எதற்காக நாம் பல் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறையாவது சந்திக்க வேண்டும்.!

signs that indicate you need to visit a dentist right away

பல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று ஏனென்றால் எந்த வலி ஏற்பட்டாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும், அதைப் போக்குவதற்கு ஏதாவது உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பல் மற்றும் ஈறுகளில் வலி ஏற்பட்டால் நம்மால் எந்த செயலையும் செய்ய முடியாது இதை தவிர்த்து நாம் உண்ணும் உணவைக் கூட இந்த சமயங்கள் எடுத்துக் கொள்ளாமல் போகிறது. இதனால் நம் உடல் நிலை மேலும் பாதிப்படைகிறது. நம் உடலில் அதிகளவு பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி நமது வாய்தான் ஏனென்றால் நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் இந்த வழியாகவே எடுத்துக்கொள்கிறோம். இதை தவிர்த்து நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் காண்பிப்பது நமது வாய்ப்பகுதி தான். இதை நாம் எப்படி பராமரிப்பது என்பதையும் இதில் ஏற்படும் பிரச்சினைகளை வைத்து நம் நிலை என்ன என்பதை பார்ப்போம்.

பல் கூச்சம் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அனுகவேண்டும். ஒரு சிலருக்கு சூடான அல்லது குளிர்ந்த பானங்களை அருந்தும்போது அவர்களுக்கு பல் கூச்சம் ஏற்படும் இந்த சமயங்களில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது ஏனென்றால் எப்போது நமது பல் மற்றும் ஈறுகளில் வலி இருக்கிறதோ அப்போது பற்களில் சேதங்கள் ஏற்படும். இதை சரி செய்வதற்காக மருத்துவரை அணுகுங்கள்.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

பற்களில் ஏதாவது வெள்ளைப்புள்ளிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது ஏனென்றால் வெள்ளைப்புள்ளிகள் பாக்டீரியாவை உண்டாகும் அமிலங்களை உற்பத்தி செய்கிறது இதனால் உங்கள் பற்கள் மிக விரைவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

உங்கள் பற்கள் நிறம் மாறினாலோ அல்லது ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். இவைகள் இரண்டும் உங்கள் பற்களில் ஆரோக்கியத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும். உங்களுக்கு தாடை வலி ஏற்பட்டால் அது சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கான அறிகுறியாகும் இதை உடனே மருத்துவரிடம் காண்பித்து குணப்படுத்துங்கள்.

வாய் புண் மற்றும் வாய் துர்நாற்றங்களில் அதிகமானவர்கள் பாதிப்படைகிறார்கள். வாய்புண் வந்தவுடன் ஒரு நாளிலேயே குணமாகி விடும் இதனால் யாரும் பயப்படவேண்டாம் அதுவே பல வாரங்கள் நீடித்தால் அது தொற்று நோயாகவும் இருக்க வாய்ப்புள்ளது இதை உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதாவது பிரச்சினைகள் பல மாதங்களாக இருந்தால் உங்கள் வாயில் துர்நாற்றம் பல மாதங்களாக இருக்கும். இதுபோன்ற சோதனைகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பியுங்கள்.

மேலும் படிக்க – தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

இதன் பிறகாவது உங்கள் பற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய் ஆரோக்கியத்தை பின்பற்றுங்கள் ஏனென்றால் எதை தொடங்கினாலும் முதலில் பயன்படுத்துவது நமது வாய்ப்பகுதி தான். ஒரு புன்னகை முதல் சொல் வரை நாம் வாயை தான் பயன்படுத்துகிறோம். ஆரோக்கியமாக வாழ்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள் இது உங்கள் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன