“வாதி கம்மிங்” பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி..!

  • by
shilpa shetty dances vaathi coming step for thalapathy vijay

இந்த ஆண்டு தொடக்கம் முதலே விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் “மாஸ்டர்“. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் முடங்கி உள்ளது. இதனால் இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது இன்றுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை, இருந்தாலும் இத்திரைப்படத்தின் பாடல்களை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அப்படி சமீபத்தில் வெளியான “வாதி கம்மிங்” என்ற பாடல் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தது.

மாஸ்டர் வாதி கம்மிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தின் பாடல்கள் பிரபலமடைந்து வரும் சூழ்நிலையில் இதிலிருந்து வெளியான வாதி கம்மி என்ற பாடலுக்கு ஏராளமானோர் டிக் டோக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் இசையை அணிருத் அவர்கள் இயற்றி உள்ளார். அதேபோல் இந்தப் பாடலை “கானா பாலசந்தர்” எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியான ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 35 மில்லியனுக்கும் மேல் இதை யூடியூபில் பார்வையிடுள்ளார்கள்.

மேலும் படிக்க – சூப்பர் ஸ்டாரை போட்டிக்கு அழைத்த சிரஞ்சீவி..!

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் “மிஸ்டர் ரோமியோ” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் “குஷி” என்ற திரைப்படத்தில் “மேக்கோரினா” என்ற பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாடி இருந்தார். இவர் “பிக் பிரதர்” என்ற நிகழ்ச்சியில் பங்குபொற்று வெற்றி அடைந்து மிகப் பிரபலமானவர். அதைத் தவிர்த்து யோகா பயிற்சி, நடன பயிற்சிகளை இணையதளத்தில் அளித்து வருகிறார் மற்றும் சின்னத்திரையில் நடுவராக தனது வாழ்க்கையை கடந்து வருகிறார். சமீபத்தில் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள வாதி கம்மிங் என்ற பாடலுக்கு நடனமாடி அது டிக் டோக் இல் பதிவு செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய்க்கு இணையாக ஆட்டம் ஆடிய பெருமையில் இதை விஜய் டேக் செய்துள்ளார். மும்பையில் தனது கணவருடன் வீட்டில் தவித்து வரும் சில்பா செட்டி அவர்கள் தனது அலுப்பை போக்குவதற்காக இதுபோன்ற செயல்களில் இறங்கி உள்ளார். இதனால் இவருக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள், அதை தவிர்த்து விஜய் ரசிகர்களும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள்

ஷில்பா ஷெட்டி முழு பலத்துடன் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார், அதைத் தவிர்த்து டான்ஸ் வித் மீ என்ற ஹேஷ்டேக் உருவாக்கி உள்ளார். எனவே இவர், நடிகர் விஜய்யை இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுள்ளார் என விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஷில்பா ஷெட்டியின் இந்தப் பதிவிற்கு விஜய் டூயட் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஷில்பா ஷெட்டி அவர்கள் கிட்டத்தட்ட 13 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் இரண்டு படங்களில் நடித்து வருகிறார், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒரு சிலர் ஷில்பா ஷெட்டி மேல் எதிர்ப்புகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க – பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாசின் செயல்..!

இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலம் இது போன்ற பதிவுகளை பதிவிட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஊரடங்கு சமயத்தில் மக்களை மகிழ்ச்சியாக வைப்பதற்கு அனைத்து சினிமா பிரபலங்களும் உதவ வேண்டும். எனவே அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தங்களால் முடிந்த காணொளி பதிவுகளை இணையதளத்தில் அவ்வப்பொழுது பதிவிட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன