நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்களா? அதற்க்கான அறிகுறிகள்…!

  • by

உறவுகள் என்பது என்றும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக, நிரந்தரமானதாக, இருவருக்கும் இடையிலான பரஸ்பர வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பதாக இருப்பது அவசியம். ஆனால் பெரும்பாலான உறவுமுறைகளில் ஆணோ அல்லது பெண்ணோ தீய செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் உறவுமுறை பாதிக்கிறது.

உறவை தவறாக பயன்படுத்த நினைக்கிறவர்களும் உண்டு அதில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கீழ் உள்ள அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

தவறான உறவு என்றால் என்ன?

யாருடைய உறவில் நிம்மதியின்றி சண்டை சச்சரவுகள், போட்டிகள், பொறாமைகள், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இருக்கின்றதோ அதைத்தான் தவறான உறவு முறை என்று அழைப்பர்.

பொதுவாக உறவுமுறைகளில் ஏற்ற இறக்கங்கள் என்பது இருக்கும் ஆனால் பெரும்பாலான உறவுகள் அந்த ஏற்ற இறக்கங்களை சகித்துக்கொள்ள முடியாமல் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதும் உண்டு.

மேலும் படிக்க-> மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

உறவை நச்சாக்குவது எது?

தவறான உறவில் ஒருவர் ஏமாற்றப்படலாம், சில சமயம் இருவரும் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. பணம், பொருள், பதவி என நிலையில்லா ஆசைகளுக்கு இத்தகைய உறவுகள் தோன்றுவது சகஜமாயுள்ளது.


பெரும்பாலும் உறவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது உறவுகளில் நச்சை புகுத்தி விட்டுச் செல்கிறது. உறவில் இருப்போர் தாம் செய்கின்ற செயல்களை தம் துணையிடமிருந்து மறைப்பதால் பெரும் விளைவுகள் பிற்காலங்களில் தோன்றும்;

ஒரு சிலரின் நடத்தை காரணமாக இத்தகைய உறவுகளில் நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது நிலையில்லா ஆசைதான் உறவுகளில் ஏற்படும் நச்சிற்கு மூலாதாரம்.

மேலும் படிக்க-> யோகா சிகிச்சையும் தியான பயிற்சியின் விளைவுகளும்…!

தவறான உறவின் எச்சரிக்கைகள் அல்லது அறிகுறிகள்:

தவறான உறவில் இருந்த பின்னர் பாதிக்கப்பட்ட நபர் மீள வழி இல்லாமல் புகைபிடித்தல், மது அருந்துதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் இது போன்ற செயல்கள் அதிகமாக நடைபெறுவதை நாம்மால் பார்க்கமுடியும்.

இவையெல்லாம் தவறான உறவில் இருப்பதற்கான அறிகுறிகள், நீங்கள் மேற்கொண்டிருக்கும் உறவு தவறானது என்று உங்கள் பெற்றோர், உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் கூறினால் அதை உதாசினப்படுத்தாமல் அதை ஆலோசிப்பது சிறந்தது.


இவை அனைத்தையும் தாண்டி உங்களுக்கென ஒரு சுயசிந்தனை உள்ளது, உங்கள் துணை உறவில் இருக்கும் போது சரியாக உங்களிடம் நடந்துகொள்கிறார் என பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.

நீங்கள் ஒரு தவறான உறவில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இறுதியாக நீங்கள் தவறான உறவில் இருந்ததை கண்டறிந்த பின்னர் பழிவாங்கும் எண்ணம், புகை, மது, போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி மீண்டும் வாழ்க்கையை தொடங்குவது என்பதே முக்கியம்.

அதற்கு நீங்கள் உங்கள் மனதை தளர்வாக வைத்துக் கொள்ள பழகுங்கள் முதலில் கடினமாக தான் இருக்கும் பிறகு இலகுவாகிவிடும்.

  • பிடித்த பாடலை கேட்பது.
  • பள்ளி, கல்லூரிஅல்லது நெருங்கிய நண்பருடன் நீண்ட தூரம் பிரயாணம் செய்வது.
  • பெற்றோர்களுடன் சேர்ந்து வெளியே செல்வது.
  • இயற்கையை ரசியுங்கள்.
  • மனதுக்கு இதமளிக்கும் இடத்திற்கு செல்லுங்கள்.
  • செல்லப் பிராணிகளுடன் விளையாடுங்கள்.
    இதற்காக பல மருத்துவமனைகளில் ஆலோசனை தருவதற்காக நிபுணர்கள் உள்ளார்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  • வாழ்க்கை என்பது வாழ்வதற்கு என்ற தாரக மந்திரத்தை மனதில் நிறுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன