தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள்.!

signs that indicate your child is suffering from sleep disorder

உறக்கம் என்பது நம் உடலுக்கு தரும் ஓய்வாகும், ஆனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் தூக்கத்தில் பிரச்சினை இருக்கிறது. சராசரியாக ஒட்டுமொத்த குழந்தைகளில் 30 சதவீத குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதை எப்படி நம் கண்டறிவது என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

உங்கள் குழந்தை அதிகமாக பகல் நேரங்களில் உறங்கினால் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும். பொதுவாகவே, குழந்தைகள் அதிகமாக விளையாடுவார்கள் அதன் சோர்வு காரணமாக தூங்கினால் எந்த கவலையும் இல்லை அதே சமயத்தில் எதிலும் கவனம் செலுத்தாமல் தூக்கத்தை மட்டுமே கொண்டிருந்தால் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது.

மேலும் படிக்க – மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

பெரியவர்களுக்கு வரும் கனவுகளை போலவே சிறியவர்களுக்கும் கனவுகள் வரும். இதனால் அவர்கள் தூக்கம் பாதிப்படையலாம். பொதுவாகவே நாம் காணும் கனவுகள் நம் வாழ்க்கையை பாதிக்காது ஆனால் குழந்தைகள் காணும் கனவில் ஏதாவது ஆபத்துக்கள் அல்லது பயங்கரங்கள் இருந்தால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்திருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் தாக்கத்தினால் அவர்கள் மீண்டும் உறக்க நிலைக்கு செல்ல பயப்படுவார்கள் அதனால் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு அதிகமான நேரங்கள் எடுத்துக் கொண்டால் அவர்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு மன பிரச்சினை இருந்தால் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படும் எனவே அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள், என்ன பிரச்சினை என்று கேளுங்கள் பின்பு அவர்கள் தூங்கும் வரை அவர்கள் அருகில் இருந்த அவரை உறங்க வைப்பது உங்கள் கடமையாகும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.!

இரவு நேரங்களில் உங்கள் குழந்தை குரட்டை விடுகிறதா.? பயப்பட வேண்டாம். இது சாதாரணமான செயல்தான் பொதுவாகவே குரட்டை நமது சுவாச அடைப்பு மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளினால் ஏற்படும் இது மிக எளிதில் குணப்படுத்தி விடலாம் ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு பல நாட்கள் நீடித்தால் உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது.

இரவு நேரங்களில் பயப்படுவது உறங்குவதற்கு இடையில் சிறுநீர் கழிப்பது மற்றும் இரவில் எழுந்து நடப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவர்களுக்கு தூக்கமின்மை அதிகமாக இருக்கிறது என்பது அர்த்தம். இரவு நேரங்களில் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும், இதனால் இவர்கள் தூக்கத்தைத் தவிர்த்து விடுவார்கள். எனவே இது அனைத்தையும் நன்கு அறிந்து அவர்களை பராமரிப்பது உங்கள் கடமையாகும். எதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமாக சென்றால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

1 thought on “தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள்.!”

  1. Pingback: முதுகுப் பகுதிகளில் வால் எலும்பில் வலி ஏற்படுகிறதா.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன