உறவில் மகிழ்ச்சி இல்லாமைக்காண அறிகுறிகள்..!

  • by
signs that you are not happy in relationship

ஆண், பெண் உறவுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாவது சகஜம் தான், ஆனால் உறவுகளில் பேச்சுவார்த்தை குறைந்து, கடமைக்கு என்று ஒரே வீட்டில் பல நாட்கள் வாழ்ந்து வருபவர்களின் உறவில் மகிழ்ச்சி இன்மை முழுமையாக குறைந்திருக்கும். இதைத் தவிர்த்து ஒரு சில அறிகுறிகள் மூலமாக உங்கள் உறவு முடிவு நிலையில் இருப்பதை நம்மால் அறிய முடியும், அது போன்ற அறிகுறிகள் ஒவ்வொன்றாக இந்த பதிவில் காணலாம்.

சலிப்புத் தன்மை

எப்போதும் சோர்வாக, சகிப்புத்தன்மையுடன் இருப்பதுதான் உறவுகளில் மகிழ்ச்சியின்மைக்காண முதல் அறிகுறி. உறவில் ஆர்வம் இல்லாமல் எந்த செயலிலும் ஈடுபடாமல் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பது மற்றும் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் பேச்சுவார்த்தையை முழுமையாக துண்டிப்பது போன்றவைகள் மகிழ்ச்சியின்மைக்கான அறிகுறி.

உங்கள் உறவில் பிரச்சனையா? எங்கள் மனோதத்துவ நிபுணரிடம் உங்கள் கேள்விகளுக்கு பதில் பெறுங்கள்.

வீட்டை தவிர்ப்பது

கணவன் அல்லது மனைவி வீட்டிற்கு தாமதமாக வருவது அல்லது அலுவலகத்திலேயே தங்கி தங்கள் பணிகளை செய்வது போன்ற செயல்கள் உங்களுக்குள் இருந்தால் நிச்சயம் உங்கள் துணை உங்களுடன் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் அவ்வப்போது அலுவலக சுற்றுலா சென்று விடுவார்கள், அதைத் தவிர்த்து நண்பர்களுடன் வெளியே செல்வார்கள். இது அனைத்தும் வீட்டை தவிர்ப்பதற்காக அவர்கள் செய்யப்படும் செயல்கள்.

பொய்கள் சொல்வது

நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் உங்கள் துணை யோசிக்காமல் உடனடியாக பதில் அளித்தால் அது உண்மையாக இருக்கலாம், ஆனால் சில சமயங்களில் அவர்கள் யோசித்து உங்களை சமாளிப்பதற்காக ஒரு சில பொய்களை சொல்வார்கள். இதுவே தொடர்ந்தால் உறவுக்குள் விரிசல் அதிகரிக்கும். உங்கள் துணை உங்களுடன் அவ்வப்போது பொய்களை மட்டுமே கூறி வந்தால் உறவில் உங்களுக்கு தெரியாமல் ஒருசில செயல்கள் நடக்கிறது என்பதாகும்.

மேலும் படிக்க – கட்டாயப்படுத்தி வருவது காதல் அல்ல..!

பசியின்மை

வீட்டில் ஏராளமான உணவுகள் இருந்தாலும் அதை உண்ணுவதற்கான ஆர்வம் குறைவாக இருக்கும். பசி அதிகரித்தாலும் உணவு அருந்துவதை நாம் முற்றிலுமாக தவிர்த்து வருவோம். இது போன்ற செயல்கள் அதிகளவிலான கவலை மற்றும் மன அழுத்தத்தினால் நிகழ்கிறது. அதிலும் கணவன், மனைவி இருவரும் இதுபோன்ற நிலையில் இருந்தால் உடனே சிறந்த ஆலோசகரை அணுக வேண்டும்.

ரகசியங்களை மறைப்பது

உறவின் ஆரம்ப நிலையில் இருக்கும் போது நாம் எல்லாவற்றையும் நம்முடைய துணையிடம் பகிர்ந்து வந்திருப்போம். ஆனால் எப்போது நம் உறவில் ஆர்வம் குறைகிறதோ அப்போதே நமக்குள் ஏராளமான ரகசியங்களை பூட்டி வைத்துக்கொள்வோம். அதைத் தவிர்த்து எந்த ஒரு விஷயத்தையும் வெளிக்காட்டாமல் ரகசியத்துடன் வாழ பழகிக் கொள்வோம்.

போதைப் பொருட்களை பயன்படுத்துவது

அலுவலகத்தில் இருக்கும் கவலையை மறப்பதற்கு பொய்களை சொல்லி தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவது அல்லது வீட்டில் இருக்கும் போது அதிகமான புகை பிடிப்பது மற்றும் போதை பழக்கத்தை பின்தொடர்வது போன்ற செயல்கள் அதிகரித்தால் உங்கள் உறவுக்குள் ஏதே பிரச்சனை இருப்பதற்கான அறிகுறி. நம்முடைய இயல்பு வாழ்க்கையை கடக்க முடியாமல் தவிப்பவர்கள் இது போன்ற போதைப் பொருட்கள் பின்னால் செல்வார்கள்.

மேலும் படிக்க – உண்மையான தந்தை பற்றி வேதாளம் சொன்ன கதை!!

நண்பர்களுடன் புலம்புவது

தொலைபேசி மூலமாகவும் அல்லது சந்திக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஏதேனும் கவலையை பரிமாறினாள் அது சாதாரணம். அதுவே உங்கள் உறவை பற்றி அவ்வப்போது குறைகளைச் சொல்லிக் கொண்டே வந்தால் நிச்சயம் உங்கள் உறவு மகிழ்ச்சியாக இருக்காது. நல்ல உறவில் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வார்கள், இதுபோல் குறை சொல்ல மாட்டார்கள்.

எனவே இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் உடனே மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகுங்கள். உங்கள் உறவை வலுப்படுத்த மற்றும் அதை நீண்ட தூரம் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள். ஆண், பெண் உறவில் எப்போதும் ஏற்றம், இறக்கம் இருக்கும். அதை நன்கு அறிந்து அதற்கேற்ப நம்முடைய மன நிலையை மாற்றி வாழ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன