஒருவிதமான நேர்மறை எண்ணம் தோன்ற வேண்டும், அத்தகைய ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன