சல்மான் கான் வெளியிட்ட பரபரப்பான செய்தி..!

  • by
salman khan's viral video on corona virus

பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர்தான் சல்மான்கான், இவர் தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் மற்றும் நடிகரான வலம் வருபவர். இவரைப் பற்றிய ஏராளமான எதிர்மறை எண்ணங்கள் மக்களிடையே இருந்தாலும், இவரின் ரசிகர்கள் இவரை ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை. இதைத் தவிர்த்து சல்மான்கானும் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவிகள் மற்றும் ரசிகர்களுக்கு உணவுகளை அளித்து வருகிறார். வட இந்தியாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சல்மான் கான் செய்த செயல் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

பிக்பாஸ் பிரபலம்

தமிழ் பிக்பாஸில் எப்படி நடிகர் கமல்ஹாசன் ஒரு கலக்கு கலக்கி வருகிறாரறே அதேபோல்தான் சல்மான்கான் ஹிந்தி பிக் பாஸை தாங்கிப் பிடிப்பவர். இவர் மூலமாகவே பிக் பாஸ் தொடர் வெற்றி அடைந்தது, இதை தவிர்த்து இவர் “பஜ்ரங்கி பைஜான்”, “தபாங் 2” “சுல்தான்” போன்ற படங்களில் நடித்து தன் புகழையை மேலும் அதிகரித்தார். ஆனால் இவர் மேல் அவ்வப்போது ஏதேனும் வழக்குகள் போடப்பட்டு வந்த வண்ணம் இருக்கும். இதிலிருந்து அவர் நேர்த்தியான முறையில் வெளியேறி மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.

மேலும் படிக்க – முன்னுதாரணமாக திகழ்ந்த நடிகை ரோஜா..!

மக்களின் முட்டாள்தனம்

கொரோனா வைரஸ் நம் நாட்டை பாதிக்காமல் இருப்பதற்காக கிட்டத்தட்ட 90 சதவீத இந்தியர்கள் வீட்டில் தங்கள் பொழுதுபோக்கு அனைத்தையும் இழந்து தனியாக இருக்கிறார்கள். இச்சமயத்தில் ஒரு சில முட்டாள்களின் மூலமாக இந்த வைரஸ் தொற்று எல்லோரையும் பாதிக்கச் செய்யும் என்று கூறியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது கூட அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இதை தவிர்த்து அதை எங்கேயும் கழட்டாமல் தங்கள் தேவைகளை வாங்கி வீட்டிற்கு வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் இதுபோன்ற காரணங்களை சொல்லி உல்லாசமாக வெளியே சுற்றுகிறார்கள், அவர்களை கண்டித்து காணொளி ஒன்றை சல்மான் கான் வெளியிட்டுள்ளார்.

நண்பனுக்கு நிகழ்ந்த சம்பவம்

மும்பையில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் சல்மான்கான் தனது நண்பரை அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுப்பியுள்ளார். அச்சமயத்தில் அவரை மடக்கிய போலீசார்கள், அவரிடம் கேள்விகளை கேட்டுள்ளார். எனவே இதற்கு அவரின் நண்பர் முகமூடியைக் கழற்றிவிட்டு பதிலளித்துள்ளார். இதன் மூலமாக கோபம் அடைந்த காவல்துறையினர் முகமூடி அணியுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகே சல்மான் கானின் நண்பன் முகமூடியை அணிந்து வீடு திரும்பினார். எனவே தன் நண்பன் இதுபோன்ற தவறு செய்திருந்தாலும் அந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று சல்மான் கான் கூறியுள்ளார். முகமூடியை இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த காணொளியில் கூறியுள்ளார்.

சேவை செய்பவர்கள்

மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்கள், எனவே அவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அதை தவிர்த்து அவர்களுக்கு இன்னல்கள் கொடுக்காமல் சரியான முறையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும், அதை தவிர்த்து மருத்துவ பரிசோதனைகளுக்கும் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

கோபமடைந்த சல்மான் கான்

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அங்கு சுற்றி வாழ்ந்த மக்கள் கல்கள் மூலமாக அடித்துத் துரத்தினார்கள். இதை சல்மான்கான் மிக மோசமான முறையில் கண்டித்துள்ளார். மக்களின் நலனுக்காக வேலைகளை செய்பவர்களை இதுபோல் இழிவுபடுத்துபவர்கள் மக்கள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என சல்மான்கான் சாடியுள்ளார்.

மேலும் படிக்க – சாயிஷா ஆர்யாவின் சமூக வலைதள கொண்டாட்டம்..!

பியார் கரூன்

நடிகர் சல்மான் கான் அவர்களின் ரசிகரை ஊக்குவிக்கும் வகையில் கொரோனாவை பற்றிய ஒரு பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று யூ டியூப் மூலமாக வெளியிட முடிவு செய்துள்ளார். அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படுபவர்கள் மற்றும் வேலை இல்லாமல் தவிப்பவர்கள் என எல்லோருக்கும் உதவும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் அவர்கள் ரசிகர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் இந்த பாடல் இருக்கும் என கூறியுள்ளார். 

எனவே இன்றைய தினம் இந்தப்பாடல் அவரின் யூடியூப் பக்கத்தில் வெளியிட உள்ளார். ஒவ்வொரு நடிகரும் இது போல் ஏதாவது ஒரு செயலை செய்து மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அதேபோல் மக்கள் செய்யும் தவறுகளை கண்டித்து அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அதை சரியாக செய்து வரும் சல்மான்கான், தன் மேல் உள்ள எதிர்மறை எண்ணங்களை வெகுவாக குறைத்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன