சசிகுமாரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

  • by
sasikumar volunteered against corona virus, fans praising him

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் அவர்கள் “சுப்பிரமணியபுரம்” படத்தின் மூலமாக இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “ஈசன்” என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார், அதன் பிறகு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார். இதன் மூலமாக ரஜினியுடன் “பேட்டை” தனுஷுடன் “எனை நோக்கி பாயும் தோட்டா”, “சுந்தரபாண்டியன்”, “தாரை தப்பட்டை” என 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சசிகுமார் செயல்

மதுரையில் ஊரடங்கை மீறி சாலைகளில் திரியும் மக்களுக்கு விழிப்புணர்வை அளிக்கும் வகையில் நடிகர் சசிகுமார் அவர்கள் காவல் துறையுடன் இணைந்து சாலைகளில் சுற்றித்திரியும் மக்களை வழி மறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார். இதைத்தவிர்த்து இதனால் ஏற்படும் பிரச்சினைகளினால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக ஒவ்வொருவருக்கும் கூறிவந்தார். இதன் மூலமாக காவல்துறையினர் படும் அவஸ்தைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சிக்கள் போன்ற அனைத்தையும் சசிகுமார் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க – நடிகர் வடிவேலுவின் உருக்கமான பாடல்..!

விழிப்புணர்வு

கொரோனா வைரசினால் ஏற்படும் பாதிப்புகளை இன்னும் ஏராளம் மக்கள் அறியவில்லை, இதனால் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் மக்கள் அலட்சியமாக தங்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு குறிப்பிட்ட நேரம் வரை தான் நாம் வெளியே செல்ல வேண்டும், அதை மீறி செல்பவர்களை இதுபோல் வழிமறித்து அவர்கள் மேல் வழக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து ஒரு சிலருக்கு அறிவுரை மட்டுமே அளித்து திருப்பி அனுப்புகிறார்கள்.

மக்கள் கவனத்திற்கு

கொரோனா வைரஸ் இந்தியாவில் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் நாம் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடிப்பதுதான். எனவே இதை அலட்சியப்படுத்தாமல் மக்கள் அனைவரும் அவரவர் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலத்தில் இருந்தாலும் சரி, இதுபோன்ற சமயத்தில் சுற்றுவதால் உங்களை மிகவும் மோசமான நிலைக்கு  கொண்டு செல்லும். அனைவரும் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும், அதை தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். நீங்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பினாள் உங்களை ஒருமுறைக்கு பலமுறை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

மேலும் படிக்க – முன்னுதாரணமாக திகழ்ந்த நடிகை ரோஜா..!

சசிகுமார் செய்வதைப்போல் சினிமா பிரபலங்கள் முன்வந்து மக்களுக்கு அறிவுரையை வழங்க வேண்டும். ஒரு சிலர் காணொளி மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை பரப்பி வந்தாலும், இது போல் தன் உயிரை பணயம் வைத்து ஒரு சில சமூக சேவகர்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் எல்லோருக்கும், முன்உதாரணமாக இருப்பவர்தான் சசிகுமார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன