சில்கியான கூந்தல் அழகைப் பராமரிக்கும் சிகைக்காய்

  • by

சிகைக்காய்  சிகை எனப்படும் தலை முடியை பாதுகாக்கும் சிகைக்கான காய் என அழைக்கப்படுகின்றது. இது  அக்காலம் முதல் நமது பெரியோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய பண்பாட்டில் சிகைக்காய்க்கு என  தனியிடம் உண்டு. சிகைக்காயிக்கு என ஆயுர்வேதத்தில் தனியிடம் உண்டு. 

சிகைக்காய் ஆசியாவில் சிறந்த ஒன்று:

ஆசியாவிற்கே தனித்துவம் வாய்ந்த குறிப்பாக மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒருச் செடி சிகைக்காய் செடியாகும் இது இயற்கையாக சுத்தப்படுத்தியாக உள்ளது. . அகேசிகான்சின்னா (Acacia concinna) என்னும் தாவரவியற் பெயர்க் கொண்ட இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்ற.

சிகைக்காயை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர் இன்றும் இதன் பயன்பாடு என்பது  உண்டு. இத்தாவரத்திலிருந்து பெறப்படும் காய்களில் இருந்து உருவாக்கப்படும் தூள் சிகையை அலசவும் கழுவவும் பயன்பட்டுவருகிறது. ஆகையால் இதைச் சிகைக்காய்த் தூள் என அழைக்கிறோம்.

மேலும் படிக்க:பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா !

கூந்தலுக்கு பராமரிப்பு:

சிகைக்காய்  தேய்த்து குளிப்பதன் மூலம் முடியின் அமில கார சமநிலையை சீர் செய்கின்றது.  முடி உதிர்தலை தடுத்து பாதுகாக்கின்றது. இது தலையில் உள்ள அழுக்கு, சொரி சிரங்கு,  கொப்பளங்கள் போன்றவற்றை குணமாக்கும். 

இதனை சாப்பிடவும் செய்கின்றனர்.  இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் இது மலத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது என்கின்றனர்.  இருமலை குணப்படுத்துகின்றனர். பல்லில் உள்ள கிருமிகளை அகற்றும் கிருமி நாசினியாகவும் உள்ளது. 

துணிகளுக்கு சோப்பு போடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு துணி துவைக்கவும் இதன்  பயன்படுத்தியுள்ளனர் என்பது முக்கிய குறிப்பாகும். நுரைப்புத் தன்மை கொண்டதாகும். 

மேலும் படிக்க: சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க

சிகைக்காயானது மண்டையை  சுத்தமாக்குகின்றது. சிகைக்கயை  தலை அலச பயன்படுத்தும் பொழுது இது நமக்கு ஆற்றல் வாய்ந்ததாகவுள்ளது. 

சிகைக்காய் உணவு:

சிகைக்காயுடன்,  மிளகு, உப்பு மிளகாய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடுவதன் மூலம்  பித்தம் காமாலை நீங்குகின்றது. 

சிகைக்காயை நன்கு வெய்யிலில் உளர்த்தி தூளாக்கி அதனுடன் சோப் நட் எனப்படும் பூந்திகாயை 8 மணி நேரம் ஊரவைத்து அதனை ஒன்றாக்கி அந்த தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு மாதம் வரை தலைக்கு தேய்த்து குளித்து வரலாம்.  இதனுடன் வெந்தயம், பச்சைப்பயிர் , அரப்பு ஆகியவை சேர்த்துக் குளிக்கும் பொழுது தலையானது ஆரோக்கியம் பொங்கும். 

சிகைக்காயில் வைட்டமின் சத்துக்களான  சி, டி, ஏ, இ, கே போன்றவை அனைத்தும் அடங்கியுள்ளது. இதன் முக்கியத்துவம் பலருக்கும் தெரிவத்தில்லை. நாட்டு மருந்துக் கடையில்  சிகைக்காயனது கிடைகின்றது இதனை பெற்றுக் கொள்ளலாம். 

சிகைக்காயுடன் செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, அரப்பு, பூந்திக்காய், வெட்டி வேர், வெந்தயம், பச்சைப் பயிறு, ரோஜா இதழ், மருதாணி, அரப்பு போன்றவற்றை காயவைத்து அதனைப் பொடி செய்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள உஷ்ணம் குறையும். கூந்தல் உதிர்வு குறையும், பேண், பொடுகு தொல்லை மறையும். கூந்தல் சில்கியாக மாறும்.

மேலும் படிக்க: இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன