2020 இல் சனிபெயர்ச்சி வரபோகுது!

  • by

எல்லோரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்தி வருபவர் தான் சனிபகவான். இவர் ஒருவருக்கு எவ்வளவு துன்பங்களை கொடுக்கிறாரோ அதே அளவிற்கு சந்தோஷத்தையும் கொடுக்க உள்ளவர். நீங்கள் செய்யும் பாவங்களைப் பொறுத்து அதற்கு நிகரான தண்டனைகளையும் சனிபகவான் அவர்களின் காலங்களில் கொடுத்துவிடுவார். சனியின் பார்வை எவரேனும் மீது பட்டுவிட்டால் அவர் ஏழரை ஆண்டுகள் துன்பங்களையும், கஷ்டங்களையும் கடந்து வர வேண்டும். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை நினைத்துப் பார்க்காத அளவிற்கு உயர்வு அடையும். இது எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய ஒன்று. அவரவர் செய்யும் பாவங்கள் அவரவர் வாழும் காலங்களிலேயே தண்டனைகள் அனுபவித்துவிட வேண்டும் என்பதே சனிபகவானை நோக்கம்.

சூரிய பகவானின் மகன் சனி:

சூரியனின் மனைவியான சாயா தேவியின் சக்திகள் குறைவதினால் தான் சிவனிடமிருந்து சக்தியை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சூரியனுக்கு துணையாக உஷா தேவியை உருவாக்கி அவரை சூரியனிடம் விட்டுவிட்டு தவத்திற்கு சென்றாள். இதை அறியாத சூரியபகவான் உஷா தேவியிடம் உறவு மேற்கொண்டு சனி என்ற ஆண் குழந்தையும் தவதி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மேலும் படிக்க – ராமர் பாலம் கற்பனையா அல்லது வரலாற்று உண்மையா?


சிவன் வரம்:

சூரியன் சொல்லும் எந்த பேச்சிற்கும் அடங்காத சனியை சூரியன் வெறுக்கத் தொடங்கினார். இதனால் அவர்களுக்கு இருக்கும் பிள்ளைகளையும் கவனிக்கும் அளவிற்கு சனியை கவனிப்பதில்லை. இதனால் கோபமடைந்த சனி காசிக்கு சென்று சிவபெருமான் அருளைப் பெறுவதற்காக மிகப்பெரிய தவத்தை மேற்கொண்டார். இதைக் கண்ட சிவபெருமான் சனிபகவானின் பக்தியை கண்டு அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உடனே சனி நான் நவகிரகத்தில் மிகச் சிறந்த கிரகமாக இருக்க வேண்டும், சொல்ல வேண்டுமென்றால் உங்களுக்கு அடுத்தபடியாக நான்தான் இருக்க வேண்டும் என்று சிவனிடம் கேட்டுக் கொண்டார். உடனே சிவனும் அந்த வரத்தை அளித்தார்.

இதனால் சனிபகவானுக்கு ஈஸ்வரன் அளித்த வரத்தினாள் இவரை சனீஸ்வரன் என்று அழைக்கத் தொடங்கினார்கள். சனிபகவான் யாரை பார்க்கிறாரோ அவர்களுக்கு ஏழரை ஆண்டுகள் சனி பிடிக்க செய்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் சனி பகவான் மிகவும் நேர்மையானவர் அவருக்கு பொய் சொல்வது மற்றவர்களை ஏமாற்றுவது பெரியவர்களை மதிப்பது என எல்லா காரியங்களையும் மறுத்து வந்தார். எனவே யார் எந்தத் தவறு செய்தாலும் அவர்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்கள் வாழ்நாளில் அனுபவிக்குமாறு சனிபகவான் செய்தார்.

சிவனுக்கு சனி பிடிக்கப் போகின்றது:

சனிபகவானின் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக ஒரு நாள் சிவனுக்கு அவரின் ராசியில் சனி பிடிக்கப் போவதை அறிந்து, அவரிடம் சென்று உங்களுக்கு சனி பிடிக்கப் போகிறது நான் உங்களுக்கான தண்டனை தரப் போகிறேன் என்றார். உடனே சிவன், உன்னை படைத்தவனே நான்தான் என்னை உன்னால் பிடிக்க முடியாது என்றார். உடனே சனி பகவான் உங்களை ஏழரை வருடம் பிடிக்க நான் வரவில்லை குறைந்தது ஏழரை மாதங்கள் இல்லையே ஏழரை நாட்களாவது பிடிப்பதை எனது நேர்மைக்கான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றார். உடனே சிவன் உன்னால் என்னை ஏழரை மணி நேரம் கூட பிடிக்க முடியாது என்று பார்வதி கழுத்திலிருக்கும் ருத்ராட்ச மாலையில் சென்று மறைந்து  கொண்டார்.

மேலும் படிக்க – யோகாவில் இருக்கும் முத்திரைகளை செய்வதினால் நமக்கு கிடைக்கும் பலன்கள்.!

ருத்திராட்சம்:

ருத்ராட்சத்திற்கு ஏகப்பட்ட சக்திகள் உள்ளது அதிலும் பார்வதியின் கழுத்தில் இருப்பதினால் அதில் சக்திகளின் அளவை கணக்கிடவே முடியாது. இதனுள் யாராலும் நுழைய முடியாது என்பதினால் சிவன் அதனுள் மறைந்து கொண்டார். ஏழரை மணி நேரத்திற்குப் பிறகு சிவன் வெளியே வந்து பார்த்தாயா உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாமல் போயிற்று என்றார். உடனே சனிபகவான் இல்லை, நான் செய்த காரியத்தின் மூலமாகதான் ஏழரை மணி நேரம் நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் துன்பங்களுக்கு இடையே ருத்ராட்ச கொட்டையிக் அடைந்து இருந்தீர்கள் என்றார். இதை புரிந்து கொண்ட சிவன் சனி பகவானின் செயலை பாராட்டினார்.

சனி பகவானிடம் அருளை வேண்டி பிரார்த்தனை செய்ய தேஜஸ்ரீ சனிபகவானை தேடி வந்தார் ஆனால் சனி பகவான் கிருஷ்ணரின் மேலுள்ள பக்தியினால் தவத்தில் இருந்தார். இதனால் தேஜஸ்ரீ ஆத்திரமடைந்து சனி பகவானை சபித்தார். உன் பார்வை யார் மேல் படுகிறதோ அவர்களின் வாழ்க்கை அழிந்து விடும் என்ற சாபத்தை சனிபகவான் மேல் தெளித்தார். இதனாலேயே சனிபகவான் யாரையும் நேரடியாக பார்த்ததில்லை அப்படிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கை மிக மோசமானதாக மாறிவிடும்.

ஜனவரி 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இதனால் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பொதுவாக இரண்டரை வருடங்கள் ஒருவரை வாட்டி வதைத்த சனிபகவான் தலை முதல் பாதம் வரை ஏழரை ஆண்டுகளுக்குப்பின் அவர்களின் கஷ்டத்தைப் போக்குவார். அதன்பிறகு அவர்களுக்கு எல்லா செல்வங்களும் மற்றும் வளங்களையும் அளிப்பார் என்பது ஐதீகம்.

2020 சனி பகவான்:

சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை மாதம் பத்தாம் தேதி நடக்கவிருக்கிறது. அதாவது ஜனவரி 24 2020 அன்று அதேபோல் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26, 2020ல் சனி பெயர்ச்சி நடக்கிறது.

மேலும் படிக்க – பகவத் கீதையின் சிறப்புகள் என்ன?

சனி பகவானின் தாக்கம் குறைவாக இருப்பதற்கு நாம் சனி பகவான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை மற்றும் அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலமாக நீங்கள் அனுபவிக்கும் பாவங்களின் தாக்கம் குறைவாகவும் அதே சமயத்தில் நீங்கள் செய்யும் நல்ல காரியங்களின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறைந்து இன்பங்கள் அதிகரிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன