சித்த மருத்துவத்தால் கொரோனா வைரஸை தடுக்க முடியுமா..!

  • by
siddha treatment to cure corona virus

சித்த மருத்துவம் என்றால் அது இயற்கை மருத்துவம். இது காலம் காலமாக தமிழர்களால் கடைபிடித்து வந்த இயற்கை மருத்துவமாகும். இதை இந்திய மருத்துவமும் அங்கீகரித்துள்ளது. எனவே ஆயுர்வேதம், யுனானி, சித்த வைத்தியம், யோகா மற்றும் ஹோமியோபதி போன்றவைகள் சித்த வைத்தியத்திற்குள் அடங்கும். இயற்கையாக நாம் எடுக்கப்படும் உணவிலிருந்து உருவாக்கப்படுவதை இந்த சித்த வைத்தியம். இதனால் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுகளை நம்மால் தடுக்க முடியுமா.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸை தடுப்பு மருந்தை கிட்டத்தட்ட பல ஆண்டுகளாகவே அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் அதற்கான தீர்வு இன்றும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சில சித்த மருத்துவத்தில் இதற்கான மருந்து இருக்கிறது என்கிறார்கள் ஆனால் இதற்கான உறுதியான சான்று எதுவும் இல்லை. சித்த மருத்துவத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகள் தான் இருக்கிறது. இதைத்தவிர்த்து கொரோனா வைரஸ்க்கான மருந்துகள் எதுவும் இல்லை என்று ஆயிஸ் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்காத மாநிலங்கள்..!

சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்து இப்போது பல மாநிலங்களில் இதை ஒரு முழுநேர படிப்பாக படித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் இந்த சித்த மருத்துவத்தில் எல்லாவித வியாதிக்கான மருந்துகள் இருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ்க்காண மருந்தை இவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் நவீன மருத்துவத்தின் வழியில்தான் கொரோனா வைரஸ்க்கான தீர்வு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

மலேரியா மருந்து

மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தும் மருந்துகளை வைரஸ் பாதிப்பு குறைவதற்கு பயன்படுத்தலாம் என்று தெலுங்கானா சித்தமருத்துவம் கூரி வருகிறது. ஆனால் இது கொரோனா வைரஸை தடுக்கும் என்று இவர்கள் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை. இருந்தாலும் மக்களாகவே தானாக வந்து இதற்கான மருந்துகளை வாங்கி செல்கிறார்கள் என்று தெலுங்கானாவில் ஆயுஸ் மருந்து கடை நடத்திவரும் லிங்க ராஜ் என்பவர் கூறியுள்ளார்.

உணவே மருந்து

சித்த மருத்துவத்தின் முதல் கொள்கை தான் இந்த உணவே மருந்து. எனவே நீங்கள் சாப்பிடக்கூடிய உணவே உங்களுக்கு மருந்தாக அமைகிறது. மூலிகைப் பொருட்களான ஏலக்காய், கிராம்பு, மிளகு, பூண்டு, இஞ்சி, பட்டை, சீரகம் என ஏராளமான பொருட்களை நாம் கசாயமாக கொண்டு சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு உண்டாகும் நோய்களின் பாதிப்பு குறையும். இதைத் தவிர்த்து இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட பச்சை காய்கறிகளை நாம் சாப்பிடுவதன் மூலமாக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் பால் பொருட்கள், தேன், போன்றவைகளை பயன்படுத்தி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க – கேரட் ஆப்பிள் பழரசம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!

யோகா பயிற்சி

நாம் என்னதான் உணவுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்கு போதுமான அளவுக்கு உடற்பயிற்சி இல்லை என்றால் அந்த உணவின் பயன்பாடில் பாதிதான் நமக்கு கிடைக்கும். எனவே உடற்பயிற்சி செய்வது கடினமாக உணர்பவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் மனநிலையை அமைதியாக்கி, ஒருசில உடல் வளைவுகளை செய்வதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எல்லாவித நோய்களும் வருவதற்கு முன்பாக நம்மை காக்க முடியும்.

சித்த மருத்துவத்தினால் நமக்கு உண்டாகும் பிரச்சனைகளை தடுக்க முடியும். அதை தவிர்த்து ஒருசில பல வியாதிகளுக்கு இது தீர்வாகவும் உண்டு. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பை இதனால் குணப்படுத்த முடியாது. ஆனால் இது வந்த பிறகு சித்தமருத்துவத்தின் மூலமாக எடுத்துக் கொள்ளும் உணவினால் இதன் தாக்கத்தை குறைக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன