பொங்கலில் சசிகுமாரின் கெளப்பு கெளப்பு

  • by

சுப்பிரமணியபுரம் படத்தில் தொடங்கி நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன் என ஏராளமான படங்களில் நடித்து வந்த சசிகுமார் சமீபத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னை இளைஞனாகவும், மும்பையில் மிகப்பெரிய போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இந்த படம் பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் இவர் அடுத்தடுத்து இரண்டு படங்கள் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கலுக்கு ரீலிஸ் ஆவதில் தாமதம்:

ராஜவம்சம் மற்றும் எம்ஜிஆர் மகன் என இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளிவருவதாக செய்திகள் வெளியாகின.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினிமுருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் சசிகுமார் மற்றும் டிக்டோக் பிரபலம் மீர்லாயனி, சத்தியராஜ் போன்றவர்கள் நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள செய்தியை வெளியிட்டார்கள் ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் வெளியாகவில்லை.

மேலும் படிக்க – விக்னேஷ் சிவனின் வாழ்க்கை தொடக்கம்..!

ராஜ வம்சம்:

சசிகுமாரின் ராஜ வம்சம் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்றார்கள். இந்த படத்தை புது இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 49 பிரபல கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். சசிகுமார், நிகில் கல்ராணி, தம்பி ராமையா, ரமேஷ்கண்ணா, மனோபாலா, ராதாரவி சதீஷ் என ஏராளமானோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படமும் பொங்கலன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்திற்கு இணையாக எந்த திரைப்படமும் வெளியிடவில்லை. இருந்தாலும் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் ரஜினிகாந்த் திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது, அதேசமயத்தில் பட்டாஸ் திரைப்படம் 50 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் வேறு ஏதாவது திரைப்படங்கள் வந்து இருந்தால் அதன் வசூலில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகிருக்கும். இதை மனதில் கொண்டுதான் எந்த திரைப்படங்களையும் இந்த பண்டிகையின் வெளியிடவில்லை.

மேலும் படிக்க – “கொலவெறி” அனிருத் ரவிச்சந்திரனின் வாழ்க்கை.!

சினிமா என்பது ஒரு மிகப் பெரிய தொழிலாக வளர்ந்து வரும் நிலையில் மக்கள் பொழுதுபோக்கை தவிர்த்து அவர்களின் படத்தில் கிடைக்கும் லாபத்தை பற்றி எண்ணுகிறார்கள். இதனால் நாம் வேறு வழி இல்லாமல் அவர்கள் வெளியிடும் படத்தை மட்டும் தான் அன்றைய தினத்திற்கு பார்க்க முடியும் இதை தவிர்த்து நாம் வேறு எந்தப் படத்தையும் பார்க்க முடியாதவாறு திரைப்படங்களை வெளியிடுகிறார்கள். எனவே இந்த பொங்கல் அன்று நாம் ரஜினிகாந்த் அவர்களின் தர்பார் திரைப்படம் அல்லது தனுஷின் பட்டாஸ் திரைப்படம் மட்டுமே பார்க்க முடியும் என்பது தரமான சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்திற்குரிய விஷயமாகும். இருந்தாலும் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் தரமான படங்கள் வெளியாகியுள்ளது எனவே சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கல் சிறப்பாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன