இயற்கையற்ற உணவுகளிலிருந்து இயற்கை உணவுக்கு மாறுவதினாள் நமக்கு ஏற்படும் நன்மைகள்..!

Shift To Organic Products To Improve Your Life

உணவுகளில் சிறந்தது நாம் பழங்கால உணவு முறைகளில் பயன்படுத்திவந்த இயற்கை உணவுகள்தான். ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் இயற்கை உணவுகளை படிப்படியாக அழிந்து செயற்கையான உணவுகளை அதிகமாக வருகிறது. இதற்கு முழு காரணம் வெளிநாட்டு முதலாளிகள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான நாட்டிலுள்ள மக்களின் உடலில் பல விதமான நோய்களை உண்டாக்கி மருத்துவத்துறையில் அதிகமான வருமானத்தை சம்பாதிப்பதற்காக இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள்.

விழிப்புணர்வு அவசியம்

நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதாகக் கெடுக்கக்கூடிய அனைத்து உணவுகளும் கடந்த நூற்றாண்டில் உருவானவைதான். இதனால் நாம் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய் என என நம் தாத்தா பாட்டிகள் பார்க்காத ஏகப்பட்ட நோய்கள் இப்போது சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் இயற்கை உணவை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – புளி சாப்பிட்டு வந்தால் வாழ்வில் சலிப்பு போகும்!

ஆர்கானிக் உணவுகள்

இப்போது நாம் வசிக்கும் ஊர்களில் ஆங்காங்கே சில ஆர்கானிக் உணவுகள் கிடைக்கும் கடைகள் தொடங்கி உள்ளார்கள். அங்கு கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விற்கிறார்கள்.

இது போன்ற உணவுகள் மிக எளிதில் கெட்டுப்போகாமல் நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதேபோல் அக்காலங்களில் பயன்படுத்திவந்த பயிறு வகைகளும் இன்றும் நாம் அதிகமாக பயன்படுத்த வேண்டும். இது போன்ற உணவுகளின் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதினால் இதன் விலைகளும் அதிகமாக இருக்கிறது. இதை காரணமாகக் கொண்டு மேலைநாட்டு பொருட்கள் மிக மலிவான விலையில் அதிகமாக இறக்குமதி ஆகிறது. ஆனால் இதனால் உடல் பாதிப்பு அதிகம் என்பதை அறியாத மக்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இதுபோன்ற பொருட்களை வாங்கி மருத்துவமனைகளில் அதிகமான பணத்தை இறைக்கிறார்கள்.

மேலும் படிக்க – நம் உடலில் இயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்..!

ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவுகள்

ஆரம்பத்திலேயே இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் நமது ஆரோக்கியம் மட்டுமல்லாமல் நமது வாரிசுகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இப்போது பிறக்கும் குழந்தைகள் புற்றுநோயுடன் பிறக்கிறது. இது போன்ற வியாதிகளை தடுப்பதற்கு இயற்கையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பொருளின் நிறம் மற்றும் தரம் உயர்த்துவதற்காக அதன்மேல் ஏகப்பட்ட ரசாயனங்களை கலக்கிறார்கள். இதனால் நமது செரிமானம், உடல், குடல், மண்ணீரல் என எல்லாவற்றும் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் தினமும் 1000 முதல் 2000 வரை மருத்துவமனைக்கு செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எனவே இதை தடுப்பதற்கு ஒரே வழி இயற்கை உணவுதான்.

மேலும் படிக்க – வாழைப்பழமும், சக்கரை நோயும்..!

இயற்கை உணவினால் என்ன செய்ய முடியும்

இயற்கை உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன ஆனால் அதன் தேவைகள் நமக்கு குறைவாக இருப்பதினால் அதை வாங்கி பயன்படுவதில்லை. நீங்கள் செல்லும் சூப்பர் மார்க்கெட்டில் கடைசியில் இது போன்ற ஆரோக்கியமான உணவுகள் இருக்கும். ஆனால் நம் கண்ணுக்கு தெரிவதெல்லாம் விளம்பரத்தில் பார்க்கும் பன்னாட்டு நிறுவன உணவுப் பொருட்கள்தான். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து எல்லா கடைகளிலும் கிடைக்கும் இயற்கை தானியங்கள், பயிர்கள் மற்றும் சிவப்பு அரிசி போன்றவர்களை வாங்கி விதவிதமாக சமைத்து சாப்பிடுங்கள்.

இதுபோன்ற உணவுகளை எப்படி சமைக்கலாம் என்ற பல பதிவுகள் எல்லா இணையதள பக்கத்திலும் இருக்கின்றன. எனவே அதை ஆராய்ந்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக இதுபோன்ற இயற்கை உணவுகளை பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன