கர்ப்பிணிப் பெண்கள் எளிமையாக செய்யும் உடற்பயிற்சிகள்..!

  • by
simple exercise that pregnant women can follow

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கர்ப்பிணி பெண்களின் மன நிலை மிக மோசமாக இருக்கும். அதைத் தவிர்த்து ஒரு சிலர் இதை நேர்மரையாக எடுத்துக் கொண்டு தங்களால் முடிந்தவரை வீட்டில் உற்சாகமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் அனைவரும் வீட்டில் இருப்பதினால் உங்கள் மனநிலை மிக மோசமான நிலைக்கு சென்று இருக்கும். இதுபோன்ற சூழல்களை தவிர்த்து கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடி எளிமையான முறையில் கர்ப்பிணி பெண்கள் எப்படி உடற்பயிற்சி செய்யலாம் என்பதை காணலாம்.

நகர்ந்து கொண்டே இருங்கள்

ஐந்து மாதங்கள் கடந்த கர்ப்பிணி பெண்கள் ஒரே இடத்தில் இருக்காமல் அவ்வப்போது நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் தாங்களே செய்ய வேண்டும். முடிந்தவரை இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் அனைத்தையும் தங்கள் கைகளால் செய்தால் அவர்கள் உடலுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவை என்றாலும் அதற்கு யாரையும் அழைக்காமல் நீங்களே எழுந்து சென்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். இது போன்று சிறு சிறு செயல்கள் உங்கள் உடல் வளைவு நெளிவுகளை உண்டாக்கி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க – 50 லட்சம் அளிக்கும் தமிழக அரசு..!

பைல்ஸ் பயிற்சி

உங்கள் அருகில் ஏதேனும் மேஜை அல்லது நாற்காலியை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கையை அதன்மேல் ஊன்றிக்கொண்டு உங்கள் இரண்டு கால்களையும் நன்கு விரித்து கொள்ள வேண்டும். பிறகு உங்களால் முடிந்தவரை தரையில் உட்காருவது போல் சென்று மீண்டும் எழுந்திரிக்க வேண்டும். மேஜை அல்லது நாற்காலியின் உதவியுடன் உங்களால் முடியும் வரை இதை செய்ய வேண்டும். அதேபோல் முடிந்தவரை உங்கள் முதுகுப் பகுதியை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடற்பயிற்சி உங்கள் பின்புறத்தை சரி சமமாக வைத்து உங்களை வலுவாக்கும்.

பக்கவாட்டு பயிற்சி

நீங்கள் தரையில் ஏதேனும் ஒரு திசையை பார்த்தபடி பக்கவாட்டில் படுத்துக் கொள்ள வேண்டும். பின்பு உங்கள் தலைக்கு கீழ் ஒரு கையை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உங்களின் கீழ்ப்பகுதியை தொடும் காலை மடக்கிக்கொண்டு மேல் பகுதியில் இருக்கும் காலை 45 டிகிரிக்கு மேலே தூக்கிக் கொள்ள வேண்டும். இதை இரு புறமும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் தொடை பகுதி அனைத்தும் இருக்கப்படும். இடது புறம் இருந்து வலது புறம் திரும்புவதற்கு மிகப் பாதுகாப்பான முறையை கடைபிடிக்க வேண்டும்.

பிளாங்க் பயிற்சி

வயிறு பகுதி தரையில் படாதவாறு பெண்கள் திரும்பி படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் கைகளை உள்ளங்கை தரையில் படும்படி விரித்து வைத்துக் கொண்டு பிறகு கால்கள் இரண்டையும் நேராக நீட்டி பின்புறத்தை உயர்த்தியவாறு இருக்க வேண்டும். பிறகு உங்கள் உடலை நேராக வைத்துக் கொண்டு, தலையை மேல் நோக்கி பார்க்க வேண்டும். இந்த நிலையில் உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருந்து கிட்டத்தட்ட ஐந்து முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் இதை முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – கொரோனாவால் குழப்பத்தில் இருக்கும் மக்கள்..!

பளு தூக்குதல்

நாற்காலியில் அமர்ந்துகொண்டு இரு கைகளிலும் மிகக் குறைந்த எடையுள்ள ஏதேனும் பொருட்களை எடுத்துக் கொண்டு மேலும் கீழுமாக தூக்கி இறக்க வேண்டும். உங்கள் கைகளை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நாற்காலியில் நேராக அமர வேண்டும். இதை நீங்கள் வேறு விதத்திலும் முயற்சி செய்து உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றலாம்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இது போன்ற உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக அவர்கள் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளும் வெளியேறும். இதைத் தவிர்த்து உடல் கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி பிரசவத்தின்போது வலிகளை குறைக்கும். அதேபோல் சுகப்பிரசவத்தின் மூலமாக பெண்கள் குழந்தையை பெற்று எடுக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனவே உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை காணொளி மூலமாக பார்த்து செய்யுங்கள். முடிந்தவரை உடற்பயிற்சிகளை வீட்டில் உள்ளவர்கள் மேற்பார்வையில் செய்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன