அஜீரணத்தைப் போக்கும் அடுப்பங்கரை பொருட்கள்..!

  • by
simple kitchen items that cures indigestion problems

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் “

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை. என்று கூறியுள்ள வள்ளுவரின் வாழ்க்கை முறை தத்துவத்தை நாம் பின்பற்ற தவறுவது தான் அஜீரணத்திற்க்கு அடிப்படையாக உள்ளது.

பசித்துப் புசி” என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் நாமோ பார்ப்பதை எல்லாம் புசித்துக் கொண்டிருக்கிறோம்.இதனால் நம் வயிறு  படாதபாடு படுகிறது. பண்டிகை என்றாலே நம்மில் பலருக்கு வரும் பிரச்சனை அஜீரணம் அதற்காக உடனே மருத்துவமனை போக வேண்டும் என்று அவசியமில்லை. நம் சமையலறையில் உள்ள  வீட்டு பொருட்களை வைத்தே அஜீரணத்தை சரிசெய்யலாம். அஜீரணம் ஏற்பட்ட உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வருமாறு பார்க்கலாம்.

நீர்

உணவுகள் மற்றும் பானங்களில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களை திறம்பட ஜீரணித்து உறிஞ்சுவதற்கு உடலுக்கு நீர்த்தேவை. நீரிழப்பு இருப்பது செரிமானத்தை மிகவும் கடினம் ஆகிறது. மற்றும் குறைந்த செயல்திறன் மிக்கதாகனஅஜீரணத்தை ஏற்படுத்துகிறது.இதனால் வயிற்றில் உள்ள உணவுப்பொருட்கள் சீக்கிரம் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

சுகாதார மற்றும் மருத்துவ பிரிவு பரிந்துரையின்படி ,பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 2.7 லிட்டரும் ஆண்கள் ஒரு நாளைக்கு 3.7 லிட்டர் தண்ணீரையும் பருகவேண்டும். இதில் 20 சதவீதம் உணவிலிருந்தும் மீதமுள்ளவை பானங்களில் இருந்தும் நமது உடல் எடுத்துக்கொள்கிறது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அதிக நீர் ஏற்றத்துடன் இருப்பது அவசியமானதாகும்.

மேலும் படிக்க – வெயிலை தணிக்க வெளிநாட்டு பானங்களா? வேண்டவே வேண்டாம்!!!

இஞ்சி 

இஞ்சியில் உள்ள ஷோ கோல் ஸ் என்ற இரசாயனம் வயிற்று சுருக்கங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இது வயிற்றில் அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவுகளை விரைவாக ஜீரணத்துக்கு உள்ளாக்குகிறது.  குமட்டல் ,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குறைக்க இஞ்சியில் உள்ள ரசாயனங்கள் உதவக்கூடும்.

வயிற்றுவலி உள்ளவர்கள் தங்கள் உணவில் இஞ்சியை ஒரு தேநீராக குடிக்க முயற்சி செய்யலாம்.

புதினா

சுவாசத்தை இனிமையாக மாற்றுவது மட்டுமல்லாமல் புதினாவில் உள்ள மெந்தால் பின்வருவனவற்றில் உதவுகின்றன.

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கும்.

குடலில் உள்ள தசைப் பிடிப்பை குறைக்கும் வலியை குறைக்கும்.

ஈரான் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அஜீரணம் மற்றும் வாயு தொல்லை வயிற்றுபோக்குக்கு புதினா ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் படிக்க – ஸ்ட்ராபெரி பழங்களில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!

எலுமிச்சைசாறு பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் 

எலுமிச்சை சாற்றை ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவுடன் கலந்து குடிப்பது பலவிதமான செரிமான புகார்களை நீக்குகின்றன என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இந்த கலவை கார்போனிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது வாயு மற்றும் அஜீரணத்தை குறைக்க உதவும் கல்லீரல்

சுரப்பு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்த கூடும்.எலுமிச்சை சாறில் உள்ள அமிலத் தன்மை மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள், பித்த அமிலங்களையும் நடுநிலை ஆகி வயிற்றில் அமிலத்தன்மையை குறைக்கும்.இதனால் கொழுப்பு மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை ஜீரணிக்கவும் இந்த கலவை பயன்படுகிறது.

சீரகம் மற்றும் கற்றாழை

விதைகளில் உள்ள பொருள்கள் அஜீரணம் மற்றும் அதிகப்படியான வலியை குறைக்கும். உடல் அழற்சியை குறைக்கும் ஆண்டி மைக்ரோ பைலாக செயல்படுகிறது.

 கற்றாழை இதில் உள்ள கசப்பு தன்மை ஆரோக்கியமான குடல் இயக்கங்கள் மற்றும் நச்சு நீக்குதலை ஊக்குவித்தல் அதனுடன் புரதத்தையும் மேம்படுத்துகிறது.செரிமானம் செய்யும் பாக்டீரியாவின் சமநிலையை ஊக்குவிக்கும் தன்மை இந்த கற்றாழைக்கு அதிகமாகவே இருக்கிறது.

துளசி 

துளசி வாயுவை குறைக்கும். பசியை அதிகரிக்கும். தசைப்பிடிப்பை நீக்கும். மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தும் பொருள்களை கொண்டுள்ளது இந்த துளசி. அதனால் தான் நம் முன்னோர்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் துளசி உண்பதை ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தனர். துளசியில் உள்ள          யூ ஜெனோ லும் என்ற பொருள் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளது இது  அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

மேலும் படிக்க – விளக்கெண்ணையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீரில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்  உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றிலுள்ள சதைப்பிடிப்பு குறைத்து அதனால் ஏற்படும் வலியையும் சரி செய்கிறது. தேங்காய் நீர் மறு உருவாக்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் கலோரிகள், சர்க்கரை மற்றும் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால் அஜீரண கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்கிறது இந்த தேங்காய் தண்ணீர்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 பொட்டாசியம் மற்றும் போலேட் ஊட்டச் சத்துகள் நாம் உண்ணும் உணவில் உள்ள கடின பொருள்களையும் எளிதாக செரிமானம் அடையச் செய்கிறது. உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்புதான் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் சாப்பிட்டபின்பு பெரும்பாலும் பழங்கள் உண்பதை தவிர்க்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன