கொரானாவிலிருந்து வீட்டுப் பெரியோர்களை காத்தல்

  • by

70 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் நான்கு மாதங்கள் வரை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கூடுதலாக, பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பிற குழுக்கள் – அடிப்படை சுகாதார நிலைமைகள் போன்றவை – நீண்ட காலமாக வீட்டிலேயே தங்கியிருப்பதன் மூலமும் மற்றவர்களுடன் குறைந்த அளவு தொடர்புகொள்வதன் மூலமும் தங்களை “சமூக ரீதியாக தூர விலக்க” கேட்கப்படுகின்றன. 

 பெரியவர்களின் தேவைகள்: 

பெரியவர்களுக்கு தேவைப்படும் பழங்கள், உணவு பதார்த்தங்கள் அனைத்தும் அவர்களுக்கு முறையாக செய்து கொடுத்து  அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும். கொரானா தொற்று பெரியவர்களை தாக்கும் ஆனால் அதுவரைக்கும் நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டாம். அவர்களை வீட்டில் இருக்கச்  செய்யுங்கள். பெரியோர்களுக்கு தேவைப்படும் அனைத்தும் கொடுத்து அவர்களுக்கு அன்பைக் கொடுங்கள். 

மேலும் படிக்கவும்:கொரானா குறித்து பரவும் புரளிகள் பயங்கள்!

மனநிலை சிராக்குங்கள்: 

கிராமம் நகரம் எதுவானாலும் பெரியோர்களுக்கு அச்சம் இருக்கும். நமக்கு  கொரானா பாதிப்பு வந்துவிடுமோ என அவ்வளவு தூரம் யோசிக்க விடாதீர்கள். கொரானா குறித்து அவர்கள் சிந்திக்கும் அளவுக்கு நிலைமை வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும். 

இஞ்சி, துளசி டீ  வைத்துக் கொடுங்கள்.   காத்தோட்டாமாக இருக்க அவர்கள் அறை ஜன்னலை திறந்துவிடுங்கள் அவர்கள் அறை சுத்தமாக இருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து விலகி இருக்கின்றீர்கள் என்பது அவர்களுக்கு தெரியாத அளவு விலகியிருங்கள்.  

வீட்டிலுள்ள பெரியவர்கள் இதை செய்யமாட்டேன் என அடம்பிடிப்பார்கள் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். முதுமை அவர்களை பேச வைக்கின்றது. அவர்கள் வெளியில் போக வேண்டும் என்றால் புரியும்படி விலக்கி அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லுங்கள், அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை, உடல் நிலை சரியில்லை என்ற நிலை எதுவும் கொண்டு வரவிடாதீர்கள். 

உணவு, உடை:

சம்மர் என்பதால் அவர்களுக்கு காட்டன் உடை கொடுக்கவும். எளிதில் ஜீரணிக்கும் உணவு  கொடுக்கவும். நாட்டுக் காய்கள் கொடுத்து சாப்பிடச் சொல்லவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பிராயாண பயிற்சி செய்ய வையுங்கள். 

கொரானா குறித்து செய்திகளை பார்ப்பதை நிறுத்தவும். அதனைப் பார்த்து நாம் விழிப்புணர்வு பெறுவதை விடுத்து பயந்துவிடுகின்றோம். மனதளவில் கொரனா குறித்து அச்சமானது நமக்கு அதிகரிக்கும். 

மேலும் படிக்கவும்: சித்த அமைப்பின் மருத்துவ முறைகள் !

பாதுகாப்பு உறுதி செய்யவும்:

அராங்கம் சொல்லும் முறைப்படி நாம் கேட்க வேண்டும் வீட்டில் இருக்கும் முக்கியத்துவத்தை வீட்டுப் பெரியோர்களிடம்  தெரிவிக்கவும். குடும்பத்தோடு பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லிக் கொடுக்கவும். 

கல்லுப்பு, உப்பு வைத்து பல்லுவிலக்குதல் அவசியம் ஆகும். வேப்ப இலையை அரைத்து மாத்திரை அளவு விழுங்க வீட்டுப்  பெரியோர்களுக்கு கொடுக்கவும். பெரியோர்கள் குளிக்கும் தண்ணீரில் கல்லுப்பு சேர்த்து குளிக்க சொல்லுங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். சுக்குமல்லி, கிராம்பு, கொய்யா இலை டீ வைத்து குடிக்க வேண்டும். நன்றாக உறங்கச் சொல்லுங்கள். இந்த தூக்கம் உடலை நோயிலிருந்து நம்மைக் காக்கும். 

துளசி இலை, வேப்பிலை, நொச்சி இலை, கல்லுப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம். உடலில் உள்ள   சளி தொல்லைகளை நீக்கும். அறிவு சார்ந்த கதைகள், விளையாட்டு விளையாடலாம். புத்தக்கம் படிக்க பெரியோர்களுக்கு அமைத்துக் கொடுத்தால்  கொரனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். 

மிளகு, பூண்டு தினமும் இரண்டு சாப்பிட்டு வர உடலுக்கு நோ எதிர்ப்புச் சக்தியானது அதிகரிக்கச் செய்யலாம். தனிமைப்படுத்துவதாக கூறி அவர்களை காயப்படுத்தாதீர்கள் நாளை நாமும் அந்த நிலையை சந்திக்க வேண்டிவரும். அன்பும், பாதுகாப்பும் அவர்களுக்கு உறுதி செய்தால் நாம் சொல்வதை கேட்பார்கள். 

மேலும் படிக்கவும்: தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவர்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன